அம்பேத்கர் நினைவுநாளில் கழகம் மரியாதை!
கோவை: புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில், கோவை மாநகர கழகத்தின் மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் காந்திபுரம் பெரியார் சிலை முன்பு தபெதிக அமைத்த அம்பேத்கர் படம் முன்பு காலை 9.30 மணிக்கு கோவை தோழர்கள் புகழ் வணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் நிலவும் ஜாதிய தீண்டாமை வன்கொடுமைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை உறுதியாகப் போராடுவது என்று உறுதி ஏற்றனர். பன்னீர்செல்வம், வெங்கட், நிர்மல் குமார் உரையாற்றினர் தோழர்கள் கிருஷ்ணன், மாதவன், சதீஷ், நவீன், தரணி, சத்தியமூர்த்தி, மேட்டூர் பாலு, ஆதரவாளர்கள் சங்கனூர் கார்த்தி, பரத், இலக்கியா கலந்து கொண்டு புகழ்வணக்கம் செலுத்தினர்.
திருப்பூர்: மாவட்டக் கழகத்தின் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில், அவரது நினைவைப் போற்றும் விதமாக மாநகர அமைப்பாளர் இரா. சரசுவதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஜாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கழகப் பொருளாளர் சு.துரைசாமி, வீ.சிவகாமி (தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம்), துரை. பரிமளராசன் (ஊடகப் பொறுப்பாளர்) ஆகியோர் கருத்துரையாற்றினர்.
முகில் இராசு (மாவட்டத் தலைவர்), பி.சங்கீதா (மாவட்ட அமைப்பாளர்)மா. இராமசாமி (தெற்கு பகுதிச் செயலாளர்), தமிழ் அமுதன் (மார்க்சிய முற்போக்காளர்கள் பேரவை), தனபால் (மாநகர தலைவர்), சி.மாதவன் (மாநகரச் செயலாளர்), மாரிமுத்து (மாநகரத் துணைத் தலைவர்), அய்யப்பன் (வடக்கு ஒன்றிய அமைப்பாளர்), முத்து (மாநகர அமைப்பாளர்), தனகோபால் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), சிரிஜா, இனியன், தமிழ்நாடு மாணவர் கழக தோழர்கள் இரா. ஈழமாறன், கார்த்திக், யாழினி, யாழிசை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் சிபி செல்வம் நன்றி கூறினார். நிகழ்வில் மாவட்ட, மாநகர, ஒன்றிய தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சேலம் கிழக்கு: மாநகர கழகத்தின் சார்பில் 06.12.2025 புரட்சியாளர் அம்பேத்கர் 69-வது நினைவு நாளையொட்டி காலை 10.00 மணியளவில், சேலம் அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொள்கை முழக்கமிடப்பட்டது.
இதில் டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), பாலு (சேலம் மாநகரத் தலைவர்), ஆனந்தி (சேலம் மாநகரச் செயலாளர்), தேவராஜ் (சேலம் மாநகர அமைப்பாளர்), இளம்பிள்ளை பகுதி தோழர்கள் சௌந்தரராஜன், சதா, வெற்றிமுருகன் (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), பிரபு (சேலம் மாநகரப் பொருளாளர்), ராஜசேகரன், சுதர்சன், தர்ஷன், தர்ஷிதா, அவினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேலம் மேற்கு: மாவட்டக் கழகத்தின் சார்பில் 06.12.2025 புரட்சியாளர் அம்பேத்கர் 69வது நினைவு நாளையொட்டி காலை 10.30 மணியளவில், மேட்டூர் அச்சங்காடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொள்கை முழக்கமிடப்பட்டது.
இதில் மேட்டூர், கொளத்தூர், மேட்டூர் ஆர்.எஸ், நங்கவள்ளி, காவலாண்டியூர் ஆகிய பகுதிகளில் இருந்து தோழர்களும், பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி: மாவட்டக் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 69 வது நினைவு நாளில் சங்கராபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு காலை 11 மணியளவில் தோழர் சி.சாமிதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தோழர்கள் மா.குமார் (ரிஷிவந்தியம் ஒன்றிய தலைவர்), இரா.கார்மேகம் (ரிஷிவந்தியம் ஒன்றிய அமைப்பாளர்), தோழர்கள் மு.நாகராஜ் கி.ஆனந்தன் மு.ராவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடலூர்: மாவட்டக் கழகத்தின் சார்பாக டிசம்பர் 6 சமத்துவத் தந்தை புரட்சியாளர் அம்பேத்கர் 66-வது நினைவு நாளில் கடலூரில் மஞ்சுகுப்பம் பகுதியில் காலை 10 மணி அளவில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து கொள்கை முழக்கம் செய்தனர்.
கடலூர் மாவட்டத் தோழர் பெரியார் சிவா மற்றும் தோழர்கள் செங்குளத்தான், குப்புசாமி, பிரபு ஆகியோர் பங்கேற்றனர். இளம் பாடகர் திராவிட மகிழன் புகழ் வணக்க முழக்கமிட்டார்.
சென்னை: மாவட்டக் கழகத்தின் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அடையாறு அம்பேத்கர் மணிபண்டபம், மந்தைவெளி அம்பேத்கர் சிலை, சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி தலைமையில், கழகத் தோழர்கள் மாலை அணிவித்து கொள்கை முழக்கமிட்டனர். தோழர் செல்வம் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிகழ்வில், தபசி குமரன்(தலைமை நிலையச் செயலாளர்), த கு. அன்பு தனசேகர்(லைமைக் குழு உறுப்பினர்), மா. வேழவேந்தன் (மாவட்டத் தலைவர்), மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, இராவணன் (மாவட்டத் துணைச்செயலாளர்), ப. அருண்( மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), அருண் கோமதி (தாம்பரம் நகர அமைப்பாளர் ), மயிலை பகுதித் தோழர்கள் சுகுமாரன், மனோகர், சிவா, முழக்கம் உமாபதி, இரண்யா, சு. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), த.நா. சூர்யா(பகுதி அமைப்பாளர்), பேரன்பு (தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர்), அமைப்பாளர் இளவரசன், முழக்கம் செய்தியாளர் பிரசாந்த், சைதை சிவா, தேன்மொழி (IT WING), அசோக் வீரா, பிரவீன், அஸ்வின், மோகன், அருள்தாஸ், ஏசுகுமார், அகராதி, குமார், எழிலரசன், மு.க. தினேஷ் குமார், லீலா உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 11122025
