‘பராசக்தி’ படக்குழுவைப் பாராட்டுவோம்!

“இந்தித் திணிப்பு எதிர்ப்பை மக்களிடம் கொண்டு செல்வதில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது பராசக்தி.
கேன்பரே (ஆஸ்திரேலியா) நகரில் படத்தைப் பார்த்தபோது பொதுநிலையில் உள்ளவர்கள் அனைவரும் படத்தைப் பாராட்டினார்கள். இது படத்துக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி.
படத்தின் இறுதியில் இருமொழிக் கொள்கையை அண்ணா அறிவிக்கும் காட்சி உணர்ச்சிமயமானது, படத்தின் திசை வழியை தெளிவாக உணர்த்திவிட்டது.
தெலுங்கை தாய்மொழியாக் கொண்ட கதாநாயகி இந்திக்கு எதிராக தாய்மொழியின் தேவையைப் பேசுவதோடு போராட்டக்களத்திலும் நிற்கிறார். சௌராஷ்ட்ரா மொழி பேசும் இளைஞர் இந்திக்காக உயிர் துறக்கிறார்.
திராவிடர் இயக்கம் தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்பு ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் மேற்கு வங்கத்திலும் தீயாகப் பற்றியதை படம் உணர்வோடு பேசுகிறது.
மும்மொழித் திட்டம், நவோதயா பள்ளி என்று தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க நினைக்கும் சங்கிகள் இனி வாய்திறக்க முடியாத சம்மட்டி அடியை கொடுத்திருக்கிறது பராசக்தி.
காலத்திற்குத் தேவையான ஒரு அரசியல் கருத்தை மிகச் சிறந்த திரைமொழியில் உணர்வுகளோடு மக்கள் முன் சமர்ப்பித்த படக்குழுவினரை மனதாரப் பாராட்ட வேண்டும்.”
– “விடுதலை இராசேந்திரன்,”
பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.
10.01.2026
பெரியார் முழக்கம் இதழ் 15012026

You may also like...