களப்போராளிகளை நினைவுகூர்ந்து பொதுக்கூட்டம்!

பெரியாரின் 52வது நினைவுநாளில் (24/12/25), கழகப் பணியில் உயிர்நீத்த தோழர்கள் கண்ணன் – குமாரின் 20-ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம், சென்னை ராயப்பேட்டை வெங்கடாசலம் தெருவில், மாலை 6 மணியளவில் சு. பிரகாஷ் தலைமையில், தோழர்கள் ப. கணேசன், ரா. குட்டி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இரா. உமாபதி – வீரமணி – திராவிட மகிழன் குழுவினரின் பாடல்களும், சமூக அரசியல் நையாண்டி நிகழ்ச்சியும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. 60 பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

தபசி குமரன் (கழக தலைமை நிலையச் செயலாளர்), கு. அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்), ரூதர் கார்த்திக் (விசிக தென்சென்னை மண்டலச் செயலாளர்), கழகத் தோழர் அறிவுமதி ஆகியோர் கருத்துரையாற்றினர். கருத்துரையாற்றிய ரூதர் கார்த்திக் அவர்களுக்கு கழகத் தோழரும், கண்ணன் குமார் நண்பரும், அவர்களது விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்த வீரமுத்து, கழக வெளியீடுகளை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் கண்ணன்-குமார் நினைவு நாள் சுவரொட்டிக்கான பணத்தை வழங்குவார்.

மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, இராவணன் (மாவட்ட துணைச்செயலாளர்), ஜெயபிரகாஷ் (இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்), பேரன்பு (தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர்), இளவரசன் (மாணவர் கழக அமைப்பாளர்), அருண் கோமதி (தாம்பரம் நகர அமைப்பாளர்), சே. ராஜேஷ் (பகுதிச் செயலாளர்), சு. முனுசாமி, இரண்யா, மயிலை பகுதித் தோழர்கள் மனோகர், முழுக்கம் உமாபதி, சிவா, ஆ. தமிழ்ச்செல்வன், முழக்கம் செய்தியாளர் பிரசாந்த் உள்ளிட்ட பல தோழர்களும் பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர். ப. அருண் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), த.நா. சூர்யா (பகுதி அமைப்பாளர்), குமார், வீரமுத்து ஆகியோர் மேடை வடிவமைப்பு பணிகளை செய்தனர். ரூ.1,055க்கு கழக வெளியீடுகள் விற்பனையானது குறிப்பிடதக்கது.
பெரியார் முழக்கம் இதழ் 01012026

You may also like...