அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உண்டா?
தேர்தல் ஆணையம் தனது அதிகார வரம்பை மீறி தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்; காவல்துறை இயக்குனர் ; உளவுத்துறை இயக்குனர் போன்ற உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி அவரிடம் அதிகாரிகள் இடமாற்றலை வலியுறுத்தினார் என்ற செய்தி ஏற்கனவே வந்தது. பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவது உறுதியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரிகளை கண்மூடித்தனமாக இடமாற்றம் செய்வதை எதிர்த்து மம்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் அதிகாரிகளின் இடமாட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் இந்த நாடகத்தை துவங்கி இருக்கிறது. உண்மையிலேயே உயர் அதிகாரிகளை இப்படி பந்தாடும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறதா? இதுகுறித்து நாடாளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் பி.டி.டி ஆச்சாரி `இந்து’ ஆங்கில நாளேட்டில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். (ஏப்ரல்-3,2026) அதில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை சுட்டிக்காட்டுகிறோம். சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான முழு அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்திற்கு அரசியல்...
