நம்பியூரில் சனாதன மோசடிகள் விளக்கம்
ஈரோடு வடக்கு : ஈரோடு வடக்கு மாவட்டக் கழக சார்பாக 03.12.2023 ஞாயிறு மாலை 04.30 மணியளவில் நம்பியூர் அஞ்சானூர் சமத்துவபுரத்தில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
கூடக்கரை கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டக் கழக அமைப்பாளர் கோபி நிவாசு, நம்பியூர் ரமேசு ஆகியோர் தொடக்க உரையாற்றினார்.
தொடர்ந்து தலைமைக் கழக பேச்சாளர் கா.சு.வேலுச்சாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அடுத்தக் கூட்டம் கூடக்கரையில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடக்கரை பகுதி திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பு (எ) சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தொடர்ந்து கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் நிறைவுரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் எலத்தூர் செல்வக்குமார், கோபி அருளானந்தம், சத்தி முத்து, சித்தா பழனிச்சாமி, சின்னதம்பி, நம்பியூர் ஒன்றியச் செயலாளர் இரமேஷ், சிவராஜ், கூடக்கரை செல்வன், வழக்குரைஞர் தமிழரசன், பன்னீர் செல்வம், இராவணன், ராஜன் பாபு, குட்டி, புலவன்சிறை நடராஜன், மயில்சாமி, விஜயகுமார், அறிவரசன், யாழ்திலீபன், நம்பியூர் கதிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்