பெரியார் முழக்கத்திற்கு வளர்ச்சி நிதி!

கழகத் தோழர் இரண்யா ரூ.2000 பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக முழக்க வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார்.

கழகத் தோழர்கள் ரம்யா – பிரகாசு இணையரின் மகள் சிறகியின் முதலாவது பிறந்தநாள் விழா கழகத் தலைமை அலுவலகத்தில் 02.01.2026 அன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியின்போது, புரட்சிப் பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ.3,000-அய், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதியிடம் வழங்கினர்.

தோழர் இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்) அவர்கள் ஈரோடு தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் 100 முழக்கத்துக்கான சந்தா தொகையை ரூ.30,00 வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார்.

கழகத் தோழர் கனி-இலக்கியா இணையர்கள்  50 பெரியார் முழக்கம் சந்தா மற்றும் தொகை ரூ.15000அய் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடம் ஒப்படைத்தார்.

 நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (- ஆசிரியர்).

பெரியார் முழக்கம் இதழ் 08012026

You may also like...