தோழர் அஞ்சலையின் முதலாமாண்டு நினைவேந்தல்!
வடசென்னை கழகத் தோழர் அருள்தாஸின் தாயார் அஞ்சலை (என்கிற) அன்னை மரி முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு டிச-11, 2025 மாலை 6 மணிக்கு கே.பி.பார்க் இல்லத்தில் நடைபெற்றது. அருள்தாஸ் புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு 10 சந்தாக்களை வழங்கினார். நிகழ்வில், இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர் ), மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, மற்றும் ராஜன், தினகரன், விஜயன், அசோக் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 18122025
