பொள்ளாச்சி, மேட்டூரில் ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி: உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய் எனும் முழக்கத்தோடு 11.12.25 அன்று மாலை பொள்ளாச்சி திருவள்ளுவர் சிலை அருகில் சனநாயகக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வே.வெள்ளிங்கிரி (திவிக) தலைமையில் நடைபெற்றது. தமிழ்க்குமரன் (ஜெய் பீம் பொதுநல அறக்கட்டளை) தொடக்க உரையாற்றினார். கோபாலகிருஷ்ணன் (தமிழ்ப்புலிகள் கட்சி), மாரிமுத்து (தி.க.), ராஜ்குமார் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), க.மாரிமுத்து (மக்கள் விடுதலை முன்னணி), மணிமாறன் (திமுக), மாறன் (மக்கள் அதிகார கழகம்), முகமது யாசின் (எஸ்.டி.பி.அய்.), மனோகரன் (சிபிஎம்), பிரபாகரன் (மே 17 இயக்கம்), வழக்கறிஞர்கள் சேதுபதி (தமிழ்நாடு தன்னுரிமை இயக்கம்), சூரியகுமார் (நீலம் பண்பாட்டு மையம்), மதி.அம்பேத்கர் (விசிக) ஆகியோர் கண்டனவுரையாற்றினார்கள்.
மேட்டூரில் கண்டனப் பொதுக்கூட்டம்!
மேட்டூர்: மேட்டூர் நகர கழகத்தின் சார்பாக மதுரை திருப்பரங்குன்ற உச்சி பிள்ளையார் கோவில் தீப வழக்கில் தமிழ்நாட்டில் பதட்டத்தை உண்டாக்க ஒருவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து கண்டனப் பொதுக்கூட்டம் டிச-13,2025 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில் மேட்டூர் சதுரங்காடியில் செ. மார்டின் (மேட்டூர் நகர தலைவர்) தலைமையில் நடைப்பெற்றது. சி. கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்) முன்னிலை வகித்தார். பாடகர் கோவன் பங்கேற்ற ம.க.இ.க இசைக்குழுவின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சி. குமரப்பா (மேட்டூர் நகர செயலாளர்) வரவேற்புரையாற்றினார். காவை ஈஸ்வரன் (கழகத் தலைமைக் குழு உறுப்பினர்), பிரபாகரன் (சேலம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
U2Brutus மைனர், பார்ப்பன அடிமையாக திகழும் சீமான் பாசிசம்தான் எங்களுக்கு முதல் எதிரி என சொல்லித் திரியும் அரசியலை திரைப்படமாக நினைத்து வசனங்களாக பேசியும் தமிழ்நாட்டில் சமுகநீதிக்கு பிரச்சனை வருகின்ற பொழுது தலைமறைவாகும் தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அவர்களை பற்றியும் அவர்களின் நோக்கங்கள் இளைஞர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்து, நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை கண்டித்தும், பார்ப்பனர்களை தவிர அனைவரும் சமம் எனக் கூறி கண்டன உரையாற்றினர்.
*TRIBES கரிகாலன், பாஜக மற்றும் இந்து அமைப்பினர் தமிழ்நாட்டில் நடத்திய ஜாதி, மத பிரச்சனைகள் நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து சேகரித்த புகைப்படங்களை காட்டி அவர்களின் நோக்கங்களை ஆதாரபூர்வமாக விளக்கியும் பா.ஜ.க, இந்து அமைப்பினர் இனி வரும் காலங்களில் நிகழ்த்த நினைக்கும் பிரச்சனைகள் பற்றியும், இவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் பார்ப்பன நீதிபதிகளான ஜி.ஆர் சுவாமிநாதன் போன்றோரைக் கண்டித்தும், பார்ப்பன கடப்பாரையால் அரசியலமைப்புச் சட்டத்தை இடிக்க நினைப்பதை நாம் தடுத்து நிறுத்தி அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி கண்டன உரையாற்றினார்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்ய துடித்த கயவர்களை சட்டக் கரங்களைக் கொண்டு அடக்கிய தமிழ்நாடு அரசை பாராட்டியும், நீதித்துறைக்கு பொருத்தம் இல்லாமல் மாரியம்மன் கோவில் பூசாரிபோல் நெற்றியில் பட்டையும், கைகளில் கயிறுகளைக் கட்டித்திரியும் சட்டத்திற்கு பொருந்தாத ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி விலகிவிட வேண்டும் அப்படி விலகுகிற அளவிற்கு அவர் மானம், மரியாதை உள்ளவர் இல்லை அவரை நீக்குவதற்கான முயற்சியை நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தை கொடுத்திருக்கிறார்கள். அவர் நீக்கப்படுகிறாரோ இல்லையோ இதைப் பற்றி நாடாளுமன்றம் விவாதிக்கும்; வாரலாறு பேசும்; எனக்கூறி கண்டன உரையை நிறைவு செய்தார். மீ. அம்ஜத்கான் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டக் கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். 100-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 18122025

You may also like...