ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கழகம் ஆர்பாட்டம் கல்வி உரிமையை பறிக்காதே

ஒன்றிய அரசு தமிழ்நாட்டின்‌ பள்ளிக்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி உரிமைகளைப் பறிப்பதை எதிர்த்து தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டுள்ளது. திமுக சார்பில் டெல்லியில் கண்டன‌ ஆர்ப்பாட்டம்‌ நடந்து முடிந்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம்‌ தமிழ்நாடடின்‌ முக்கிய நகரங்களில் பிப்.13 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. பல்கலைக் கழக பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிகளை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்த புதிய விதிகளில் பல்கலைக்கழகங்கள் ஒன்றிய அரசின்‌ நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆபத்து அடங்கியுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி துண்டறிக்கை அச்சிடப்பட்டு மக்களிடம் வழங்கப்பட்டன. கழகம்‌ ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு…
சேலம்: மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் யூஜிசி விதிகளில் திருத்தம் செய்து மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கிற, இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கிற ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து 13.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை வகித்தார்.
சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல், மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, தலைமைக் குழு உறுப்பினர்கள் காவை ஈசுவரன், அ.சக்திவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுதா, சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் காஜாமைதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அணி பொறுப்பாளர் தினேஷ், திராவிட முன்னேற்றக் கழக சேலம் மாவட்ட இலக்கிய அணித் தலைவர் கோனூர் வைரமணி, த.மு.மு.க மாநில செயற்குழு உறுப்பினர் சையத் சலாவுதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்புச் செயலாளர் சுல்தான், ம.தி.மு.க மாநகரச் செயலாளர் அருள்மாது, தமிழ் புலிகள் கட்சி மத்திய மாவட்டச் செயலாளர் ராவணபிரபு, த.பெ.தி.க மாவட்டச் செயலாளர் தங்கராஜ், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் சுந்தரவதனம், மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் மாயன், தமிழ்தேச மக்கள் முன்னணி மாரியப்பன், புரட்சிகர இளைஞர் முன்னணி வின்சென்ட், சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் மாநகரத் தலைவர் பாலு, ஆத்தூர் நகரத் தலைவர் மகேந்திரன், சேலம் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் தேவபிரகாஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி யூஜிசி வரைவு அறிக்கையின் புதிய நெறிமுறைகள் குறித்து விளக்க உரை நிகழ்த்தினார்கள். இறுதியாக சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் தோழமை இயக்க தோழர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை: இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் எதேச்சதிகாரத்தையும் திணிக்க முயலும் யூஜிசி-யைக் கண்டித்து 13.02.2025 அன்று மாலை 5 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், திமுக மாணவரணி மாநிலச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், பெரியார் சிந்தனையாளர் இயக்க‌ ஒருங்கிணைப்பாளர் புதுவை தீனா, தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் இளமாறன், புமாஇமு மாநில செயற்குழு உறுப்பினர் மணியரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பெரியார் விழுது சந்தோஷ் கொள்கைப் பாடலை பாடினார். அன்பு தனசேகர், வேழவேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், ம.கி.எட்வின் பிரபாகரன், இராயப்பேட்டை ப.அருண், பேரன்பு உள்ளிட்ட பல கழகத் தோழர்களும் பல்வேறு தோழமை இயக்கத்தினரும், மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஈரோடு: ஒன்றிய அரசு யூஜிசி விதிகளில் செய்த சட்டத் திருத்தத்தைக் கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு மாவட்டத்தின் சார்பாக ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் (13.2.2025) காலை 11-மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.கொங்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் நிறுவனர் விஸ்வநாதன், ஆதித்தமிழர் பேரவை தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளர் வி.கனியமுதன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் ஈரோடு மாவட்டப் புறநகர் செயலாளர் சரவணப் பெருமாள் ஆகியோர் தங்களது கண்டன உரையை பதிவு செய்தனர். ஈரோடு தெற்கு- வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் தோழர்களும், தோழமை அமைப்பைச் சார்ந்த தோழர்களும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருவாரியாகப் பங்கேற்றனர்.
திருப்பூர்: ஒன்றிய பாஜக அரசு யூஜிசி விதிகளில் திருத்தம் செய்து கல்வி உரிமையைப் பறிக்காதே! இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்காதே! எனும் முழக்கங்களுடன்‌ திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 13.02.25 வியாழன் மாலை 05.00 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகில் ராசு தலைமை தாங்கினார். மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து வரவேற்பு உரையாற்றினார். மாநகரச் செயலாளர் மாதவன், மாநகர அமைப்பாளர்கள் சரஸ்வதி, முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சு.துரைசாமி மாநிலப் பொருளாளர் திவிக, எஸ்.இரவிச்சந்திரன் மாவட்டச் செயலாளர் இந்திய பொதுவுடமை கட்சி, விடுதலை செல்வன் துணைப் பொதுச் செயலாளர், ஆதித்தமிழர் பேரவை துரை வளவன் துணைப் பொதுச் செயலாளர் விசிக, க.வே.கதிரவன் மாநகரத் தலைவர் புரட்சிகர இளைஞர் முன்னணி, பாரதி சுப்பராயன் தலைவர்(நவீன மனிதர்கள் குழு), துரை.பரிமளராசன் இணையதள பொறுப்பாளர், சங்கீதா(மாவட்ட அமைப்பாளர் திவிக), சி.இரா.கனல்மதி மாவட்டச் செயலாளர் தமிழ்நாடு மாணவர் கழகம், அய்யப்பன் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் நன்றி கூறினார். மா.ராமசாமி தெற்கு பகுதி செயலாளர், கோவிந்தராஜ் நகர அமைப்பாளர் பல்லடம் திவிக, கணக்கன் ஒன்றியத் தலைவர் மடத்துக்குளம், சு.சிவானந்தம் ஒன்றியச் செயலாளர் மடத்துக்குளம், தாரை செல்வராஜ் அமைப்பாளர் தாராபுரம், இரவி, முத்துலட்சுமி, கனபதி, இராஜ்குமார், சங்கவி, சிரிஜா,பெரியார் பிஞ்சு தழல் சிறகன், இயல் ஆழியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
பொள்ளாச்சி: திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக யூஜிசி விதிகளில் திருத்தம் ஒன்றிய அரசே கல்வி உரிமையைப் பறிக்காதே !இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்காதே! கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், திராவிட இயக்க தமிழர் பேரவை, வெல்ஃபேர் கட்சி, தமிழ் புலிகள், மே 17 இயக்க தோழர்கள் கலந்துகொண்டனர்.
தேனி : யுஜிசி விதிகளில் திருத்தம் செய்து மாநிலங்களின் கல்வி உரிமை மறுக்கிற, இட ஒதுக்கீட்டு உரிமையை மறுக்கிற ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தேனி பழைய பேருந்து நிலையத்தில் காலை 10 மணி அளவில் 13.02.2025 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திவிக தேனி மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் யோகேஸ்வரன் அவர்கள் கண்டன உரையாற்றினார். முற்போக்கு அமைப்புக்கள் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை: யுஜிசி விதிகளில் திருத்தம் செய்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்காதே! தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு உரிமையை பறிக்காதே! என்ற முழக்கத்துடன் 13.02.25 அன்று மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையேற்க, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழர் தன்னுரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன், தமிழர் உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப்பு.மகேஷ், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் பாசித், தபெதிக மாவட்ட தலைவர் ரசீத்கான், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை குழு உறுப்பினர் இளையராஜா, தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் சோலை.மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
வேலூர்: இந்திய ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்து உள்ள யுஜிசி புதிய திருத்தத்தை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் வேலூர் மாவட்டம் சார்பாக 13.2.2025 குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் திலிபன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் குபேந்திரன் சிபிஎம் குடியாத்தம் நகரசெயலாளர், ராஜம் BSP வேலுர் மாவட்ட செயலாளர், சுந்தர் மக்கள் அதிகாரம், சிவக்குமார் திக வேலூர் மாவட்ட தலைவர், அன்பரசன் திக பகுத்தறிவு பேரவை, கஜேந்திரன் திவிக,ஜெயக்குமார் விசிக, அமல்ராஜ் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் திவிக, இரா.சிவா மாவட்ட செயலாளர் திவிக ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பெரம்பலூர்: ஒன்றிய அரசே!கல்வி உரிமையைப் பறிக்காதே! இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்காதே! எனும் முழக்கத்தோடு கண்டன ஆர்ப்பாட்டம் 13.02.2025,மாலை 5.30 மணிக்கு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. வரவேற்புரை ராஜேஸ்குமார் தி.வி.க துரை.தாமோதரன் மாவட்ட தலைவர், தங்கராசு மாவட்டத் தலைவர் (தி.க.), ரமேஷ்,மாவட்ட செயலாளர் சிபிஎம், ஞானசேகரன் மாநில கட்டுப்பாட்டுக்குழு சிபிஐ, காவிரி நாடன் மக்கள் அதிகாரம், காமராசு (வழக்கறிஞர்) மாவட்ட செயலாளர், பகுஜன் சமாஜ் கட்சி அன்புச் செல்வன், இடதுசாரி செயல்பாட்டாளர் மக்கள் நல பாதுகாப்பு சங்க ஆலோசகர் N.செல்லத்துரை, மாவட்ட செயற்குழு அக்ரி சிபிஎம்,ஆறுமுகம் (தி.க.), வீர செங்கோலன் மாநில விவசாய அணி செயலாளர் வி.சி.க, இராமர் தமிழ்நாடு அறிவியல் மன்றம், ஈஸ்வரன் தொழிலாளர் கட்சி, குதரதுல்லா மாவட்டச் செயலாளர் த.மு.மு.கழகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கள்ளக்குறிச்சி: 14/2/2025 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் வாணாபுரம் பகண்டை கூட்டுச்சாலையில் யூஜிசி விதியில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்தையும் கல்வி மற்றும் இடஒதுக்கீடு பறிக்கப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் க.ராமர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ரிசிவந்திய ஒன்றிய அமைப்பாளர் இராகார்மேகம், ரிசிவந்திய ஒன்றிய தலைவர் மா.குமார், மு.நாகராஜ், கி.ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக மாவட்ட தலைவர் க.மதியழகன், மாவட்ட அமைப்பாளர் சி.சாமிதுரை, அறிவியல் மன்ற அமைப்பாளர் வீ.முருகன், நிறைவாக தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கு.பாபா நன்றியுரை கூறினார். நிகழ்வில் தோழர்கள் இரா.சதீஷ் ஏ.ஜெயாபிகாஷ், மா.பிரபாகாரன், கோ.விஜய கிருஷ்ணன், ஆ.சந்தோஷ், ச.வாசு, மு.ஜெயகுமார்,மூ.சபரி மு. இராவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாமக்கல்: கல்வி உரிமை, இட ஒதுக்கீட்டு உரிமை, மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு யூஜிசியில் திருத்தம் செய்துள்ளதை கண்டித்து 13.02.25 அன்று இராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தி.வி.க மாவட்டத் தலைவர் சாமிநாதன் அவர்களின் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்வில் கிருஷ்ணசாமி மா.துணைச் செயலாளர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,சரவணன் மா. செயலாளர் தி.வி.க, கபிலன் நாமக்கல் நா.தொ.துணைச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கண்ணன் மாநில துணைச் செயலாளர் ஆதித் தமிழர் பேரவை, முத்துப் பாண்டி மா.அமைப்பாளர் தி.வி.க, மீனா மா.செயலாளர் அ.இ.மா.தே சம்மேளனம், இராவணன் மா. செயலாளர் ஆதித் தமிழர் கட்சி, சாதிக்மா செயலாளர் AIYF, கண்டன உரையாற்றினர். நிகழ்வில் முன்னிலை வகித்தவர்கள் மணிமாறன் நகரச் செயலாளர் சி.பி.ஐ சுமதி மதிவதனி நகர அமைப்பாளர் தி.வி.க, பிரசாந்த் ஒன்றியச் செயலாளர் ஆதித் தமிழர் கட்சி, பிரகாஷ் பள்ளிப் பாளையம் பொறுப்பாளர் தி.வி.க, பிடல் சேகுவேரா நகரச் செயலாளர் தி.வி.க, வடிவேல் குமாரபாளையம் தி.வி.க நகர செயலாளர் நன்றியுரை ஆற்றினார்.
மதுரை: 13.02.25 அன்று மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக தோழமை இயக்கங்களுடன் இணைந்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. சமூக நீதிக்கு எதிரான மாநில உரிமைக்கு எதிரான கல்வி உரிமைக்கு எதிராக ஒன்றிய மோடி அரசால் கொண்டு வரப்பட்டு இருக்கும் தீர்மானத்துக்கு எதிராக பல்வேறு இயக்க தோழர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். பசும்பொன் பாண்டியன் தலைவர் -அ.தி.ம.மு.க, மீ.த. பாண்டியன் தலைவர் – தமிழ் தேச மக்கள் முன்னணி, குமரன் – பு.இ.மு, மணிபாபா, தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி விடுதலை வீரன், அமைப்பு செயலாளர் திராவிடர் தமிழர் கட்சி நாகபாலன், புரட்சி கவிஞர் பேரவை மெய்யப்பன், தமிழ் தேச குடியரசு இயக்கம் தமிழ் பித்தன், தபெதிக பேரவறிளான், பொதுச் செயலாளர் தமிழ் புலிகள் கட்சி, செல்வம் ஆதித்தமிழர் பேரவை, மாநில கலை இலக்கிய அணி செயலாளர் ராமலிங்கம், மாநில ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம் பல்வேறு அமைப்பு தோழர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். திவிக சார்பில் வேங்கைமாறன், சத்தியமூர்த்தி, முருகேசன், வாசுகி முருகேசன், முத்து (சிவகங்கை மாவட்ட தலைவர்) ஆகியோரும், இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.
திருச்சி: யுஜிசி விதிகளில் திருத்தம் செய்து கல்வி உரிமையை பறிக்காதே இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்காதே எனும் முழக்கங்களுடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 13.02.25 அன்று திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் புதியவன் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம்: 13.02.25அன்று மாலை 05.00 மணிளவில் சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில் யுஜிசி திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை கா.ரவிபாரதி வரவேற்புரை ஆற்றினார். ந.ராமஜெயம் ,உலக ஒளி சம்பத்குமார் பாடல்கள் பாடினர்கள். வாலாசா வல்லவன் துணைப் பொதுச்செயலாளர் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி, காஞ்சி அமுதன், பாசறை செல்வராஜ், அவெ முரளி, மதிஆதவன், மகேஷ், சி.நடராசன், பழநி சாரதாதேவி, தஞ்சை தமிழன், மோகன், சீதாவரம் மோகன், லெனின்குமார் டில்லி தோழமை அமைப்புத் தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள். மக்கள் மன்றம்,விசிக உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு இயக்கங்கள் கலந்து கொண்டனர். ஏழுமலை நன்றி தெரிவித்தார்.
பெரியார் முழக்கம் 20022025 இதழ்

You may also like...