“பாண்டியாறு – மோயாறு” இயக்கத்தினர் தலைவருடன் சந்திப்பு

கோபி: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பளையத்திற்கு வருகைபுரிந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம், பாண்டியாறு – மோயாறு இணைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் கழக முன்னோடியுமான அக்ரி அ.நே.ஆசைத்தம்பி சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதில் ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை ஆகிய 4 மாவட்டங்களில், உள்ள சுமார் ஒரு கோடி பொதுமக்களுக்கும், லட்சக்கணக்கான கால் நடைகளுக்கும், 5 இலட்சம் ஏக்கர் பயிர் சாகுபடிக்கும் பெரிதும் பயனளிக்கும் “பாண்டியாறு – மோயாறு” இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற கழகத்தின், ஆதரவு கோரியும், உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ள வலியுறுத்தியும் கோரிக்கை மனுவினை வழங்கினார்.
இந்தச் சந்திப்பில் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், ஈரோடு வடக்கு மாவட்ட அமைப்பாளர் நிவாஸ், அருளானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

பெரியார் முழக்கம் 08.08.2024 இதழ்

You may also like...