பரப்புரைப் பயணங்கள் தொடங்கின- பெரியாரின் பெரும் தொண்டுகள் மக்களிடையே விளக்கம்! இளைஞர்கள் பெண்கள் பேராதரவு…
பெரியார் ஏன் எதிரிகளைப் பதறவைக்கிறார்? பரப்புரைப் பயணம் கடந்த 15-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது 16-ஆம் தேதி ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடங்கியது.
கழக செயல் வீரர்கள் தனி வாகனங்களில் பயணத்தில் பங்கேற்கிறார்கள். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கழக செயல் வீரர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த பரப்புரையில் இளைஞர்களும் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். கழக நூல்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். பெரியாரின் எதிர்நீச்சல் அவர் உருவாக்கிய சமூக மாற்றங்களைக் கழகப் பேச்சாளர்கள் மக்களிடம் எடுத்துக் கூறுகிறார்கள். கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.
பயணங்களின் செய்தித் தொகுப்பு
சென்னை: “பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?” எனும் தலைப்பில் சென்னை அணி செல்லும் பரப்புரைப் பயணத்தின் தொடக்க விழா,இராயப்பேட்டையில் 15.03.2025 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் சிறப்புரையாற்றி பரப்புரைப் பயணத்தை துவக்கி வைத்தார். திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.என்.துரை, 119-வது வட்ட மாமன்ற உறுப்பினர் கமலா செழியன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர்.
முதல் நாள் தரமணி பேருந்து நிலையம், வேளச்சேரி காந்தி சாலை, பள்ளிக்கரணை போலீஸ் பூத், நன்மங்கலம் ஏழுமலை தெரு ஆகிய நான்கு இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கருத்துரையாற்றிய தோழர்கள்: தபசி குமரன், இரா உமாபதி, சேத்துப்பட்டு இராசேந்திரன், பேராசிரியர் மணி கோ பன்னீர்செல்வம், திருப்பூர் மகிழவன், பேரன்பு, வழக்கறிஞர் ஆதன், முனி ஆறுமுகம் ஆகியோர்.
பொன்ராஜ் – வீரமணி கலைகுழுவினரின் நிகழ்ச்சியோடு, அருள்தாஸ் – பேரன்பு ஆகிய கழகத் தோழர்கள் பாடல்களையும் பாடினர். திமுக தோழர் வேளச்சேரி மணிமாறன் மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தார். மற்ற கழகத்தோழர்கள் களப்பணியாற்றினர்.
பாவலரேறு தமிழ்களம் (மேடவாக்கம்) – தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பொழிலன் இரவு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
16/3/25:கிழக்கு தாம்பரம் வால்மீகி தெரு, மேற்கு தாம்பரம் சண்முகம் சாலை, வண்டலூர் மாணிக்க ஜலகண்ட தெரு சந்திப்பு, ஊரப்பாக்கம் தேநீர் கடை சந்திப்பு ஆகிய நான்கு இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
கருத்துரையாற்றிய தோழர்கள்: அன்பு தனசேகர், இரா உமாபதி, திருப்பூர் மகிழவன், பேரன்பு, அப்துல் காதர் (மமக) ஆகியோர். பொன்ராஜ் – வீரமணி கலைக்குழுவினரின் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரன்பு பாடல்களை பாடினார். துரை மணிவண்ணன் மதிமுக பெருங்களத்தூர் பகுதிச் செயலாளர், ம.யாக்கூப் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் அமீன் (தமுமுக) ஆகியோர் உணவு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்த பரப்புரை பயணத்தின் நோக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல சொந்தமாக பிரச்சார வாகனம் வாங்கப்பட்டு, அந்த வாகனம் மக்களை கவரும் விதமாக வடிவமைப்பும் செய்யப்பட்டது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அருண் தலைமையில், மயிலை குமார் வடிவமைப்பு பணிகளைச் செய்தார். திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் சூர்யா, செயலாளர் ராஜேஷ், அருண், வீரா முத்து
உள்ளிட்ட பல தோழர்கள் இந்த பணியை மேற்கொண்டனர்.
இரண்டு நாட்கள் தொடர் பரப்புரைப் பயணத்தில் மக்கள் பங்களிப்பாக (கடைவீதி வசூலாக) ரூ.7400 அளித்துள்ளனர். கழக நூல்கள் 5500 ரூபாய் விற்பனை ஆனது.
சேலம்: 16.03.2025 கொளத்தூரில் மேட்டூர் டி.கே.ஆர்.இசைக் குழுவின் பகுத்தறிவுப் பாடல்களோடு எழுச்சியுடன் பரப்புரைப் பயணம் தொடங்கியது. தொடக்கக் கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழக கொளத்தூர் நகரத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். திமுக கொளத்தூர் ஒன்றிய செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் கழக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரப்புரைப் பயணக் குழுவை சேலம் நாடாளுமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக சேலம் மேற்கு மாவட்ட செயலாளருமான திரு.டி.எம்.செல்வகணபதி அவர்கள் கொடி அசைத்து தொடங்கிவைத்து, உரை நிகழ்த்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ‘பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்’ என்ற என்ற தலைப்பில் பரப்புரைப் பயண நோக்கத்தை விளக்கி உரையாற்றினார்.
முன்னதாக, திராவிட முன்னேற்றக் கழகத் தோழர் வழக்கறிஞர் சரவண பரத் அவர்கள் சிறப்புரையாற்றினார். இறுதியாக கொளத்தூர் நகரக் கழக செயலாளர் பா.அறிவுச்செல்வன் நன்றி தெரிவித்தார்.
மேட்டூர் பேருந்து நிலையம், நங்கவள்ளி, ஓமலூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் முதல் நாள் பரப்புரை நடைபெற்றது. கழகத்தின்மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின், நங்கவள்ளி நகரச் செயலாளர் அ.செ.சந்திரசேகரன், சிந்தாமணியூர் நகரச் செயலாளர் ரவி ஆகியோர் தலைமை வகித்தனர்.
நகரச் செயலாளர் குமரப்பா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, திராவிட முன்னேற்றக் கழக காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர் அறிவழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
தோழர்கள் அனைவருக்கும் மதிய உணவு மாவட்ட பொருளாளர் சம்பத் அவர்களால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்பு மற்றும் ராஜேந்திரன் அனைவருக்கும் பழச்சாறு வழங்கினார்கள்.
தோழர்களுக்கு இரவு உணவை திராவிட முன்னேற்றக் கழக ஓமலூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ் அவர்கள் வழங்கினார். இறுதியாக நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், சிந்தாமணியூர் நகர தலைவர் ஜெய பிரகாஷ் , ஆகியோர் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஓமலூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஓமலூர் பேரூர் கழகச் செயலாளர் ரவிச்சந்திரன், பேரூர் கவுன்சிலர் பிரகாஷ், மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரமேஷ், பேரூர் துணைச் செயலாளர் லியாகத் அலி, சீனி மீரான், சேட்டு ஆகிய தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டனர். அனைத்து இடங்களிலும் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்களுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
பயணக் குழுவின் கடை வீதி வசூல் ரூ.8804 , புத்தக விற்பனை மொத்தம் ரூ. 1,245 (249 புத்தகங்கள் முதல் நாளில் விற்பனை ஆனது). கடை வீதி வசூலில் பெண் தோழர்கள் பெருமளவில் பங்கெடுத்தனர்.
கள்ளக்குறிச்சி: 16/03/2025 ஞாயிறு காலை 10 மணியளவில் மேல் சிறுவள்ளூர் கூட்ரோடு மும்முனை சந்திப்பில் விழுப்புரம் பயணக்குழுவின் பிரச்சாரம் தொடங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.ராமர் தலைமையில், விழுப்புரம் மாவட்ட தலைவர் பூ.ஆ .இளையரசன் முன்னிலையில் முதல் கூட்டம் நடைபெற்றது. கழகத்தின் பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிராபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ந.அய்யனார், சூலுர் பன்னீர்செல்வம் ஆகியோர் பயண நோக்கத்தினை விளக்கி உரையாற்றினர்.
12 மணியளவில் தானிப்பாடி பகுதியிலும், மாலை 3 மணியளவில் தண்டராம்பட்டு எம்.ஜீ ஆர் சிலை அருகிலும், மாலை 6 மணியளவில் திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகிலும் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. பயணத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ந. அய்யனார் தொடர் சிறப்புரை நிகழ்த்தினார். மதியம் விசிக வை சார்ந்த தோழர் வெற்றிமுரசு தோழர்களுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்தார்.
ஈரோடு: 16-03-25 காலை 10 மணியளவில் பெரியார்- அண்ணா நினைவகத்தில் தொடக்க விழா நடைபெற்றது.பரப்புரைப் பயணத்தை மேயர் செல்வராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கழக மாநில அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமை தாங்கினார். கழக வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.
திருப்பூர், கோவை தோழர்கள் பயணத்தில் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட தலைவர் முகில்ராசு, மாநகர பொறுப்பாளர் முத்து ஆகியோர் குடும்பத்தோடு பங்கேற்றனர். கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
விசிக ஈரோடு, திருப்பூர் மண்டல துணை தலைவர் ஜாபர் அலி, காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் திருச்செல்வம், சமூகநீதிக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் கண குறிஞ்சி உள்ளிட்ட தோழமை அமைப்பினர் கலந்து கொண்டனர். சாலையூர், கணபதிபாளையம், கருமாண்டம்பாளையம், ஒத்தக்கடை, கொடுமுடி என 5 இடங்களில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
தோழர்கள் கோபி இராம இளங்கோவன், ஆசிரியர் சிவகாமி, பரிமளராசன், திருப்பூர் முத்து, இரத்தினசாமி, நிர்மல் குமார், செழியன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். பாலசுப்ரமணியம், எல்ஐசி கோவிந்தசாமி, ஹசன் திமுக உணவு வழங்கினர். கடைவீதி வசூலாக முதல் நாள் ரூ 2,900 பொதுமக்களால் வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 20032025இதழ்
