ஈரோட்டில் ஜாதிமறுப்பு இணையர்கள் ஒன்றுகூடல்; மாவட்டக் கழகம் முடிவு
ஈரோடு தெற்கு மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 10.8.25 அன்று ஞாயிற்றுக்கிழமை, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு மதிமுக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். எழிலன்( மாவட்டச் செயலாளர்) வரவேற்புரை ஆற்றினார்.
மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஈரோட்டில் ஜாதி மறுப்பு இணையர்களின் ஒன்று கூடல் நிகழ்வை முழு நாள் நிகழ்வாக நடத்துவது என்றும், தமிழ்நாடு முழுவதும் இருந்து ஜாதி மறுப்பு இணையர்களை அணிதிரட்டுவது என்றும்,
சிறப்பு அழைப்பாளர்களாக தலைவர் பொதுச் செயலாளர் உள்ளிட்டோரை அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணன், குமார், ஆசிரியர் சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி, கார்மேகம், நல்லதம்பி, சசிக்குமார் போதி சத்துவா, விருதுநகர் செந்தில்,
வீரப்பன்சத்திரம் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
* 10.08.2025 அன்று கழக செயல்பாடுகளை இணையத்தில் தொடர்ந்து கவனித்து வந்த தோழர் ந.கெளரி சங்கர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) மற்றும் ம.கி எட்வின் பிரபாகரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார். தோழருக்கு கழக வெளியீடுகளை வழங்கி வரவேற்றனர்.
பெரியார்முழக்கம்இதழ்14082025
