பெரியார் பிறந்தநாள் : கழகத் தோழர்கள் எழுச்சி

சேலம் மேற்கு: சேலம் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள் விழா எழுச்சியுடன் நடைபெற்றது.
மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பறை முழக்கத்தோடு தொடங்கிய இந்நிகழ்விற்கு மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமை தாங்கினார்.
முதல் நிகழ்வாக மேட்டூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் சுதா, சரசுவதி, அறிவுமதி, தேன்மொழி, காயத்ரி ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தோழர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா கொள்கை முழக்கங்களை எழுப்ப.. தொடர்ந்து தோழர்கள் கொள்கை முழக்கங்களை எழுப்பினர். அதன் பிறகு தோழர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனப் பேரணி சமத்துவபுரம் பெரியார் சிலையில் தொடங்கி நங்கவள்ளி, மேட்டூர் RS, மேட்டூர், கொளத்தூர், காவலாண்டியூரில் நிறைவுபெற்றது.
நங்கவள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட பனங்காட்டில் வனவாசி நகரத் தலைவர் செந்தில்குமாரும், மசக்காளியூரில் வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கரும், கீழ் வனவாசி பகுதியில் வனவாசி நகரப் பொறுப்பாளர் கதிர்வேல் மற்றும் பன்னீர்செல்வமும், நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் ச.தமிழருவியும், வீரக்கலில் காயத்திரியும் கழகக் கொடியினை ஏற்றி வைத்தனர்.
மேட்டூர் RS பகுதிக்கு உட்பட்ட ராமன் நகரில் சந்திரமூர்த்தி, RS பேருந்து நிறுத்தத்தில் அறிவுமதி, NSK நகரில் NSK பிரபாகரன், தண்ணிதொட்டியில் RS பகுதிச் செயலாளர் விவேக், தேங்கல்வாரையில் R.S பகுதித் தலைவர் முரளி, RS சேசாய் நகர் படிப்பகத்தில் கிளாரா மேரி, தங்கமாபுரிப்பட்டினத்தில் SMT பிரபாகரன், புதுப்பாலத்தில் சுகந்தன், சேலம் கேம்ப் பகுதியில் மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா ஆகியோர் கழகக் கொடியினை ஏற்றி வைத்தனர்.
மேட்டூர் நகரத்துக்கு உட்பட்ட நாட்டாமாங்கலத்தில் காளியப்பன், நேரு நகரில் அம்ஜித் கான், VPK நகரில் ஆனந்த், பாரதி நகரில் மாதையன், பொன் நகரில் மார்ட்டின், மணி மெடிக்கலில் கணேஷ்குமார், குமரன் நகரில் திவாகர், ஒர்க் ஷாப் கார்னரில் தேவராஜ், மேட்டூர் பேருந்து நிலையத்தில் தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் சேலம் மாவட்ட பொருளாளர் சம்பத், மசூதி தெருவில் சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் அன்பு ஆகியோர் கழகக் கொடியினை ஏற்றி வைத்தனர்.
கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொளத்தூர் பேருந்து நிலையத்தில் பா.குமார், வாழ்குறிச்சியில் காயத்ரி, திருவள்ளுவர் நகரில் மூத்த தோழர் கோவிந்தராஜ், நான்கு ரோட்டில் பிரசாந்த், கொளத்தூர் பெரியார் படிப்பகத்தில் சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.
காவலாண்டியூர் பகுதிக்குட்பட்ட கண்ணாமூச்சியில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மூலப் பாதையில் ராஜேந்திரன், காந்தி நகரில் பச்சியப்பன், செட்டியூரில் பழனிச்சாமி, சேசாய் காட்டுவளவுவில் காவலாண்டியூர் கிளைச் செயலாளர் தங்கராசு, காவலாண்டியூரில் சேலம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரசுவதி ஆகியோரும் கழகக் கொடியினை ஏற்றி வைத்தனர்.
இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் மதியம் மற்றும் இரவு அசைவ உணவு பரிமாறப்பட்டது. மேலும் பெரியார் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக சேலம் மாவட்டம் முழுவதும் 800 சுவரொட்டிகளும், எல்.இ.டி மின் விளக்குகளால் பெரியாரை அலங்கரித்தும் வைத்திருந்தனர்.
கோவை : கோவை மாவட்டக் கழக சார்பில் தந்தை பெரியார் 146வது பிறந்த நாள் விழா கவுண்டம் பாளையத்தில் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்றது. தோழர் மாதவன் உறுதிமொழி கூறினார்.
இதில் திமுக கவுன்சிலர் கிருஷ்ண மூர்த்தி, திமுக வார்டு செயலாளர் தன்ராஜ், சிவக்குமார், கருணா ஆனந்த், சிவ ரமேஷ், முருகேசன் கலந்து கொண்டனர்.
சிவானந்தா காலனியில் நடைபெற்ற நிகழ்விற்கு சதீஸ் தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் வெங்கட் அவர்கள் வரவேற்புரையாற்றினார். மேலும் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை.திருவள்ளுவன், மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாநகரத் தலைவர் நிர்மல்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் தமிழ்ப்புலிகள் கட்சிப் பொதுச் செயலாளர் இளவேனில், துணைப் பொதுச்செயலாளர் இராமச்சந்திரன், விசிக தகவல் தொடர்பு மாவட்ட அமைப்பாளர் கோவை ராசா, திமுக வட்ட செயலாளர் ஆறுமுகம் பங்கேற்றனர். மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
தொடர்ந்து காந்திபுரம் பெரியார் சிலைக்கு மாநகரத் தலைவர் நிர்மல்குமார் தலைமையிலும், பீளமேட்டில் மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் தலைமையிலும், உப்பிலிபாளையம் காந்திநகர் பகுதியில் இராமகிருஷ்ணன் முன்னிலையில், நிலவழகன் தலைமையிலும், நியூ சித்தாபுதூரில் மறைந்த திராவிடர் இயக்கப் பற்றாளர் சக்திவேல் திடலில் காந்திபுரம் பகுதி அமைப்பாளர் லோகு தலைமையிலும் நடைபெற்றது. மனோரஞ்சனி உறுதிமொழி கூறினார்.
இதில் திமுக பகுதிப் பொறுப்பாளர் இராஜேந்திரன், திமுக இளைஞரணி சுபாஷ், சூலூர் தமிழ்ச்செல்வி, சிவலிங்கம், நாகலட்சுமி, நவீன், அறிவுக்கனல், அன்னூர் அறிவு, கருணா ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி: ஆனைமலை முக்கோணத்தில் ஒன்றியக் கழகச் செயலாளர் வே. அரிதாஸ் தலைமையில், வே.வெள்ளிங்கிரி முன்னிலையில் பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. ஆனைமலை பேரூராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வி கழகக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார்.
மேலும் ஆனைமலை சமத்துவபுரம் மற்றும் பொள்ளாச்சியிலும் கழக சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் ஆனைமலை அப்பாதுரை, மணி, வினோதினி, நடராஜ், கணேஷ், ஆனந்த், சபரிகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் காரமடையில் பகுதிப் பொறுப்பாளர் அமுல்ராஜ் தலைமையில் பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காரமடை பேருந்து நிறுத்தத்திலும் கொண்டாடப்பட்டது.

இதில் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், காரமடை அமைப்பாளர் ஜெகதீஷ், பகுத்தறிவாளர் கழகம் ரங்கராஜ், இரும்பொறை சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு 17.09.24 செவ்வாய் காலை 10.00 மணி அளவில் திருப்பூர் இரயில் நிலையம் முன்பு உள்ள தந்தை பெரியாரின் சிலை முன் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கழகப் பொருளாளர் துரைசாமி தலைமை தாங்கினார், மாவட்டத் தலைவர் முகில் ராசு முன்னிலை வகித்தார்.
முதல் நிகழ்வாக பெரியாரின் சிலைக்கு கழகப் பொருளாளர் துரைசாமி, நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் தமிழ் அமுதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்பொழுது தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி கொள்கை முழக்கங்களை எழுப்ப தொடர்ந்து தோழர்கள் கொள்கை முழக்கமிட்டார்கள்.
அடுத்து தந்தை பெரியார் குறித்து கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு, நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன், இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் கழகத்தைச் சேர்ந்த பல்லடம் தேன்மொழி சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பை படிக்க தோழர்கள் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள்.
அடுத்ததாக கழகத் தோழர்கள் ரூபசிரி – அரிசுகுமார் இணையரின் மகளுக்கு கழகப் பொருளாளர் துரைசாமி கழகத் தோழர்களின் மகிழ்ச்சியான கரவொலிக்கு இடையே மிழினா (அழகிய விழியுடையாள்) என்று பெயர் சூட்டினார்.
பெரியார் பிறந்தநாள் மகிழ்வாக கூடியிருந்த தோழர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில, மாவட்ட, மாநகர ஒன்றிய பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, நவீன மனிதர்கள் தொடர்ந்து தோழர்கள் பங்கேற்றனர்.
மடத்துக்குளம் : மடத்துக்குளம் ஒன்றியக் கழக சார்பில் கடத்தூர், காரத்தொழுவு, கணியூர், மடத்துக்குளம் ருத்தரபாளையம் பகுதிகளில் கழக் கொடியேற்றிக் கொண்டாடப்பட்டது. மேலும் கொழுமம் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில் தோழர்கள் த.கணக்கன், சு.சிவானந்தம், வே.அய்யப்பன், வெ.சரவணன் வினோத், கதிரவன், மதிமுக சாந்து முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு தெற்கு : ஈரோட்டில் பெரியாரிய இயக்கங்களின் சார்பில் கல்வி உரிமையை மீட்போம்! மாநில உரிமையைக் காப்போம்! என்ற முழக்கத்துடன் கல்வி உரிமை மீட்புப் பேரணி நடைபெற்றது. இதில் ஈரோடு கிழக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கல்வியாளர் பிரின்சு கஜேந்திரபாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பேரணி ஈரோடு சம்பத் நகரில் துவங்கி தந்தை பெரியார் தலைமை மருத்துவமனை வழியாக சென்று ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள பெரியார் சிலையில் நிறைவடைந்தது. பின்னர் அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, அனைவரும் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் ஈரோடு தெற்கு மாவட்டக் கழகத் தோழர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய இயக்கங்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
ஈரோடு வடக்கு : ஈரோடு வடக்கு மாவட்டக் கழக சார்பில் கொளப்பலூர், கோபி, காந்திநகர், அளுக்குளி, இந்திரா நகர், காசிபாளையம், சத்தி, மூணுவீடு, நம்பியூர், குருவரெட்டியூர் உள்ளிட்டப் பகுதிகளில் பெரியார் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழக சார்பில் மாவட்டத் தலைவர் நெமிலி திலிபன் தலைமையில் பெரப்பேரி கிராமத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் வாணியம்பாடி, புல்லூர் பகுதியில் புல்லூர் சுரேஷ் தலைமையிலும், இராணிப்பேட்டை சமத்துவபுரத்தில் பாஸ்கரன் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் சிவா தலைமையில் குடியாத்தம் பகுதியிலும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஆம்பூர், MV குப்பத்தில் அம்பேத்கர் இரவுப் பள்ளி ஏற்பாடு செய்த பெரியார் பிறந்தநாள் விழாவில் மாவட்டச் செயலாளர் சிவா தலைமையில் கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். வாணியம்பாடி பெரியார் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் சுரேசு பங்கேற்றார்.
தஞ்சாவூர் : பேராவூரணியில் தந்தை பெரியார் சிலைக்கு பேராவூரணி ஒன்றியச் செயலாளர் மருத. உதயகுமார் தலைமையில் சீனி.கண்ணன் மாலை அணிவித்தார். நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம், ஒன்றியத் தலைவர் அ. கோவேந்தன், சேது ஒன்றிய அமைப்பாளர் சுப. ஜெயச்சந்திரன், அறிவுச் செல்வன், அரும்புச் செல்வன் மற்றும் தோழமை இயக்கத்தினர் கலந்துகொண்டனர்.
முடச்சிக்காடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கும், சேதுபாவாசத்திரம், மரக்காவலசையில் பெரியசாமியின் சக்கரவர்த்தி நினைவு பெரியார் இல்லத்தின் மாடியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டக் கழக சார்பில் காளையார்கோவில் சமத்துவபுரம், காரைக்குடி இளங்கோவன் இல்லம், காரைக்குடி பெரியார் சிலை மற்றும் பனந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் பெரியார் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நாமக்கல் : பள்ளிபாளையத்தில் கழக சார்பில் தந்தை பெரியார் 146வது பிறந்தநாள் விழா கழகக் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

பெரியார் முழக்கம் 26.09.2024 இதழ்

You may also like...