ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்! தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், டிசம்பர் 29 அன்று கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. இன்றைய நாகரீக உலகிலும் பல்வேறு வடிவங்களில் ஜாதியம் தலைதூக்கி நிற்கிறது. ஜாதிக் கயிறுகள், ஜாதிய குருபூஜைகள், ஜாதிய திருமண தகவல் மையங்கள், சமூக வலைதளங்களில் ஜாதி அடையாளத்தை வெட்கமின்றி ஒட்டிக்கொள்ளுதல் என ஜாதியை வலிமைப்படுத்தும் புதுவிதமான முயற்சிகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. ஜாதிச்சங்கங்கள் இந்த வேலைகளை இடைவிடாமல் செய்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய ஜாதி வெறிச்செயல்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி கிடைப்பதையும் தடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இவற்றையெல்லாம் கண்டிப்பதுடன், ஜாதிய நடவடிக்கைகளுக்கான எதிரான அரசின் உறுதியான சட்ட நடவடிக்கைகளை வலியுறுத்தும் விதமாக, திராவிடர் விடுதலைக் கழகம் இந்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. தமிழ்நாடெங்கும் போராட்டத்திற்கு கழகத் தோழர்கள் தயாராகி வருவதுடன், “மனிதம் நம் அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பிலே போராட்ட நோக்கத்தை விளக்கி, பரப்புரைப் பயணங்களையும் நடத்தி வருகின்றனர். அந்த செய்திகள் கீழே விரிவாக தரப்பட்டுள்ளன.
ஈரோடு வடக்கு, டிசம்பர்-7: மாவட்டக் கழகத்தின் சார்பில் “மனிதம் நம் அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” தெருமுனை பரப்புரைக் கூட்டம் டிச-7, 2025 ஞாயிறு மாலை 6 மணியளவில் பவானி ஒன்றியம் சித்தார் பகுதியில் நடைபெற்றது. (மாவட்டத் தலைவர்) நாத்திக ஜோதி தலைமை உரையாற்ற, கழகத்தின் (தலைமைக் கழகப் பேச்சாளர்) வேலுச்சாமி, (கழக வெளியீட்டுச் செயலாளர்) இராம. இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
பெரியார், அம்பேத்கர் மற்றும் கழகத்தின் செயல்பாடுகள் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. பெருந்திரளான மக்கள் அதை கண்டு களித்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட தோழர்களுக்கு தி.க. மூத்த தோழர் ராமலிங்கம் தேநீர் வழங்கினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நாத்திக சோதி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வில் நிவாஸ், ஜெகநாதன், அருளானந்தம், துரை, மூர்த்தி, சின்னத்தம்பி, செல்வகுமார், ராமன், வினோத், ரகுநாதன், செல்வம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
டிசம்பர்-14: வாராந்திர தெருமுனைக் கூட்டம் டிச-14,2025 ஞாயிறு மாலை 6 மணி அளவில் அம்மாபேட்டை பகுதியில் நடைபெற்றது. (மாவட்டத் தலைவர் நாத்திக சோதி) தலைமை ஏற்க, (மாவட்டச் செயலாளர்) செல்வகுமார், (நாமக்கல் மாவட்டத் தலைவர்) சாமிநாதன், (பு.இ.மு) தைரியமணி, வழக்கறிஞர் சே குணசேகரன், மற்றும் திமுக அம்மாபேட்டை பேரூர் கழகச் செயலாளர் பெரியநாயகம் ஆகியோர் உரையாற்றினர்.

பெரியார், அம்பேத்கர், கழக செயல்பாடுகள் குறித்து குறும்படங்கள் திரையிடப்பட்டன. இக்கூட்டத்தில் தோழர்கள் ரமேஷ், நடராஜ், மயில்சாமி, துரை, சின்னத்தம்பி, வினோத், நிவாஸ், கோசனம் ராஜசேகர் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட தோழர்களுக்கு திமுக பொறுப்பாளர்கள் தேநீர் மற்றும் உணவு ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
கோவை: மாவட்டக் கழக்தின் சார்பில் டிசம்பர்-13, .2025 அன்று அன்னூர் சுற்றுவட்டாரத்தில் 4 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. அன்னூர், மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் முழுநாள் நிகழ்வாக பரப்புரை நடைபெற்றது.
கரியாம்பாளையம்: கரியாம்பாளையத்தில் அன்னூர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. முகில் ராசு, (மாவட்டத் தலைவர் – திருப்பூர் , நிர்மல் குமார் (மாநகரத் தலைவர் – கோவை) தம்பி செந்தில் (தமிழ்ப் புலிகள் கட்சி), அர்ஜுன் (இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு), வழக்கறிஞர் சண்முகநாதன் (த.பெ.தி.க), ஆறுச்சாமி (தி.மு.க), நவீன்குமார் (மாணவர் கழக அமைப்பாளர்) ஆகியோர் கருத்துரையாற்றினர் மனோரஞ்சனி நன்றி கூறினார்.
கணேசபுரம்: மோகன கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. : திருப்பூர் முத்து, (மாநகர அமைப்பாளர் – திருப்பூர்), அன்னூர் முருகேசன் (தமிழ்ப் புலிகள் கட்சி), பரிமளராசன் (சமூகவலைதளப் பொறுப்பாளர்), லோகநாயகி ஆகியோர் கருத்துரையாற்றினர். கூட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு சமூக ஆர்வலர் அன்னூர் ஈஸ்வரன் மதிய உணவு ஏற்பாடு செய்தார். தி.மு.க. பரமேஸ்வரன் ரூ.200/- நன்கொடை வழங்கினார். தோழமை இயக்கத்தினர் திரளாக பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நகர அமைப்பாளர் அமுல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் சு.துரைசாமி, பா.இராமச்சந்திரன் (மாவட்டத் தலைவர் – கோவை), இக்பால் ( நகரச் செயலாளர் – ம.தி.மு.க.) முகில்ராசு ( மாவட்டத் தலைவர் – திருப்பூர்) ஆகியோர் கருத்துரையாற்றினர். வெங்கட் – நிர்மல் குமாரின் நய்யாண்டி நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னூர் விஷ்ணு நன்றி கூறினார்.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நகர அமைப்பாளர் அமுல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் சு.துரைசாமி, பா.இராமச்சந்திரன் (மாவட்டத் தலைவர் – கோவை), இக்பால் ( நகரச் செயலாளர் – ம.தி.மு.க.) முகில்ராசு ( மாவட்டத் தலைவர் – திருப்பூர்) ஆகியோர் கருத்துரையாற்றினர். வெங்கட் – நிர்மல் குமாரின் நய்யாண்டி நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னூர் விஷ்ணு நன்றி கூறினார்.
காரமடை: காரமடையில் நகர அமைப்பாளர் ஜெகதீஸ் தலைமையில் நடைபெற்றது. பரிமளராசன் (சமூகவலைதளப் பொறுப்பாளர்), திருப்பூர் முத்து, மாநகர அமைப்பாளர் – திருப்பூர் கனகராஜ், (சிபிஎம்), நிர்மல் குமார், (மாநகரத் தலைவர் – கோவை) ஆகியோர் கருத்துரையாற்றினர்.
சென்னை: டிசம்பர் 8,2025 அன்று மாலை 6 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகரில், ஆ.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) ஒருங்கிணைத்தார். தோழர்கள் வீரமணி – திராவிட மகிழன் ஆகியோர் பாடல்களைப் பாடினர்.
சாரநாத் (விசிக மய்ய சென்னை மாவட்டச் செயலாளர்), சிற்பி இராசன், U2BRUTUS மைனர், ஒருங்கிணைப்பாளர் புதுவை தீனா (பெரியார் சிந்தனையாளர் இயக்கம்), தேன்மொழி (திவிக IT WING) ஆகியோர் கருத்துரையாற்றினர். ரூ.1,025க்கு கழக வெளியீடுகள் விற்பனையாகின.
மா. வேழ வேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்), ம. கி. எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), இராவணன் (மாவட்டத் துணைச் செயலாளர்), ப. அருண் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), வழக்கறிஞர் இரண்யா, கடலூர் சிவகுமார், சு. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), சே. ராஜேஷ் (பகுதிச் செயலாளர்), த.நா. சூர்யா (பகுதி அமைப்பாளர்), பேரன்பு (தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர்), முழக்கம் செய்தியாளர் பிரசாந்த், மயிலாப்பூர் பகுதித் தோழர்கள் மனோகர், சிவா, முழக்கம் உமாபதி, பிரவீன் மற்றும் பார்த்திபன், கவுதம் ஷாம் (Dravidian stock பதிப்பகம்), யாழினி, ஓவியா, ராஜன், குமார் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 18122025

You may also like...