மண்டல் குழுப் போராளி நூல் வெளியீட்டு விழா

கிருஷ்ணகிரி ஈடன் கார்டன் வளாகத்தில் திருவள்ளுவர், பெரியார் மானுட ஒன்றிய அமைப்பின் சார்பில் திரு.வழ.முகமது சாதிக் (வெல்பேர் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர்) தலைமையில், திருவாளர்கள் கா.மாணிக்கம், கோ.தங்கராசு, ரபீக் அகமது, சென்னை அன்புசீலன், காமராசு ஆகியோர் முன்னிலையில் “மண்டல் குழுப் போராளி அறிஞர் ஆனைமுத்து” எனும் நூல் வெளியீடு 21-12-2025 அன்று நடைபெற்றது. வே.இராசா (வட்டாட்சியர் ப.நி) வரவேற்புரையாற்றினார்.

வழ. அன்பு தனசேகர் ( வருவாய் வரித்துறை அதிகாரி ப.நி) அறிமுகவுரையாற்றினார். கு.முத்துசாமி (செயற்பொறியாளர், மின்சார வாரியம். ப.நி) நூலை வெளியிட்டு உரையாற்றினார். கல்வி வள்ளல் PSV கல்லூரி தாளாளர் முனைவர் பி.செல்வம் சார்பாக அவர்தம் நண்பர் இராமசாமி நூலினைப் பெற்றுக் கொண்டார்.

பேரா.சிற்பி இராசன் அவர்கள் “மந்திரமா? தந்திரமா?” மூலம் மூட நம்பிக்கைகளைப் போக்கும் உரை நிகழ்த்தினார். கிருஷ்ணமூர்த்தி (அரசு ஊழியர் அய்க்கிய பேரவை) நன்றி கூறினார். நிகழ்வை குயில்தாசன் ஒருங்கிணைத்தார். மாணவர்களும், பொது மக்களும் பங்ககேற்று சிறப்பித்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 15012026

You may also like...