நிமிர்வோம் வெளியீடுகளுக்கு சிறப்பான வரவேற்பு!

தி.மு.க.- 75 அறிவுத் திருவிழாவின் ஒரு பகுதியாக, நவம்பர் 8 முதல் 16 வரை வள்ளுவர் கோட்டத்தில், சென்னை முற்போக்கு புத்தகக் காட்சி நடைபெற்றது. இதில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நிமிர்வோம் பதிப்பகமும் பங்கேற்க, ஊடவியலாளர் ர.பிரகாசு, தோழர் மகிழவன் முயற்சியில் அரங்கு ஒதுக்கப்பட்டது. தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் ஒருங்கிணைப்பில், 9 நாட்கள் நிமிர்வோம் பதிப்பக அரங்கு செயல்பட்டது. கழக வெளியீடுகளுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் கழக வெளியீடுகளை தேடி வந்து வாங்கிச் சென்றனர். மொத்தம் ரூ.82,000-க்கு கழக நூல்கள் விற்பனையானது.
இளைஞர் அணி அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு.கோபிநாத், பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா, காவை அஜித், முழக்கம் செய்தியாளர் பிரசாந்த், சுகந்தன், வீரா, யாழினி, அசோக், ஓவியா ஆகிய தோழர்கள் அரங்க வடிவமைப்பு பணிகளை முனைப்புடன் செய்தனர்.
தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி, இளைஞரணி தோழர்கள் இம்மேனுவல் துரை, பிரனேஷ், தாமரை, நந்தகுமார், புகழேந்தி, தீபக், சுரேந்தர், மடிப்பாக்கம் அருண், ஸ்ரீலேகா, சுபாஷ் ஆனந்த், கவுரி சங்கர், கழகத் தோழர் இரண்யா உள்ளிட்ட பலர் தோழர்கள் புத்தக விற்பனையில் ஈடுபட்டனர்‌.
நவம்பர் 9 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்ற வந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நிமிர்வோம் அரங்குக்கு வருகை புரிந்தார். தோழர் U2 BRUTUS மைனர் வீரமணி, வீடியோவை வெளியிட்டு நிமிர்வோம் அரங்குக்கு வருகை தந்து வாசகர்களை ஈர்த்தார். நவம்பர் 12-ஆம் நாள் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “நாத்திகம்: சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு, சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி தலைமையில் நிமிர்வோம் அரங்கில் நடைபெற்றது. ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நூலை வெளியிட, மா.பெ.பொ.க.யின் துணைப் பொதுச்செயலாளர் வாலாசா வல்லவன் பெற்றுக்கொண்டார். இந்நூல் பெரும்பாலும் விற்றுத்தீர்ந்தது. அதேபோல, கழகத் தலைவர் எழுதிய “இடஒதுக்கீட்டின் நோக்கம் ஜாதி ஒழிப்பே” எனும் நூலும் பெரும் வரவேற்பைப் பெற்றது!
பொதுமக்களை ஈர்க்கும் விதமாக, ஒவ்வொரு நாளும் மாலை வேலைகளில் கலை நிகழ்ச்சிகளும் கருத்துரைகளும், புத்தகக் காட்சி நடைபெறும் கூடாரத்துக்கு அருகிலே உள்ள மேடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், நவம்பர் 13ஆம் நாள், கழகத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை தாமோதரனின் “மந்திரமா? தந்திரமா?” நிகழ்ச்சி நடைபெற்றது. கழக நூல்கள் நிமிர்வோம் அரங்கில் மட்டுமல்லாமல் மற்ற அரங்குகளிலும் விற்பனை செய்யப்பட்டது. முதல் நாளில் அரங்குக்கு வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு “ஆரியமாடலா? திராவிட மாடலா?” நூலை வழங்கி தோழர் ம.கி. எட்வின் பிரபாகரன் வரவேற்றார்.
நவம்பர் 16 அன்று அரங்குக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் எழுதிய “ஆர்எஸ்எஸ் ஓர் அபாயம்”, திராவிடப் பெரியார் யாருக்கு எதிரி?” ஆகிய நூல்களை தேர்ந்தெடுத்து வாங்கிச் சென்றதோடு மட்டுமல்லாமல், இந்த இரண்டு புத்தகங்களை முன்னிலைப்படுத்தும் படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.
திமுக தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காஞ்சிபுரம் சி.வி.எம்.பி. எழிலரசன், விருகம்பாக்கம் ஏ.வி.எம்.பி. பிரபாகர் ராஜா, மாதவரம் எஸ். சுதர்சனம், தி.க. பரப்புரைச் செயலாளர் க. அருள்மொழி, கருஞ்சட்டைப் பதிப்பக இயக்குநர் பெல் ராஜன், தி.க துணைப் பொதுச் செயலாளர்கள் பிரின்ஸ் என்னாரசு பெரியார், மதிவதனி, திஇதபே துணைப் பொதுச் செயலாளர் இரா. உமா, புதுகை பூபாலன், தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், விசிக மாவட்டச் செயலாளர் சாரநாத் (மைய சென்னை கிழக்கு), விசிக மாவட்டச் செயலாளர் கரிகால்வளவன் (தென்சென்னை வடக்கு), U2 BRUTUS மைனர், இந்திரகுமார் தேரடி, எழுத்தாளர்கள் வ. கீதா, வா.சி.ம.ப.த.ப. சரவண குமார், அனைத்து ஜாதி அர்ச்சகர் சங்கத் தலைவர் ரங்கநாதன், பேராசிரியர் ஜெயராமன், ஊடகவியலாளர்கள் “தமிழ்க்கேள்வி” செந்தில்வேல், மு.க.தினேசு குமார், ஜெயபிரகாஷ், காயத்ரி, எழிலரசன், JEEVA TODAY ஜீவா, “தமிழா தமிழா” ஆவுடையப்பன், கார்த்திகைச் செல்வன், இயக்குநர் கரு. பழனியப்பன், SVK ஹாஷிராமா, ஸ்ரீஜன் (BLUE NGO), TRIBES கரிகாலன், திருமுருகன் காந்தி (மே17), சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கனகராஜ், ஜி.செல்வா, மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, இளந்தமிழகம் செந்தில், சமூக ஊடகவியலாளர்கள் ஞான சத்யா, கலை, பாட்டர், ரௌத்திரா, கடலூர் அமீன் (மமக), நடிகர் ஆதவன் உள்ளிட்ட பல தோழமைகள் நம்முடைய அரங்குக்கு வருகை புரிந்தனர். ஆர்வத்துடன் நூல்களையும் வாங்கிச் சென்றனர்.
கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் கு.அன்பு தனசேகர், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, தலைமைக் குழு உறுப்பினர் இளையராஜா, மாவட்டத் தலைவர்கள் மா.வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், கழக தோழர் ஏசு குமார், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, நிமிர்வோம் வாசகர் வட்ட அமைப்பாளர் ர.பிரகாசு, தென்சென்னை மாவட்டத் துணைச்செயலாளர் இராவணன், திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் சே. ராஜேஷ், தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர்கள் பேரன்பு (ஒருங்கிணைப்பாளர்), ஷர்மிளா, இளவரசன் (அமைப்பாளர்) ஆகியோர் அவ்வப்போது அரங்குக்கு வருகை தந்து புத்தக விற்பனையில் ஈடுபட்டிருந்த தோழர்களை ஊக்கப்படுத்தினர்.
அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய முற்போக்கு புத்தகக் காட்சிகளை நடத்த வேண்டும் என்றும், அரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், கூடுதலாக பொதுமக்கள் பங்கேற்பதற்கு பல்வேறு விளம்பர யுக்திகளை கையாள வேண்டும் என்றும், 9 நாட்கள் என்பதை நீட்டித்து 15 நாட்களாவது முற்போக்கு புத்தகக் காட்சியை நடத்த வேண்டும் என்றும், விழா ஏற்பாட்டாளர்களிடம் நிமிர்வோம் பதிப்பகம் சார்பில், எழுத்து வடிவில் கோரிக்கை வைக்கப்பட்டது. புத்தகக் காட்சியை ஏற்பாடு செய்த முத்தமிழறிஞர் பதிப்பகத்தையும் திமுக இளைஞரணியையும் பதிப்பாளர்கள் வெகுவாகப் பாராட்டியதை பார்க்க முடிந்தது. விருந்தோம்பல் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக பதிப்பாளர்களை உபசரித்தனர். புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடத்தும் சென்னை புத்தகக் காட்சிக்கு ஒரு முன்னோட்டமாக இந்த முற்போக்கு புத்தகக் காட்சி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம், சென்னை புத்தகக் காட்சியில் கால்பதிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
செய்தி – ம.கி. எட்வின் பிரபாகரன்
பெரியார் முழக்கம் இதழ் 04122025

You may also like...