சென்னை, கோவை, சேலத்தில் “வெனிசுலா ஆதரவுப் போராட்டம்”
சென்னையில் வெனிசுலாவை அடிமையாக்கும் அமெரிக்காவின் போர் வெறியை முறியடிப்போம் என்ற முழக்கத்துடன் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் 10.01.26 அன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) உரையாற்றினார். வேழவேந்தன் (மாவட்டத் தலைவர்) மற்றும் கழகத் தோழர் அசோக் ஆகியோர் பங்கேற்றனர்.
கோவையில் மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்காவே மதுரோவை விடுதலை செய்,வெனிசுலாவிலிருந்து இராணுவத்தை வெளியேற்று என்ற முழக்கத்துடன் மக்கள் அதிகாரம், சிபிஎம்எல் ரெட் ஸ்டார், மக்கள் விடுதலை முன்னணி ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் நிர்மல் (கோவை மாநகரச் செயலாளர்) உரையாற்றினார். தோழர்கள் வெங்கட், தரணி, அறிவுக்கனல் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
சேலத்தில், வெனிசுலா இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைக் கொள்ளையடிக்க துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிராக ஒன்று திரண்டு போராட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஆகியோர் கடத்தலை கண்டித்தும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 12/1/2026 காலை 10 மணி அளவில் சேலம் கோட்டை மைதானத்தில் இடதுசாரி கூட்டு இயக்கம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பாக இரா.ஆனந்தி (சேலம் மாநகரச் செயலாளர்) கலந்து கொண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆதிக்க அரசியலைக் கண்டித்தும் கண்டனவுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் இதழ் 22012026
