இங்கர்சால் மறைவு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் அவர்களின் மகன் “இங்கர்சால்” 17.01.26 சனிக்கிழமை அதிகாலை மாரடைப்பால் முடிவெய்தினார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை 4 மணி அளவில் மேட்டுப்பாளையம் சென்டயூரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று “இங்கர்சால்” உடலுக்கு புகழ்வணக்கம் செலுத்தி, நினைவேந்தல் உரையாற்றி இரங்கல் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் எஸ்.எம்.எஸ் சிக்பால் (ம.தி.மு.க), சந்திரசேகர் (த.பெ.தி.க), அஷ்ரப் அலி (தி.மு.க), வேலுச்சாமி (தி.க), கோபால் (பா.ஜ.க.), அருள்வடிவு (மேட்டுப்பாளையம் நகர மன்ற துணைத் தலைவர்), முனுசாமி (தி.மு.க தெற்கு நகரச் செயலாளர்) ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.

துரைசாமி (கழகப் பொருளாளர்), ரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்), பன்னீர் செல்வம்(கோவை மாவட்டச் செயலாளர்), நிர்மல்குமார்( கோவை மாநகரத் தலைவர்), அமுல்ராஜ் (மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர்),
அய்யப்பன் (திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர்), முத்து (திருப்பூர் மாநகர அமைப்பாளர்), சண்முகம் (பல்லடம் ஒன்றிய அமைப்பாளர்), திருப்பூர் இனியன், ராமசாமி (திருப்பூர் தெற்கு பகுதி அமைப்பாளர்), தமிழ்ச்செல்வி, இசைமதி, ராஜலட்சுமி ஆகிய கழத் தோழர்கள் பங்கேற்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா மற்றும் மேட்டுப்பாளையம் பகுதி பொறுப்பாளர்களும் தோழர் இங்கர்சால் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 22012026

You may also like...