பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஏரியை புனரமைத்து மேட்டூர் உபரி நீரை தேக்கி, சுற்றுலாத்தளமாக்க வேண்டி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை அப்பகுதி விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி, ஏரியை புரைமைத்து முகப்பில் சோழர்கள் சிலையை நிறுவ வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்நாடு ஏரி, இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பில் 05.01.2025 திங்கள் காலை 10.00 மணியளவில் பனமரத்துப்பட்டி ஏரி அருகில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் தோழர் டேவிட் கலந்து கொண்டு போராட்டத்தை ஆதரித்து கண்டன உரை நிகழ்த்தினார்.
பெரியார் முழக்கம் இதழ் 22012026

You may also like...