“பெரியார் எனும் பெருநெருப்பு” எழுச்சிமிகு கருத்தரங்கங்கள்

கோபி: ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கடந்த 22.02.2025 சனிக்கிழமை மாலை கோபியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான் தியாகசீலர் சி.எஸ்.எஸ் அரங்கத்தில் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. கருத்தரங்க நிகழ்விற்கு மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் அவர்கள் தலைமையேற்றார். ரூட்ஸ் தமிழ் கரிகாலன், பேரலை இந்திரகுமார் தேரடி, பேரலை மில்டன், அதர்மம் மனோஜ், யூ2 புரூட்டஸ் மைனர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இறுதியில் மாவட்ட அமைப்பாளர் நிவாஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றிட அரங்கம் நிறைந்த கோபி பெருமக்களால் கருத்தரங்கம் நிறைவு பெற்றது. நிகழ்வில் கழகத்தோழர்கள், பொதுமக்கள், மாற்று அரசியல் கட்சியினர், இயக்கத்தோழர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 06032025இதழ்

You may also like...