தாராபுரம் தோழர் ‘ஈவெரா’ இல்ல திறப்பு விழா!

தாராபுரத்தில் வழக்கறிஞர் கிருட்டிணகுமார்-ஆசிரியர் சுமித்ரா, ஈவெரா குடும்பத்தினரின் புதிய இல்ல திறப்பு விழா டிசம்பர் 25 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று இல்லத்தைத் திறந்து வைத்தார். SFD மாணவர்கள் யாழ்மொழி, இசைப்பிரியா, செந்தணல் மூவரும் கடவுள் மறுப்பு உறுதிமொழி முன்மொழிந்தனர். பங்கேற்ற அனைவரும் உறுதி ஏற்றனர். பெரியகுளம் குமரேசன் வரவேற்புரை ஆற்றினார்.

ஜவஹர், முனைவர் ஆ.புரட்சிக்கொடி, திராவிடர் தளம் அதிஅசுரன் ஆகியோரது கருத்துரைகளுக்குப் பிறகு கழகத் தலைவர் கொளத்தூர் மணி வீடு கட்டும் பொழுது மூடநம்பிக்கை இல்லாமல் அவர்களுக்கு ஏற்றவாறு அறிவியல் முறையில் இணைத்து வீட்டை கட்டியிருக்கிற வழக்கறிஞர் கிருட்டிணகுமார் – ஆசிரியர் சுமித்ரா இணையர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் இம்மாதிரியான அறிவியல் முறையை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோளாக முன்வைத்து உரையாற்றினார்.

தாராபுரம் பூங்கொடி அவர்கள் நன்றியுரையாற்றினார். திருவள்ளுவர் படிப்பகம் இராசாமணி இவ்விழாவினை ஒருங்கிணைத்தார். மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்-கயல்விழி, வழக்கறிஞர் செல்வராஜ், தி.மு.க-வினர், திருப்பூர், திருச்சி, கரூர் மாவட்டக் கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 15012026

You may also like...