மதவெறிக் காடாகிறதா ஒடிசா?
ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் உள்ள பர்ஜாங் கிராமத்தில், ஜனவரி 4-ஆம் தேதி கிறிஸ்தவ பாதிரியார் பிபின் பிஹாரி நாயக்கை தாக்கி, அவர் வாயில் மாட்டுச் சாணத்தை திணித்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்லச்சொல்லி வற்புறுத்தியுள்ளது பஜ்ரங் தள் அமைப்பு. அவரை வலுக்கட்டாயமாக திலகம் அணியச் செய்ததுடன், செருப்பு மாலையிட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். இந்துத்துவா கும்பலால் பாதிரியார் கொடூரமாக தாக்கப்பட்டு, பொதுவெளியில் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு 15 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், இதுவரை அந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. பாரதிய ஜனதா கட்சி ஒடிசாவில் ஆட்சி அமைத்த நாள்முதல் இத்தகைய சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் மாடுகளை ஏற்றிச் சென்றதற்காக ஒரு முஸ்லிம் நபர் பசு பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். மயூர்ஞ்ச் மாவட்டத்தில் மற்றொரு முஸ்லிம் இளைஞர் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மல்கங்கிரி மாவட்டம் கோட்டமத்தேரு கிராமத்தில் தேவாலயத்திலிருந்து திரும்பிய கிறிஸ்தவர்கள்...
