தலையங்கம் – ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவை?
2011ஆம் ஆண்டிலேயே நடத்தப்பட்டிருக்க வேண்டியது மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வேண்டுமென்றே தாமதித்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. கடந்த 150 ஆண்டுகால வரலாற்றில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தாமதப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. கொரோனாவைக் காரணம்காட்டி தள்ளிப்போடப்பட்டு, அதுவே தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது வெறுமனே மக்கள் தொகையை அறிந்துகொள்வதற்கான கணக்கெடுப்பு அல்ல. சமூக – பொருளாதார தரவுகள் அதற்குள் அடங்கியுள்ளது. அதைவைத்துதான் கொள்கை முடிவுகள், பொருளாதாரத் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படும். அரசு நிர்வாகத்திற்கும் அத்தியாவசியத் தேவை. அதுமட்டுமின்றி, கல்வி- வேலைவாய்ப்பில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய, இடஒதுக்கீட்டைச் செழுமைப்படுத்தவும் ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மிக அவசியமானது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஜாதி வாரியான கணக்கெடுப்பு விவரங்களும் எடுக்கப்பட்டபோதிலும் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடஒதுக்கீட்டிற்கான போராட்டங்கள், கோரிக்கைகளும் மிகப்பெரிய அளவில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்குரிய தீர்வுகளைக் காண, ஜாதி...