சனாதன-ஜாதி எதிர்ப்புக் கூட்டங்களுடன் கழகம் எடுத்த அம்பேத்கர் விழாக்கள்!
சென்னை புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, 14-04-25 காலை 9:30 மணியளவில், அடையார் அம்பேத்கர் மணி மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 10:30 மணியளவில் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் மயிலாப்பூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது…
மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு ராஜேந்திரன், கழக இளைஞரணி அமைப்பாளர் ப.அருண ஆகியோர் உட்பட சென்னை கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
தென்சென்னை காலை 8 மணிக்கு, சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலைக்கு, தோழர்கள் மாலை அணிவித்து, கொள்கை முழக்கமிட்டு மரியாதை செலுத்தினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “அம்பேத்கருக்கு இந்துமதச் சாயம் பூசும் அவதூறுகளுக்கு மறுப்பு” நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வை திவிக தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், தோழர் இரண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடு… மயிலாடுதுறை மாநாட்டுத் தீர்மான விளக்கத் தொடர் கூட்டம்
ஏப்ரல் 8,10,12 ஆகிய நாட்களில் மாலை 5 மணியளவில் பெரம்பூர் காந்தி சிலை அருகில், வில்லிவாக்கம், அம்பேத்கர் சிலை அருகில், சேத்துப்பட்டு, அம்பேத்கர் திடலில் கூட்டங்கள் நடைபெற்றன. ஜாதி ஒழிப்பு பகுத்தறிவுப் பாடல்களை வீரமணி, பேரன்பு பாடினர். சேத்துப்பட்டு இராஜேந்திரன், தினகரன், சேத்துப்பட்டு பகுதி பொறுப்பாளர் மா. இராஜன் அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, U2 BRUTUS மைனர், அன்பு தனசேகர் ( தலைமை செயற்குழு உறுப்பினர்), இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), எட்வின் பிரபாகரன் (தென் சென்னை மாவட்ட அமைப்பாளர்), தபசி குமரன் (தி.வி.க-தலைமை நிலையச் செயலாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) சுபாஷ் சந்திர போஸ் (விசிக- மண்டலச் செயலாளர்), சதாசிவம் (விசிக-மாணவரணி செயலாளர்), திருப்பூர் மகிழவன், பேரன்பு (தமிழ்நாடு மாணவர் கழகம் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் கருத்துரையாற்றினர். மேலும் தி.வி.க தோழர்கள் விசிக தோழர்கள், தோழமை இயக்கத் தோழர்களும் பகுதி மக்களும் கலந்து கொண்டனர்.
4வது கூட்டம் பொதுக்கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது, தானா தெரு, புரசைவாக்கம் பகுதியில் வடசென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஜாதி ஒழிப்பு பகுத்தறிவு பாடல் பாடிய வீரமணி, பேரன்பு, மகிழவன், தபேலா அருண் ஆகியோரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
திராவிட இயக்க சிந்தனையாளர் எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் அவர்களின் படத்திறப்பு மற்றும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கருத்துரையாற்றிய தோழர்கள் திருப்பூர் மகிழவன், இரண்யா, புதுவை தீனா(பெரியார் சிந்தனையாளர் இயக்கம்), தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்),நிறைவாக கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். அருள்தாஸ் திவிக நன்றியுரை கூறினார். மேலும் தி.வி.க தோழர்கள், வழக்கறிஞர் திருமூர்த்தி மற்றும் இயக்க தோழர்களும், பகுதி மக்களும் கலந்து கொண்டனர். பரப்புரைப் பயணத்தில் முழுமையாகச் சென்ற கழக இளைஞரணி அமைப்பாளர் ப. அருண், எட்வின் பிரபாகரன் தொடர்ந்து பாடல்கள் பாடிய வீரமணி ஆகியோர்க்கு பொதுச்செயலாளர் சால்வை அணிவித்து பாராட்டினார்.
மேடையில் வழக்கறிஞர் திருமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, திருப்பூர் மகிழவன் ஆகியோரின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடபட்டது. நிறைவாக அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
திருப்பூர்: மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 14.04.2025 அன்று காலை 09.30மணியளவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள், சமத்துவ நாள் நிகழ்வு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. கழகப் பொருளாளர் சு.துரைசாமி, அவர்களின் தலைமையில் மாவட்ட தலைவர் முகில்ராசு அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் குறித்தும் அவர் ஆற்றியபணிகள், குறித்தும் இனி நாம் மேற்கொள்ளவிருக்கும் செயல்பாடுகள் குறித்துக் கழகத்தின் இணையதளப் பொறுப்பாளர் பரிமளராசன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி ஆகியோர் உரையாற்றினார்கள். நிறைவாக கழகப் பொருளாளர் சு.துரைசாமி அவர்கள் நிறைவுறையாற்றினார்.
மேலும் தமிழ்நாடு மாணவர் கழக முத்தமிழ் ஜாதி ஒழிப்பு, சமத்துவ நாள் உறுதிமொழியினைக் கூற உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழக யாழினி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து “இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடு!” எனும் தலைப்பில் திருப்பூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் தெருமுனக் கூட்டங்கள் நடைபெற்றன.
10.00 மணி – பெரியார் அண்ணா சிலை, 12.00 மணி – அனுப்பர்பாளையம், 3.30 மணி அம்மாபாளையம் பகுதியிலும் 5 மணிக்கு ஆத்துப்பாளையம் பகுதியிலும் கூட்டங்கள் நடைபெற்றன.
தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, ஊடகவியல் பொறுப்பாளர் துரை.பரிமளராசன், புரட்சிகர இளைஞர் முன்னணி பொறுப்பாளர் தமிழ்அமுதன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகரத் தலைவர் வீ.தனபால், மாநகரச் செயலாளர் மாதவன், மாநகர அமைப்பாளர்கள் முத்து, சரசுவதி, ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், பல்லடம் ஒன்றிய அமைப்பாளர் சண்முகம், தனகோபால்,பல்லடம் தேன்மொழி, முத்துலட்சுமி, ராஜ்குமார் ஆத்துப்பாளையம் மதன், இனியன், 15 வேலம்பாளையம் கார்த்திக், வெங்கட் சக்தி, தமிழ்நாடு மாணவர் கழக தோழர்கள் சிபி, யாழிசை, எழில் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேட்டூரில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 135 – வது பிறந்த நாள் விழா சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பாக மேட்டூர் அச்சங்காட்டிலுள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கமிடப்பட்டது
நிகழ்வில் தலைமைக்குழு உறுப்பினர்கள் காவை ஈஸ்வரன், சக்திவேல், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் மகளிரணி பொறுப்பாளர் சுதா ஒன்றிய பொறுப்பாளர் விஜி மற்றும் Rs பகுதி செயலாளர் விவேக் மற்றும் பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்து கொண்டனர்.
சேலம்: கிழக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தெருமுனைக் கூட்டங்கள்!
கருப்பூர் காவல் நிலையம் அருகில், கொல்லப்பட்டி பேருந்து நிறுத்தம் பழைய சூரமங்கலம் பகுதி, பெரிய அம்மாபாளையம் பகுதியில் ஏப்ரல் 12-இல் 4 தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழக சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், ஏற்காடு பெருமாள் முன்னிலை வகித்தார்.
பொன்ராஜ் – கடலரசன் அவர்களின் பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி, சேலம் மாநகர தலைவர் பாலு, சேலம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஏற்காடு தேவ பிரகாஷ் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினர்.
இறுதியாக இளம்பிள்ளை நகரத் தலைவர் ரமேஷ், அருள்பாண்டியன், சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் தோழர் பிரபாகரன் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. கடைவீதி உண்டியல் வசூலில் தோழர்கள் டேவிட், தங்கதுரை, அருள்பாண்டியன், முத்துராஜ், தேவராஜ், கோகுல், கவியரசு,பிரபாகரன் ஆகியோர் ஈடுபட்டனர்.
கருப்பூர் பகுதியில் கடைவீதி வசூலின் போது பெண்கள் அதிக ஆதரவு அளித்து தாமாக முன்வந்து நன்கொடை அளித்தனர்.
ஈரோடு: தெற்கு மாவட்ட தி.வி.க. சார்பில் தெருமுனைக் கூட்டம் 13.04.25 அன்று சூரம்பட்டி காவல் நிலையம் அருகில் நடைபெற்றது. 14.04.25 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பேரணி மற்றும் சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்வு நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் ஈரோடு கொள்ளுக்காட்டு மேடு பகுதியில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி அவர்கள் தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. செந்தில், விஜய் ரத்தினம், பவித்ரா, நல்லதம்பி, சுரேஷ், சந்தோசு, பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனர் மேலும் கொள்ளுக்காட்டு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முத்துச்சாமி அவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தெருமுனைக் கூட்டம் நடத்த உதவியதோடு தோழர்களுக்கு இரவு உணவு அளித்து தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை இப்பகுதியில் நடத்த வேண்டுமாய் கேட்டுக் கொண்டார்.
பெரியார் முழக்கம் 17042025இதழ்
