மக்கள் திரளில் நடைபெற்ற தாரமங்கலம் பொதுக்கூட்டம்.!

திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில்.. “மனிதம் நமது அடையாளம்” “ஜாதி நமக்கு அவமானம்” பொதுக்கூட்டம் டிசம்பர் 14,.2025 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு தாரமங்கலம் அண்ணாதிடல் (சின்னப்பம்பட்டி சாலை) பகுதியில் மக்கள் பேராதரவுடன் நடைபெற்றது.
சி.தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) தலைமை வகித்தார். (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்),டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) , குடந்தை பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேட்டூர் டி.கே.ஆர்.இசைக் குழுவின் பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தோழர் சிற்பி ராசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்வு பொதுமக்கள், பெண்கள் என அனைவரையும் கவனம் ஈர்க்கச் செய்து மிகுந்த வரவேற்பை பெற்றது.
பொதுக்கூட்டத்தில் கே.ஆர்.தோப்பூர் கண்ணன், (சேலம் மாநகரச் செயலாளர்), ஆனந்தி (இளம்பிள்ளை நகரச் செயலாளர்), மோகன்ராஜ், (சேலம் மாவட்ட இளைஞர் அணித் தலைவர்) ஏற்காடு தேவபிரகாஷ் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில்.. மனுதர்ம சாஸ்திரத்தையும், வேதங்கள், புராணங்கள், இதிகாசங்களின் பொய் புரட்டுகளையும் இதனால் வரலாறு நெடுகிலும் பார்ப்பனர்கள் செய்த வரலாற்று துரோகத்தையும், திராவிட இயக்க வரலாறு குறித்தும், சமகால இந்திய அரசியல் சூழல் பற்றியும் மக்கள் மத்தியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் ஆதாங்களுடன் விளக்கினார். பார்ப்பனர்கள் உயர் பதவிகளில் நீண்ட நெடுங்காலம் இருந்து வருவதற்கு மதங்களுக்கிடையிலான பிரச்சினைகளை உருவாக்கி விடுவது தான் காரணம் என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.
சிவசண்முகம் (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) நன்றியுரையாற்றினார். இரவு உணவு அனைவருக்கும் அசைவ உணவாக வழங்கப்பட்டது.
சக்திவேல் (சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர்), சூரியகுமார் (சேலம் மேற்கு மாவட்டத் தலைவர்), ஏற்காடு பெருமாள் (சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர்), முத்துமாணிக்கம் (சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர்), பாலு (சேலம் மாநகரத் தலைவர்), மகேந்திரன் (ஆத்தூர் நகரத் தலைவர்), திவாகர் (மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) மற்றும் இளம்பிள்ளை, ஏற்காடு, சேலம் மாநகரம், ஆத்தூர், தாரமங்கலம், மேட்டூர், கொளத்தூர், வனவாசி, நங்கவள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து தோழர்கள் திரளாக சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 18122025

You may also like...