பொள்ளாச்சி, ஈரோடு, மயிலாப்பூரில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!
பொள்ளாச்சி: தந்தை பெரியார் நினைவு நாளான டிச-24 அன்று ஜாதி தீண்டாமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தெருமுனைக் பரப்புரைக் கூட்டங்கள் பொள்ளாச்சி ஆனைமலை வேட்டைக்காரன் புதூர் பகுதியில் வே.வெள்ளிங்கிரி தலைமையில் நடைபெற்றது.
பாடகர் கண்ணையன், வழக்கறிஞர் சேதுபதி (தமிழ்நாடு தன்னுரிமை மீட்பு இயக்கம்), தமிழ் குமரன் (ஜெய் பீம் அறக்கட்டளை), பிரபா (மே 17 இயக்கம்), பிரபாகரன் (திராவிட இயக்க தமிழர் பேரவை), வழக்கறிஞர் ரிசி (தமிழ்ப்புலிகள் கட்சி), பொறியாளர் பரமசிவம், (திக), ராஜ்குமார் (திமுக இலக்கிய அணி), முத்தமிழன் (மக்கள் விடுதலை முன்ணனி), சபரிகிரி (தமிழ்நாடு மாணவர் கழகம்) மற்றும் கழகத் தோழர்கள் ஆனந்த், அரிதாஸ், நடராஜ் மணி தோழமை அமைப்புத் தோழர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு: வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் 21.12.2025 ஞாயிறு மாலை 6 மணி அளவில் அம்மாப்பேட்டை ஒன்றியம் குருவரெட்டியூர் பகுதியில் “மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்” என்கின்ற தலைப்பில் டிசம்பர்-29 கோவையில் நடைபெறுகின்ற தீண்டாமைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் விளக்கப் பரப்புரைக் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நாத்திக ஜோதி(வடக்கு மாவட்ட தலைவர்) தலைமையேற்க, ரமேஷ் (நம்பியூர் ஒன்றிய செயலாளர்), ஆசிரியர் சுப்பிரமணியம் (பகுத்தறிவாளர் கழகம்), தைரியமணி (புஇமு) ஆகியோர் சிற்றுரையாற்றிட, போராட்டத்தின் நோக்கத்தினை விளக்கி இராம. இளங்கோவன் (வெளியீட்டு செயலாளர்) சிறப்புரையாற்றினார். இராமன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
கூட்டத்தில் பெரியார், அம்பேத்கர் மற்றும் கழகத்தின் செயல்பாடுகள், டிசம்பர்-29 நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு தலைவர் விடுத்த அறைகூவல் ஆகிய வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டன. தோழர்களுக்கான இரவு உணவு மற்றும் கூட்டத்திற்க்கான ஏற்பாடுகளையும் குருவரெட்டியூர் பகுதி தோழர்கள் ஏற்பாடு செய்தனர். செல்வகுமார் (மாவட்ட செயலாளர்), நிவாஸ், அருளானந்தம், செகநாதன், ஈஸ்வரமூர்த்தி, நடராஜ், மயில்சாமி, ராஜசேகர், துரை, சின்னத்தம்பி, அறிவரசன், அறிவுக்கனல் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.
மயிலாப்பூர்: “மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” விளக்கப்பிரச்சாரக் கூட்டம், டிசம்பர்-10, மாலை 6 மணிக்கு சென்னை மந்தைவெளி செயின்ட் மேரிஸ் சாலையில், சி. பிரவீன் தலைமையில் நடைபெற்றது. இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), வீரமணி, பேரன்பு குழுவினரின் சமூக அரசியல் நையாண்டி நிகழ்ச்சியும், பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
“குடிதேசிய கோமாளிகள், ஒவ்வொரு ஜாதியையும் திருப்திப்படுத்த நடத்தும் கேளிக்கை மாநாடுகளைப்” பற்றியும், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர் சிறப்புரையாற்றினார். “ஜாதி அமைப்பின்மீது திராவிடர் இயக்கம் தொடுத்த தாக்குதலால் நிகழ்ந்த மாற்றங்கள்” குறித்து உமாபதி (மாவட்டச் செயலாளர்) கருத்துரையாற்றினார். வழக்கறிஞர் திருமூர்த்தி, இரா. உமாபதியின் கோரிக்கையை ஏற்று, ஜாதிய திருமண வரன் விளம்பரங்களைத் தடைசெய்ய வழக்கு தொடுப்பதாக வாக்குறுதியளித்தார்.
“மண்ணும் பொண்ணும் ஏன் ஒன்றல்ல” என்பதை விளக்கியும், “குழந்தைகள் மீது பெற்றோர் திணிக்கும் சடங்குகளைத் தடுக்க சட்டமியற்ற வேண்டிய அவசியம்” குறித்தும் கழகத் தோழர் இரண்யா உரையாற்றினார். “ஒடுக்கப்பட்டவர்களை அடியாட்களாக பயன்படுத்திக் கொள்ளும் மதவெறி” குறித்து திஇதபே தென்காசி மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் ரவுத்திரா உரையாற்றினார்.
ம.கி.எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), இராவணன் (மாவட்டத் துணைச்செயலாளர்), ப.அருண் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), மயிலை பகுதித் தோழர்கள் மனோகர், சிவா, முழக்கம் உமாபதி, குமார் தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் இளவரசன், சு. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), சே. ராஜேஷ் (பகுதிச் செயலாளர்), த.நா. சூர்யா (பகுதி அமைப்பாளர்), தேன்மொழி (IT WING), ப்ரவீன் aks, பாரி சிவா, அஸ்வின், பார்த்திபன், ஜெயந்தி, ராஜன், சிகாமணி, மனோஜ், சுகந்தன், அசோக், வீரமுத்து உள்ளிட்ட கழகத் தோழர்கள் பலர் பங்கேற்றனர்.
சென்னையில் நடைபெற்ற அனைத்து ஜாதி எதிர்ப்பு பரப்புரைகளையும் தோழர் ஹரி காணொலியாக எடுத்து, அருவி வலையொலியில் பதிவுசெய்துள்ளார். அனைத்து காணொலிகளையும் பல ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். பல காணொலிகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
பெரியார் முழக்கம் இதழ் 01012026
