கழகத் தோழர் காவை.இளவரசன் அவர்களின் தாயார் மறைவுற்றார்!

கழகத் தோழர் காவை. இளவரசன் அவர்களின் தாயர் சரசுவதி உடல் நலக்குறைவால் 17.12.2025 மாலை 4.00 மணியளவில் மறைந்தார். அவர்களின் இறுதி நிகழ்வு 18.12.2025 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் காவலாண்டியூர் இளவரசன் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு இரங்கல் தெரிவித்தார். கழக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் மறைந்த சரஸ்வதி அம்மாள் உடலை சுடுகாடு வரை சுமந்து சென்றனர். இதில் கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் மாவட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 01012026

You may also like...