குடியுரிமையை பறிக்கும் கூட்டுச்சதி எஸ்.அய்.ஆர்.!
விசிக சார்பில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு எஸ்.அய்.ஆர் (S.I.R) குடியுரிமை பறிக்கும் கூட்டுச்சதி விளக்கத் தெருமுனைக் கூட்டம் டிச-7, 2025 அன்று மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் ரூதர்புரம்.அ சுரேசு ( 125 வட்டச் செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) எஸ்.அய்.ஆர் குறித்தும் சனாதன எதிர்ப்பு களத்தில் தமிழ்நாடு எப்படி பயணிக்கிறது என்பது பற்றியும் கருத்துரையாற்றினார். யூதர் சு.கார்த்திக் (மண்டலச் செயலாளர்), வழக்கறிஞர் பி.சாரநாத் (மாவட்டச் செயலாளர்) மற்றும் பல்வேறு விசிக நிர்வாகிகள் உரையாற்றினார்கள். கழகத் தோழர்கள் குமார், பிரசாந்த் (முழக்கம் செய்தியாளர்) மற்றும் அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 08012026
