அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!
கோவை: சிவானந்தா காலனியில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் 135-வது பிறந்தநாளில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் நவீன் அவர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துகொண்டனர். பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சமத்துவ நாள் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், கோவை மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் டெம்போ சிவா, திவிக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமார், திவிக கோவை மாநகரச் செயலாளர் வெங்கட், திவிக கோவை மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன், முன்னாள் கோவை மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் மதிவாணன், தமிழ்ப்புலிகள் தோழர்கள் தம்பி செந்தில், கோவை குமார், ராமகிருஷ்ணன், திவிக தோழர்கள் ஸ்டாலின், மாதவன், நிலவழகன், ராமகிருஷ்ணன், கீர்த்தீகா, அபிலேஸ் பாண்டியன் மற்றும் மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இறுதியாக ரத்தினபுரி பகுதி திவிக பொறுப்பாளர் சதீஸ் நன்றி கூறினார்.
மதுரை: புரட்சியாளர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தோழர் சத்தியமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மதுரை மாவட்டக் காப்பாளர் தளபதி மற்றும் முருகேசன், வேங்கைமாறன், ஆனந்த், காமாட்சிபாண்டி மற்றும் மற்றும் மே 17 பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்காடு: திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் ஏப்ரல் 14 அன்று ஏற்காடு ஒண்டிகடை பகுதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் திரளாக பங்குபெற்றனர்.
ஈரோடு வடக்கு :கோபிசெட்டிபாளையம் சீதாலட்சுமிபுரம் பகுதியில் பு.இ.மு. சார்பில் அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் விழா ரமேஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ராம இளங்கோவன் உரையாற்றினார். தி.க.மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், த.பெ.தி.க. சார்பாக குணா, வழக்கறிஞர்கள் சோமசுந்தரம், ஜோதி ஆகியோர் பங்கேற்றனர்.
புரட்சிகர இளைஞர் முன்னணியின் சார்பாக சண்முகம் சிறப்புரையாற்றினார். அண்ணல் அம்பேத்கர் படத்தை தேவராஜ் திறந்து வைத்தார். படத்திற்கு கண்ணன் மாலை அணிவித்தார்.
இறுதியாக அண்ணல் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி கேசரி இனிப்பு வழங்கப்பட்டது. 40-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
பெரியார் முழக்கம் 01052025இதழ்
