ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம் மாவட்டக் கழத்தின் சார்பில் திருப்பரங்குன்றத்தில் மதவெறியை தூண்டும் நீதிபதி சாமிநாதனே பதவி விலகு இந்து, இஸ்லாமியர் ஒற்றுமையை வலியுறுத்தி பரப்புரைக் கூட்டம் 18/12/25 அன்று மாலை 5 மணியளவில் பாக்கம் கூட்ரோடு சந்திப்பில் மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன் தலைமையில் நடைபெற்றது. பெரியார் தொண்டர் சிற்பி ராசன் அவர்களின் மந்திரமல்ல! தந்திரமே! என்ற சாமியார்களின் மோசடிகளை அம்பலப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் சாக்ரட்டீஸ் (மாவட்டச் செயலாளர்) முன்னிலை வகித்தார். சீனு செல்வரங்கம் (கண்டமங்கலம் மையக் குழு ஒன்றியச் செயலாளர், மாவட்ட கவுன்சிலர்), டிவி.நகர் ராஜா (தலித் பபாதுகாப்பு இயக்கம்), விஜி (பகுத்தறிவு வாழ்வுரிமைக் கட்சி), வீராணம் சு. ஆற்றரலசு (மேனாள் மாவட்டச் செயலாளர் விசிக), தீனா (தலைவர்,பெரியார் சிநந்தனையாளர் இயக்கம்), ந.அய்யனார் (கழக தலைமைக்குழு உறுப்பினர்) ஆகியோர் உரையாற்றினர். வழக்கறிஞர் வீ.அழகரசன் சிறப்புரையாற்றினார். கழகத் தோழர் அழகர் நன்றி கூறினார்.

கு.செல்வமணி (திமுக தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர்), ந.புருசோத்தமன் (தி.மு.க ஆதிதிராவிடர் நல மாவட்டத் துணை அமைப்பாளர் ), எஸ். காஞ்சிநாதன் (திமுக விவசாயத் தொழிலாளர் அணி மாவட்டத் துணை அமைப்பாளர்), பூ.ராமதாஸ் (திமுக தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்), கார்த்திகேயன் (திமுக மத்திய ஒன்றிய நிர்வாகி), தனஞ்செயன் (திமுக மண்டகப்பட்டு கிளை கழகச் செயலாளர்), பாக்கம் திமுக கிளைக் கழகம் நிர்வாகிகள் கங்காநாதன், பழனிச்சாமி ,ஜெயகணேஷ், ஜெயமூர்த்தி ஏகாம்பரம், மணிகண்டன், பாலமுருகன், ரஞ்சித்குமார் பூவேந்தன், காமராஜ், பழனிச்சாமி, விசிக நிர்வாகிகள் தெய்வநாயகம், கண்டமங்கலம் (ஒன்றிய துணைச் செயலாளர்) வழக்கறிஞர் தமிழரசன் (பனையடிக்குப்பம் விசிக), நல்லப்பரெட்டிபாளையம் தமிழ்ச்செல்வன், மண்டகப்பட்டு விருமாண்டி வேலு, சசிகுமார், வீராணம் ராகுல் ஆழியூர், கதிரவன் திருவண்டார்கோயில், பாஸ்கர்தாஸ், ராம்பாக்கம், மருதூர் வள்ளல் மற்றும் விழுப்புரம் மாவட்டக் கழகத் தோழர்கள் நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 22012026

You may also like...