வடசென்னையில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!
“மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” முழுநாள் பிரச்சாரக் கூட்டங்கள், டிசம்பர்-15,2025 முழுநாள் ஜாதி எதிர்ப்பு பரப்புரை
வடசென்னை திருவொற்றியூர் அஜக்ஸ், புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ, பழைய வண்ணாரப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோவில் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
தோழர்கள் வடசென்னை மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. (சென்னை மாவட்டச் செயலாளர்) இரா. உமாபதி ஒருங்கிணைத்தார்.
தோழர்கள் உமாபதி – வீரமணிதாசன் – லோகநாதன் குழுவினரின் சமூக அரசியல் நையாண்டி நிகழ்ச்சி சிறுவர் சிறுமியரையும் கவர்ந்திழுத்தது. “சமஸ்கிருத ஆதிக்கம்” குறித்து துரை தலைமையுரையாற்றினார்.
“திராவிடம்தான் தமிழ் தேசியம்” என்பதை வலியுறுத்தி தொழிலாளர் சீரமைப்பு இயக்கத் தோழர் ம.சேகர் உரையாற்றினார். “பாஜகவின் போலி ஆன்மீக வேடத்தை” விசிக மண்டலத் துணைச்செயலாளர் நிலமேலவளவன் தோலுரித்துக் காட்டினார்.
“குடும்பமும் சடங்குகளும் பழக்க வழக்கங்களும் ஜாதியை பாதுகாக்கின்றன” என்பதை விளக்கி கழகத்தோழர்- வழக்கறிஞர் இரண்யா கருத்துரையாற்றினார். “அம்பேத்கரை உள்வாங்கும் சங் அமைப்புகளால், பெரியாரை ஜீரணிக்க முடியவில்லை” என்றார் சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்).
“பெரியார் தலித் விரோதியல்ல; தலித்திய போராளி” என்று கழகத் தோழர் தினகரன் நிறுவினார். “வீட்டுக்குள்ளேயும் ஜாதியை விட்டொழிக்க வேண்டும்” என்பதை பிரசாந்த் (முழக்கம் செய்தியாளர்) எடுத்துரைத்தார்.
“பெரியார் காலத்து ஜி.ஆர். சுவாமிநாதன்களை “ம. கி. எட்வின் பிரபாகரன் (தென்சென்னை மாவட்ட அமைப்பாளர்) அம்பலப்படுத்தினார். “சனாதன பாரதி எப்படி ஜாதி ஒழிப்புப் போராளி ஆவார்? என கழகத் தோழர் தேன்மொழி (IT WING) வினவினார். “பார்ப்பனர்களின் உரிமைப் பறிப்புகளைப்” பற்றி திமுக இளம் பேச்சாளர் கோகுல் குயிலன் உரையாற்றினார். இறுதியாக சிறப்புரையாற்றிய ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி, ஆர்எஸ்எஸ் வலைப்பின்னலை படம்பிடித்துக் காட்டினார். கழக வெளியீடுகள் ரூ. 1,430க்கு விற்பனையாகின.
பெரிய பாளையத்தம்மன் கோவில் திருவிழா பாடல்களை பிரச்சாரம் முடியும் வரை நிறுத்தி வைத்துவிட்டு பக்தர்களும், அவர்களின் குடும்பங்களுடன் வீரமணி-உமாபதி ஆகியோரின் பகுத்தறிவு அரசியல் நையாண்டி நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
Dravidian stock பதிப்பகத் தோழர்கள் கவுதம் ஷாம், லக்ஷ்மி, ப.அருண் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), தோழர்கள் ராஜன், அருள்தாஸ், நாகேந்திரன், பாண்டியன், சு. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), த.நா. சூர்யா (பகுதி அமைப்பாளர்), மயிலை குமார், அசோக், கனிகா செல்வன், வீரா, குடிஅரசு (மாணவர் கழகம்) உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 25122025
