காரமடை கழகத்தோழர் ஜெகதீஷ் காலமானார்!
கோவை மாவட்டக் கழகத்தின் காரமடை பகுதி அமைப்பாளர் ஜெகதீஷ் 31.12.2025 அன்று மறைவுற்றார். பெரியார் கொள்கைகளை பரப்புவதிலும் பரப்புகிறவர்களுக்கு துணை நிற்பதிலும் தோழர் ஜெகதீஷ் முன்மாதிரியானவர். தோழரின் இணையர் கவிதா அவர்களும் பெரியாரிய கொள்கைப் பற்றாளராவார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி 17.01.2026 சனிக்கிழமை அன்று, மத்தாம்பாளையம், கோட்டை பிரிவு, இன்னிசை நகரில் உள்ள ஜெகதீஸ்-கவிதா இல்லத்திற்கு சென்று தோழரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
நிகழ்வில் துரைசாமி (கழகப் பொருளாளர்), ரத்தினசாமி (மாநில அமைப்புச் செயலாளர்), பன்னீர் செல்வம் (கோவை மாவட்டச் செயலாளர்), நிர்மல்குமார் (கோவை மாநகரத் தலைவர்), அமுல்ராஜ் (மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர்), அய்யப்பன் (திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர்), முத்து(திருப்பூர் மாநகர அமைப்பாளர்), சண்முகம் ( பல்லடம் ஒன்றிய அமைப்பாளர்), திருப்பூர் இனியன், ராமசாமி (திருப்பூர் தெற்கு பகுதி அமைப்பாளர்), காவை அவினாசி ஆகிய கழகத் தோழர்கள்உடனிருந்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 22012026
