சட்ட எரிப்பு மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!
1957 நவம்பர் 26 அன்று, தந்தை பெரியாரின் கட்டளைப்படி, 10,000-க்கும் மேற்பட்ட கருப்புச் சட்டைத் தொண்டர்கள் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளை எரித்தனர்! 3,000 பேர் கைது செய்யப்பட்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். இதில் 18 க்கும் மேற்பட்டோர் சிறையிலும் சிறைக்கு வெளியேயும் இறந்தனர்!
சுயமரியாதையை மீட்டெடுக்கவும், ஜாதியை ஒழிக்கவும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு யாழ். வெள்ளிங்கிரி தலைமையில் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பாக நடைபெற்றது.
பொறியாளர் பரமசிவம் (தி.க.), சண்முகவேல் பிரபாகரன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), மணிமாறன் தென்றல் (திமுக கோவை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்), வழக்குரைஞர் சேதுபதி (தமிழர் தன்னுரிமை மீட்பு இயக்கம்), கா.மாரிமுத்து (மக்கள் விடுதலை முன்னணி), தமிழ் பிரபாகரன் (மே 17 இயக்கம்), ம.கோ.சபரிகிரி (தமிழ்நாடு மாணவர் கழகம்) கலந்துகொண்டு சட்ட எரிப்புப் போராட்ட நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 25122025
