பொள்ளாச்சியில் சீமானைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தந்தை பெரியாரைப் பற்றி தொடந்து அவதூறு பரப்பி வரும் சீமானைக் கண்டித்து அனைத்து கட்சி இயக்கங்கள் சார்பாக 06.01.2026 அன்று பொள்ளாச்சி காந்தி சிலை புதிய திட்ட சாலையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

வே.வெள்ளிங்கிரி திவிக தலைமையில், கோ.சபரிகிரி தொடக்க உரையாற்ற கா.சு.நாகராஜ் (திராவிட இயக்க தமிழர் பேரவை), கா. மாரிமுத்து (மக்கள் விடுதலை முன்னணி), சி மாரிமுத்து (திக), தமிழ்க் குமரன் (ஜெய்பீம் அறக்கட்டளை), குட்டி (விசிக), வாணுகன் (தமிழ்ப் புலிகள் கட்சி), தமிழ்பிரபா (மே 17), கவிஞர். முருகானந்தம் (மாற்று திறனாளிகளுக்கான நியமன நகர மன்ற உறுப்பினர்) ஆகியோர் கருத்துரையாற்றினர். சண்முக வேல் பிரபகரன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை) நன்றியுரையாற்றினார். கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 22012026

You may also like...