சிற்றுண்டி கடைத் திறப்பு விழா!

கழக ஆதரவாளரான தோழர் ரஞ்சித் அவர்களின் சிற்றுண்டி கடை (SNACKIFY), இராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிலையம் அருகில் டிசம்பர்-14, 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் ப. அருண் (இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் கடை திறப்பு விழா நடைபெற்றது.
இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) சிற்றுண்டி கடையைத் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக ஆர்.என்.துரை (திமுக தென்சென்னை மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர்) கலந்து கொண்டார். திருவல்லிக்கேணி பகுதிக் கழகத் தோழர்கள் மற்றும் ரஞ்சித் குடும்பத்தினர், நண்பர்கள் உடனிருந்தனர். புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.1000 மாவட்டச் செயலாளரிடம் வழங்கினார்.
பெரியார் முழக்கம் இதழ் 18122025

You may also like...