பெரியார் தொழிற்சங்கப் பேரவை பெயர்ப்பலகை திறப்பு!
கருஞ்சட்டைப் படைகளுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தந்தை பெரியார் தொழிற்சங்கப் பேரவையின் பவானி கிளை பெயர் பலகைத் திறப்பு விழா நடைபெற்றது. தந்தை பெரியார் தொழிற்சங்கப் பேரவையின் பவானி கிளையின் பெயர் பலகைத் திறப்பு விழா 22. 12. 2025 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் ஈரோடு மாவட்டம், ஊராட்சி கோட்டையில் உள்ள பவானி பணிமனையில் த.பெ.தொ.பே பவானி கிளைத் தலைவர் சி. கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
த.பெ.தொ.பே பவானி கிளையின் துணைத் தலைவர் மா. சு. சந்திரகாந்த், அந்தியூர் கிளையின் தலைவர் கோ. செல்லத்துரை, அந்தியூர் கிளைச் செயலாளர் சி. முருகேசன், அந்தியூர் கிளை துணைச் செயலாளர் குப்புசாமி ஆகிய தோழர்கள் முன்னிலை வகித்தனர். த.பெ.தொ.பே. பவானி கிளையின் தலைவர் வீ. வெங்கடாசலம், பொதுச்செயலாளர் சி. குப்புசாமி, செயலாளர் மா. சரவணன், பொருளாளர் சா. செல்வன் ஆகிய தோழர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
மக்கள் வழக்கறிஞர் ப.பா மோகன், தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றியும் பாதுப்பிற்கான சட்டத்தை குறித்தும், த. பெ. தொ. பேரவையின் பவானி கிளையில் உள்ள தொழிலாளர்களை பணிமனை அலுவலர்கள் ஜாதிரீதியாக துன்புறுத்திய நிகழ்வினைக் சுட்டிக்காட்டி இதே போல் வரும் காலங்களில் நடைபெற்றால் சட்டப்படி தண்டனை வாங்கித்தருவோம் எனக் கூறி இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தோழர்களைப் பாராட்டி வாழ்த்துரையாற்றினார்.
ப. ரத்தினசாமி (கழக அமைப்பாளர்), ப. மா. பாலமுருகன்(சிபிஅய் ஈரோடு வடக்கு மாவட்ட துணைச்செயலாளர்), பி.கே பொன்னுச்சாமி (தவக பவானி தொகுதிச் செயலாளர்), வேங்கை பொன்னுசாமி (தமிழ்ப் புலிகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர்), வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் (சிபிஅய் அந்தியூர் ஒன்றியச் செயலாளர்) ஆகிய தோழர்கள் வாழ்த்துரையாற்றினர்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெயர் பலகையைத் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார். அவரது உரையிலிருந்து. தமிழ்நாடு போக்குவரத்து துறையில் பணிபுரியும் அனைத்து உயர் அதிகாரிகளும் தொழிலாளர்களையும் சமமாக பார்க்க வேண்டும் எனவும், த. பெ. தொ. பே தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருந்து அனைத்து தொழிலாளர் சங்கங்களுடன் தோழமையாக ஒருமித்த கருத்துக்களுடன் போராட வேண்டும். அப்போதுதான் பலன்கள் கிடைக்கும் என்ற சிந்தனையை கோரிக்கையாக த. பெ. தொ. பே தொழிலாளர்களிடம் முன் வைத்தும், அவர்களிடம் நியமான கோரிக்கையை முன்வைக்கும் பொழுதும், அதிகாரிகளின் சட்ட விரோதப் போக்கிற்கு எதிராகப் போராடுகிற போதும் நாங்கள் துணை நிற்போம் என்று உறுதி அளித்து தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறி சிறப்புரையாற்றினார். செ. செந்தில்குமார் (த.பெ.தொ.பே பவானி கிளை பொருளாளர்) நன்றியுரையாற்றினார். சி. குப்பசாமி (த.பெ.தொ.பே பவானி கிளை பொதுச்செயலாளர்) நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார். கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் மதியம் அசைவ உணவு வழங்கப்பட்டது.
காவை. ஈஸ்வரன் (கழகத் தலைமைக்குழு உறுப்பினர்), சதீஷ்குமார் (தி.மு.க., ஈரோடு மாவட்டச் சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர்), நாத்திகஜோதி (ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர்), எழிலன் (ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர்), செல்வராஜ் (ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர்), வேணுகோபால் (ஈரோடு மாவட்ட பரப்புரைச் செயலாளர்), கிருஷ்ணமூர்த்தி (ஈரோடு மாவட்ட அமைப்பாளர், கோபிநாத்(சென்னிமலை ஒன்றியச் செயலாளர்), வினோத் (பவானி ஒன்றியச் செயலாளர்), சாமிநாதன் (நாமக்கல் மாவட்டத் தலைவர்), நங்கவள்ளி கிருஷ்ணன்(சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), கிருஷ்ணமூர்த்தி (தி.க) மற்றும் கழகத் தோழர்கள் செட்டியூர் மாரி, காவை அவினாசி, மேட்டூர் முத்துராஜ், கவுந்தப்பாடி செல்வம், ராமன், மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 15012026
