தோழர் லலிதா நினைவுநாளையொட்டி ஏழை – எளியோருக்கு உணவு!

சென்னை கழகத் தோழர் புருஷோத்தமன் இணையர் லலிதாவின் நினைவு நாளையொட்டி, டிச-4, 2025, அவருடைய நந்தனம் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), கு. அன்பு தனசேகர் (தலைமைக்குழு உறுப்பினர்), இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, இராவணன் (மாவட்ட துணைச்செயலாளர் ), ப.அருண் ( மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), மயிலாப்பூர் பகுதித் தோழர்கள் மனோகர், சிவா, சு. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), சே. ராஜேஷ் (பகுதிச் செயலாளர்), த.நா. சூர்யா (பகுதி அமைப்பாளர்), தோழர்கள் சைதை சிவா, தினகரன், இரண்யா, குறளரசி உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். புருஷோத்தமனின் மகனும் திரைப்பட இயக்குநருமான அருண் பிரபு, பேத்தி அனுகீர்த்தி அனைவரையும் வரவேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 08012026

You may also like...