ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம்! கொட்டும் மழையிலும் கொள்கைப் பரப்புரை!
சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் ‘மனிதம் நமது அடையாளம் -ஜாதி நமக்கு அவமானம்’ என்ற முழக்கங்களோடு ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சமத்துவப் பரப்புரை தெருமுனைக் கூட்டம் 29.11.2025 காலை 11.00 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. சமுத்திரமம், மூலப்பாதை, கொங்கணாபுரம் பேருந்து நிலையம், எட்டிக்குட்டைமேடு ஆகிய நான்கு இடங்களில் பரப்புரை நடைபெற்றது.
கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), கவியரசு(தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்), கொங்கணாபுரம் கோகுல் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), முன்னிலை வகித்தனர். பிரபாகரன் (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார்.
இளம்பிள்ளை நகரச் செயலாளர் மோகன்ராஜ், குமரசேன், கே.ஆர்.தோப்பூர் கண்ணன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), கோகுல் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர். பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. எடிசன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்.
இளம்பிள்ளை சேகர், கொளத்தூர் கணேசன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர், நாகராஜ், மேச்சேரி சபரி, கபிலன், இளம்பிள்ளை நகரச் செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 04122025
