சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் திண்டுக்கல் 40 கூட்டங்களை நிறைவு செய்தது

சென்னை : சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பாக 21.08.2023 திங்கள் மாலை 5 மணிக்கு கோடம்பாக்கம் மார்கெட் அருகிலும், மாலை 7 மணிக்கு தர்மாபுரம் மாரியம்மன் கோவில் அருகிலும், 23.08.2023 செவ்வாய் மாலை 5 மணிக்கு, மடுவாங்கரை புதியத் தெருவிலும் இரவு 7:30 மணிக்கு, பழைய பூந்தமல்லி சாலை, கங்கை அம்மன் கோவில் அருகிலும், 23.08.2023 புதன்கிழமை மாலை 5 மணிக்கு ஜாபர்கான்பேட்டை, கங்கையம்மன் கோயில் அருகிலும், மாலை 7 மணி ஜோன்ஸ் சாலை சாரதி நகர் சந்திப்பிலும், 24.08.2023 வியாழன் அன்று மாலை 5.30 மணிக்கு ஜோன்ஸ் சாலை கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெருவிலும், மாலை 7.30 மணிக்கு சைதாப்பேட்டை, குயவர் வீதியிலும், 25/08/2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகிலும், மாலை 7.30 மணிக்கு அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகிலும், 26.08.2023 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையிலும், இரவு 8 மணிக்கு தேனாம்பேட்டை திரு.வி.க நகர் குடியிருப்பிலும் நடைப்பெற்றது.
கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வழக்கறிஞர் இரமேசு பெரியார், திமுக 113 (அ) வட்டச் செயலாளர் தேவராஜ், அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் வா.ரங்கநாதன், எட்வின் பிரபாகரன், அன்னூர் விஷ்ணு, தேன்மொழி ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
தொடர்ந்து நாத்திகன் – உமாபதி குழுவின் நையாண்டி அரசியல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதுவரை சென்னை மாவட்டக் கழகம் 72 தெருமுனைக் கூட்டங்கள் நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை : கோவை மாவட்டக் கழகத்தின் சார்பாக 14வது தெருமுனைக் கூட்டம் காந்திபுரம் டாடபாத், ஜீவா மன்றம் அருகில் மாநகரச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கட்சி கோவை மாநகர மாவட்ட செயலாளர் குரு தொடங்கி வைத்தார். மாநகர அமைப்பாளர் மாதவன் வரவேற்புரையாற்றினார்.
மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் புரட்சித் தமிழன் சனாதன எதிர்ப்பு பாடல்களைப் பாடினர். மாநகர தலைவர் நிர்மல்குமார் – சூலூர் தமிழ்ச்செல்வி கேள்வி-பதில் நிகழ்ச்சி நிகழ்த்தினர்.
கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தமிழ்ப்புலிகள் கட்சி பொதுச்செயலாளர் இளவேனில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மத்திய மண்டல துணைச் செயலாளர் மணிபாரதி, தமிழ்நாடு மாணவர் கழக திருப்பூர் மகிழவன், ஜீவா மன்ற பொறுப்பாளர் சாந்தகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கணபதி பகுதி கழகப் பொறுப்பாளர் இரத்தினபுரி சதீசு நன்றி கூறினார்.

ஈரோடு வடக்கு : ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக தெருமுனைக் கூட்டம் 20.08.2023 அன்று பெருந்துறை பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது.
கூட்ட தொடக்கமாக பெரியார் விழுது அறிவுக்கனல் பெரியாரிய பாடல்களைப் பாடினார்.
அதனைத் தொடர்ந்து மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன், நிவாஸ், கூதாம்பி மூர்த்தி, செந்தில் ஆகியோர் பயண நோக்கத்தினை விளக்கி உரையாற்றினார்கள்.
மாவட்ட செயலாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.
கூட்டம் நடைபெற்ற பகுதியில் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. தோழர்கள் தெருமுனைக் கூட்டம் நிறைவு பெறும் வரை ஒலி பெருக்கியை நிறுத்தி வைக்க கோரிக்கை வைத்தனர். கோயில் கமிட்டியினரும் தோழர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டம் நிறைவு பெறும் வரை ஒலி பெருக்கியை நிறுத்தி வைத்து ஒத்துழைப்பு வழங்கியது தோழர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பெருந்துறை சின்னசாமி அனைவருக்கும் தேனீர் ஏற்பாடு செய்தார்.
கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், எலத்தூர் செல்வக்குமார், நிவாஸ், ரமேசு, அருளானந்தம், மயில்சாமி, பவானி வினோத், சின்னசாமி, இராவணன், சிவராஜ், கூதாம்பி மூர்த்தி, செந்தில், தனுக்கோடி, கூதாம்பி துரை,வினோத், யாழ் திலிபன், அறிவுக்கனல், மெக்காலே ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கழகத்தின் சார்பாக ஒட்டன்சத்திரத்தில் தெருமுனைக் கூட்டத்தை 22.08.2023 அன்று ஒட்டன்சத்திரம் நகர்மன்றத் தலைவர் திருமலைச்சாமி தொடங்கி வைத்தார்.
தும்பச்சம்பட்டி, பெரிய கோட்டை, சத்திரபட்டி, விருப்பாச்சி, தங்கச்சியம்மாபட்டி, அம்பிளிக்கை, சிந்தலம்பட்டி, சக்கம்பட்டி, ஓடைப்பட்டி, இ.வாடிப்பட்டி, கொ.கீரனூர், சின்னக்காம்பட்டி, மார்க்கம்பட்டி, இடையகோட்டை, இடையகோட்டை பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் 26.8.2023 வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாக்சிம் கார்க்கி, மாவட்ட இணையதளப் பொறுப்பாளர் ராஜா, மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
மீனா, ராஜா, பெரியார் ஆகியோர் தெருமுனைக் கூட்டத்தினை விளக்கி பாடல்களைப் பாடினார்கள்.

தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர் ஆயுதன் நன்றி கூறினார்.
இதுவரை திண்டுக்கல் மாவட்டக் கழகம் 40 தெருமுனைக் கூட்டங்களை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம் : 21.08.23 திங்கள் மாலை 7.00 மணியளவில் காவலாண்டியூர் கிளைக் கழக சார்பில் 15வது தெருமுனை பரப்புரைக் கூட்டம் ஈரோடு வடக்கு மாவட்டம் ரெட்டிபாளையம், நேருநகர் பகுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு செட்டியூர் மாரி வரவேற்புரையாற்றினார்.
ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகசோதி தலைமையில், சமூக ஆர்வலர்களான மாதன், சேகர், கண்ணுசாமி, கண்ணுப்பையன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் துவங்கியது.
காவை.இளவரசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியைத் தொடர்ந்து வழக்கறிஞர் திருநீலகண்டன் CPM, சமூக ஆர்வலர்கள் தைரியமணி, சிவானந்தம், கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன், வி.சி.க. கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் சேட்டுக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இறுதியாக சித்துசாமி நன்றி கூறினார்.
கூட்டத்தில் ஊர்பொதுமக்கள், கழகத் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பெரியார்முழக்கம் 31082023

You may also like...