விஜயமங்கலம் விசு முடிவெய்தினார்

ஈரோடு வடக்கு : கழக பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விஜயமங்கலம் விசு உடல்நலக்குறைவால் 11.05.2024 அன்று அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த தோழர் விசுவின் உடலுக்கு கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வகுமார், வடக்கு மாவட்ட அமைப்பாளர் நிவாஸ், இரமேசு மற்றும் கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
குறிப்பு : விஜயமங்கலம் விசு அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு 23.05.2024 அன்று காலை மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றுகிறார்.

பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

You may also like...