கோபியில் தெருமுனைப் பிரச்சாரம்!

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கடந்த 04.01.2026 ஞாயிறு அன்று கோபி அம்மாபேட்டை ஒன்றியம் சனி சந்தை பகுதியில், ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்!’ தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

செல்வகுமார் (மாவட்டச் செயலாளர்) தலைமையேற்றார். சிவானந்தம் (தோணி மடுவுத் திட்ட ஒருங்கிணைப்பாளர்), தைரியமணி (புஇமு), பாரி (அருந்தமிழர் வாழ்வுரிமைக் கட்சி), காவலாண்டியூர் குமரேசன், நாத்திகசோதி (மாவட்டத் தலைவர்) ஆகியோர் உரையாற்றினர். பரப்புரை பயணத்தின் நோக்கத்தினை விளக்கி இராம. இளங்கோவன் (வெளியீட்டுச் செயலாளர்) விளக்க உரையாற்றினார். இரமேசு நன்றி கூறினார்.

பெரியார், அம்பேத்கர், கழகத்தின் செயல்பாடுகள் குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டன. கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட கழகத் தோழர்களும், காவலாண்டியூர் பகுதி கழகத் தோழர்களும், பெரியார் தொழிற்சங்க பேரவை தோழர்களும் கலந்து கொண்டனர். தோழருக்கான உணவு ஏற்பாடுகளை தோனிமடுவு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம் ஏற்பாடு செய்தார்.
பெரியார் முழக்கம் இதழ் 22012026

You may also like...