ஈரோட்டில் கழகத் தோழர்கள் உடல் உறுப்புதானம்

ஈரோடு தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் 24.12.2025 அன்று ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இறப்புக்குப் பின் தங்களது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் தங்களுடைய உடல்களை முறைப்படி உடல் தானம் செய்தனர்.
இரத்தினசாமி, சண்முகப்பிரியன், சென்னிமலை செல்வராசு, திருமுருகன், மரவப்பாளையம் குமார், கோபிநாத், நல்லதம்பி, சி.எம். நகர் பிரபு, சுரேஷ், ராசண்ணா, மீசை முருகேஷ், கண.குறிஞ்சி இசைக்கதிர் ஆகிய 13 தோழர்கள் சட்ட முறைப்படி உடல் தானம் கொடுக்க முன்வந்துள்ளனர்.

பெரியார் முழக்கம் இதழ் 01012026

You may also like...