Category: பெரியார் முழக்கம் 2024

தீபாவளி வாழ்த்து கிடையாது போயா! – கோடங்குடி மாரிமுத்து

தீபாவளி வாழ்த்து கிடையாது போயா! – கோடங்குடி மாரிமுத்து

விஜயதசமி நாளில் இராவணன் படத்தைத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். இராவணன் எரிவதைப் பார்த்து கைத்தட்டி கும்மாளம் அடிக்கிறார்கள். இராவணன் மீது அம்புகள் ஏவப்படுகின்றன. தொலைக்காட்சிகள் இதை ஒளிபரப்புகின்றன. மோடியும், அதன் பரிவாரங்களும் மட்டுமல்ல, ராகுல், சோனியாவும் இதில் பங்கேற்கிறார்கள். ஏன் இந்த எரிப்புகள் நடக்கின்றன? தொலைக்காட்சியில் பார்த்த இருவர் இதுகுறித்து உரையாடுகிறார்கள். (விவாதம் தொடங்குகிறது) கேள்வி : தசரா என்பது இந்துப் பண்டிகை. இதுல எதுக்கு இராவணனை எரிக்கனும்? இராமனைக் கொண்டாடனும்? இராமாயணக் காலத்துலயே இந்துமதம் வந்துடுச்சா? பதில் : அப்படியெல்லாம் ஒன்னுமில்ல… இந்து என்ற பெயரே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்துல தான் வந்துச்சு. ஆனால் பிராமணர் தெய்வம், அவர் பேச்சை மீறுவது குற்றம், மற்றவர்கள் சூத்திரர்கள், பிராமணர்களுக்கு அடிமை என்ற கருத்து இராமாயணக் காலத்துலேயே வந்துருச்சு. அதனால் தான் இராமன், சூத்திரன் சம்பூகனின் தலையை வெட்டி வீசினான். இந்துமதம் அப்போது வரல, ஆனால் வர்ணாசிரம தர்மம் வந்துருச்சு. கேள்வி : இந்துமதம்...

கொள்கைகளைக் கொண்டு செல்வதற்கு அடக்குமுறைகளை வரவேற்றார் பெரியார்! ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு (2)

கொள்கைகளைக் கொண்டு செல்வதற்கு அடக்குமுறைகளை வரவேற்றார் பெரியார்! ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு (2)

குடிஅரசு சமூகத்தில் உருவாக்கிய தாக்கத்தையும், மதவாதிகள் மிரண்டு போய் அரசிடம் பாதுகாப்பு கேட்ட வரலாறுகளையும் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டினார். சென்னைக் கழகத் தலைமையகத்தில் ஆகஸ்டு 12ஆம் தேதி நடந்த குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகத் திறப்பு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம்.. வள்ளலார் விழா ஒன்றில் பேசிய கலைஞர், வள்ளலார் சாமிகளைப் போல மென்மையானக் கருத்துகளை எல்லாம் சொல்லி இந்த மக்களைத் திருத்த முடியாது. இந்தத் தமிழன் கும்பகர்ணனாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். தூங்கிக் கொண்டிருக்கிற இந்தக் கும்பகர்ணன் விழிப்பதற்குப் பெரியார் என்ற யானை மிதித்தால் தான் நடக்கும் என்று பேசினார். சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டியில் இருக்கலாமா? என்ற கேள்விக்குப் பெரியார் இப்படி பதிலளித்தார். சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டியில் தாராளமாக இருக்கலாம். கோயில் சொத்துக்களை மக்களுக்கு பயன்படுத்துகிற முயற்சியில் நீங்கள் பங்களிக்கலாம். ஆனால் வெறும் மூடநம்பிக்கைகளையும், வர்ணாசிரமத்தை மட்டும் பரப்புவதற்காக மட்டும் அந்தக் கமிட்டி இருக்கிறது என்று சொன்னால் அதில் இருப்பதற்கான...

திராவிட இயக்க இதழ்கள் – புரட்சிப் பெரியார் முழக்கம்

திராவிட இயக்க இதழ்கள் – புரட்சிப் பெரியார் முழக்கம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ் புரட்சிப் பெரியார் முழக்கம். இது திராவிடர் விடுதலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஏடாக வெளியாகி வருகிறது. 1997-ஆம் ஆண்டின் முதல் 2001-ஆம் ஆண்டின் இறுதிவரை மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த இது, 2002-ஆம் ஆண்டு முதல் வார ஏடாக வெளிவரத் தொடங்கியது. தற்போது அது மின்னிதழாகவும் வெளிவருகிறது. முந்தைய இதழ்களும் மின்னிதழ்களாக மாற்றப்பட்டு, அவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பெரும்பாலும் அரசியல் கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. அவற்றில் பெரும்பாலான கட்டுரைகளை இதழின் ஆசிரியரே படைக்கிறார். கட்டுரைகள் தவிர, வினா விடை – துணுக்குப் பத்திகள் – தலையங்கம் – ஆசிரியரது பொது நிகழ்ச்சி உரைகள் ஆகியவையும் இடம்பெற்றுவருகின்றன. நன்றி : முரசொலி – 15.10.2024 இதழ் பெரியார் முழக்கம் 17.10.2024 இதழ்

முடிவெய்தினார் மக்கள் உரிமைப் போராளி ஜி.என்.சாய்பாபா

முடிவெய்தினார் மக்கள் உரிமைப் போராளி ஜி.என்.சாய்பாபா

மக்கள் உரிமைப் போராளி ஜி.என்.சாய்பாபா முடிவெய்தினார். அவரது உடலில் 90 சதவீத உறுப்புகள் செயலிழந்தவை. சக்கர நாற்காலியிலேயே அவரது வாழ்க்கை நகர்ந்தது. மாவோயிஸ்ட் நூல்களை தனது வீட்டில் வைத்திருந்தார் என்பதற்காக ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா காவல்துறை இணைந்து அவரை உஃபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. 3592 நாட்கள் சிறையில் கழித்தார். அவர் செய்த குற்றமே மாவோயிசம் சம்பந்தப்பட்ட நூல்களை தனது அறையில் வைத்திருந்தார் என்பது தான். அந்த நூல்களை ரகசியமாக சுற்றுக்கு அனுப்பி நாட்டை உடைப்பதற்கு சதி செய்தார் என்று கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 3592 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு அவரிடம் அப்படி நூல்கள் கைப்பற்றுவதற்கான ஆதாரமே இல்லை என கூறி உச்சநீதிமன்றம் அவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்தது. சிறைக்கு சென்ற பின் கடுமையான நோய் உபாதைகளுக்கு உள்ளானார். எந்தவித மருத்துவ வசதிகளும் இல்லாத நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கழிவறைக்கு...

தலையங்கம் – நூற்றாண்டு காணும் ஜாதி ஒழிப்புப் போராளி

தலையங்கம் – நூற்றாண்டு காணும் ஜாதி ஒழிப்புப் போராளி

ஜாதி ஒழிப்புக் களத்தில் உயிர்நீத்த மாவீரன் இமானுவேல் சேகரன் நூற்றாண்டு இது. தென் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடிய ஜாதிவெறிக்கு எதிராக மக்களைத் திரட்டி போராடிய மாவீரன். 1924, அக்டோபர் 09ஆம் தேதி முதுகுளத்தூர் அருகே உள்ள செல்லூரில் அவர் பிறந்தார். இராணுவத்தில் சேர்ந்தார். விடுமுறைக் காலங்களில் ஊருக்கு வரும் போது ஒடுக்கப்பட்ட மக்களின் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடினார். மக்களை அணிதிரட்டினார். ஒருகட்டத்தில் இராணுவத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஜாதி ஒழிப்புக் களத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக்கொண்டார். தேவேந்திர குல வேளாளர் என்ற ஜாதிப் பிரிவில் அவர் பிறந்தாலும் சுயஜாதியைக் கடந்து தீண்டாமையால் பாதிக்கப்பட்ட நாடார் உள்ளிட்ட அனைத்து ஜாதிகளையும் அவர் ஒருங்கிணைத்தார். 1953இல் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை அவர் தொடங்கினார். ஜாதி ஒழிப்புடன் பெண்ணுரிமைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். கணவனை இழந்தப் பெண்கள் மறுமணம் செய்ய வேண்டும் என்பதை மக்களிடம் நேரடியாகச் சென்று பரப்புரை செய்தார். அன்றைய காலகட்டத்தில் இராஜகோபாலாச்சாரி...

“ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்”

“ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்”

நூற்றாண்டைத் தொடங்கி இருக்கிற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதன் கரங்களுக்கு எட்டாக்கனியாக இருந்த தமிழ் மண்ணில் இன்று தடியோடு ஊர்வலம் போகும் அளவிற்கு வந்திருக்கிறது. ஒரு நூறாண்டு கால சமூகநீதி கொள்கைகளுக்கான போராட்ட வரலாறு கொண்ட திராவிட நிலத்தில் தன் விதையினை ஊன்றிவிட ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இதனை ஒரு தொடக்கப்புள்ளியாகவே பார்க்க வேண்டி உள்ளது. முழுக்க முழுக்க சித்பவன பார்ப்பனர்களைத் தலைமையாகக் கொண்ட ஓர் இயக்கம் மதத்தின் பெயரைச்சொல்லி மக்களைப் பிளவுபடுத்த மட்டும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்து இளைஞர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட பின்னணி மற்றும் வரலாறு, ஒட்டு மொத்த இந்தியாவும் விடுலைக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது அவர்களது செயல்பாடு என்னவாக இருந்தது? அந்த அமைப்பின் தலைமை எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது? காந்தியின் கொலை வழக்கில் அவர்களின் பங்கு, வரலாறு முழுக்கவே முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் என ஆர்.எஸ்.எஸ்-ஸைப் பற்றிய முழுமையான தகவல்களைத் தரும் நூல். அனைத்துத் தகவல்களையும் ஆதாரங்களோடு அம்பலப்படுத்திய...

கோல்வாக்கர்: இந்தியப் பாசிசத்தின் தந்தை!

கோல்வாக்கர்: இந்தியப் பாசிசத்தின் தந்தை!

இன்றைய இந்தியாவின் மிக முக்கிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ். இந்திய ஒன்றியத்தை அந்த அமைப்புதான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. வட இந்தியாவின் பல மாநிலங்களில் அதிகாரத்தில் உள்ளது. அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க மிகவும் சக்திவாய்ந்த, பணக்கார கட்சியாக உருவெடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து முக்கிய நிறுவனங்களும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளன. பல்கலைக் கழகங்கள் முதல் அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கலாச்சாரம் தொடர்பான அனைத்து நிறுவனங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்போது இந்த அமைப்பு உலகின் பிற நாடுகளிலும் பல பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அது ஒரு தனித்த அமைப்பு மட்டுமல்ல, பல நூறு அமைப்புகளுக்கான அமைப்பு என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஒரு நூற்றாண்டில் எப்படி இத்தகைய நிலையை ஆர்.எஸ்.எஸ் அடைந்தது என்பதைத் தெரிந்துகொள்ள கோல்வாக்கரை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான படைப்புதான் “Golwalkar: The Myth Behind the Man, The Man Behind the...

ஆளுநருக்கு எதிராகப் போராட்டம்; சேலத்தில் நடந்த இளைஞர் – மாணவர் கூட்டத்தில் முடிவு!

ஆளுநருக்கு எதிராகப் போராட்டம்; சேலத்தில் நடந்த இளைஞர் – மாணவர் கூட்டத்தில் முடிவு!

சேலம்: சேலம் மாவட்டக் கழக இளைஞரணி – தமிழ்நாடு மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 28.09.2024 அன்று சேலம் தாதகாப்பட்டியில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாவட்ட இளைஞரணித் தலைவர் ஏற்காடு தேவபிரகாசு தலைமை தாங்கினார். அமைப்பாளர் வெற்றிமுருகன் முன்னிலை வகித்தார். இதில் வருகிற 16.10.2024 அன்று சேலம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் ஆளுநர் ரவியைக் கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், பெரியார் நினைவு நாளில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51A (h) மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு ஆகியவற்றை விளக்கி மாணவர்களிடையே விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துவது எனவும், மாணவர் விடுதிகளில் சந்திப்பு – அறிவியல் கண்காட்சி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மாநகரத் தலைவர் பாலு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாநகரச் செயலாளர்...

குன்றக்குடி அடிகளார் மற்றும் சேரன் மாதேவி நூற்றாண்டு சிறப்பு வாசகர் வட்டம்

குன்றக்குடி அடிகளார் மற்றும் சேரன் மாதேவி நூற்றாண்டு சிறப்பு வாசகர் வட்டம்

“குன்றக்குடி அடிகளார்” மற்றும் “சேரன் மாதேவி” நூற்றாண்டு சிறப்பு நிமிர்வோம் வாசகர் வட்ட 24வது சந்திப்பு 29.09.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சந்திப்பிற்கு தௌபீக் தலைமை தாங்கினார். மயிலை அஸ்வின் வரவேற்புரையாற்றினார். பொன்மலர் முன்னிலை வகித்தார். முதல் நிகழ்வாகத் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் படத்தைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்து புகழ் வணக்கம் செலுத்தினார். பின்னர் “வைதீக எதிர்ப்பு மரபில் பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும்!” என்ற தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனும், “பார்ப்பனிய எதிர்ப்புப் புரட்சியில் சேரன்மாதேவி” என்ற தலைப்பில் கழக இளைஞரணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஊடகவியலாளர் ஜெயப்பிரகாசும் சிறப்புரையாற்றினார்கள். நிறைவாக நிறை நன்றி கூறினார். வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாசு நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, ஆய்வாளர் பழ.அதியமான் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார்...

சரவணக்குமார் எழுதிய இரு நூல்கள் வெளியீடு! கழகப் பொதுச்செயலாளர் வெளியிட்டார்.

சரவணக்குமார் எழுதிய இரு நூல்கள் வெளியீடு! கழகப் பொதுச்செயலாளர் வெளியிட்டார்.

சென்னை: எழுத்தாளரும், கழகத் தோழருமான சரவணக்குமார் எழுதிய ‘ஊர் வாயி’, ‘இவர்களும் தெய்வமாக்கப்படலாம்’ என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா 06.10.2024 அன்று பெருங்குடியில் உள்ள கழகப் பொதுச் செயலாளரின் இல்லத்தில் நடைபெற்றது.. நூலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி பெற்றுக் கொண்டார். இதில் நூலாசிரியர் சரவணக்குமார், தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், அருள் நாராயணா, கோபிநாத், அன்னூர் விஷ்ணு, அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 10.10.2024 இதழ்

திருப்பூரில் எழுச்சி; கழக சார்பில் பல்வேறு இடங்களில் கொடியேற்றம்!

திருப்பூரில் எழுச்சி; கழக சார்பில் பல்வேறு இடங்களில் கொடியேற்றம்!

திருப்பூர் : தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் 06.10.2024 அன்று காலை 11 மணி தொடங்கி இரவு 8 மணி வரை முழுநாள் நிகழ்வாக நடைபெற்றது. வீரபாண்டி பிரிவு, கொளத்துப்பாளையம், இராயபுரம், பெரியார் காலனி, 15-வேலம்பாளையம், அனுப்பர் பாளையம், அம்மாபாளையம், ஆத்துப்பாளையம், மாஸ்கோ நகர் உள்ளிட்ட இடங்களில் திருப்பூர் மாநகர அமைப்பாளர் சரஸ்வதி, தெற்கு பகுதி பொறுப்பாளர் இராமசாமி, மடத்துக்குளம் ஒன்றிய அமைப்பாளர் கடத்தூர் அய்யப்பன், கார்த்தி, மோகன், மதன், சூர்யா, கார்த்திகா ஆகியோர் கழகக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்பித்தனர். இந்நிகழ்விற்குக் கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு முன்னிலை வகித்தார். இதில் கழக சமூக வலைதளப் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகரத் தலைவர் தனபால், மாநகரச் செயலாளர் மாதவன், மாநகர அமைப்பாளர் முத்து, மாநகரத் துணைத் தலைவர்...

நவராத்திரி கொலுவில் இப்படி ஓர் கலகம்

நவராத்திரி கொலுவில் இப்படி ஓர் கலகம்

நவராத்திரி கொலுவில் சரசுவதி, லட்சுமி, கிருஷ்ணன், இராமன், சீதை, பிள்ளையார் உள்ளிட்ட கடவுள் பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. தனது வீட்டுக்கு வந்த நவராத்திரி விருந்தினருக்கு சுண்டல், தயிர் சாதம் வழங்கினார், கோபால அய்யர். இரவு ஓ.டி.டி-யில் நடிகர்கள், கடவுள் வேடமிட்டு நடித்த பக்திப் படம் ஒன்றைப் பார்த்து உறங்கச் சென்றார். கனவில் கொலுவில் இருந்த கடவுள் பொம்மைகளும், உருவங்களாகப் பேசத் தொடங்கின…. கிருஷ்ணன் கீழே இறங்கி வந்து அய்யர் ‘ஆத்து’ சமையலறைக்குப் போகிறான். பாத்திரங்களை உருட்டுகிறான். சத்தம் கேட்ட விநாயகன், கிருஷ்ணனைப் பின் தொடருகிறான். கிருஷ்ணன் : டேய், யானைத் தலையா! இங்கே, ஏண்டா வந்தே? விநாயகன் : நிறுத்துடா, வெண்ணெய் திருடா; நீ எதையெதை எல்லாம் உருட்டப் போகிறாய், திருடப் போகிறாய் என்பதைப் பார்க்கத்தான் வந்தேன். கிருஷ்ணன் : நான் திருடினாலும் சரி; குளிக்கும் பெண்களின் ஆடைகளை உருவி மரத்தில் போய் உட்கார்ந்து கொண்டாலும்; நான் எப் போதுமே பக்தர்களுக்கு...

ஒன்றிய ஆட்சியின் ‘மனுதர்மப்’ பார்வை அடிமைச் சின்னத்தின் அடையாளமா திருமணம்? – ர.பிரகாசு

ஒன்றிய ஆட்சியின் ‘மனுதர்மப்’ பார்வை அடிமைச் சின்னத்தின் அடையாளமா திருமணம்? – ர.பிரகாசு

திருமணமான பெண்களின் விருப்பத்துக்கு மாறாக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது ஒன்றிய ஆட்சி. உலகம் முழுக்கவே பெண்ணுரிமை சார்நது நடைபெறும் விவாதங்களில் திருமணத்திற்குப் பின்பு கணவனால் பெண்கள் எதிர்கொள்ளும் கட்டாய உறவு முக்கியமான ஒன்று. இத்தகைய வல்லுறவை Marital Rape என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். உலகில் மூன்றில் ஒரு பெண் இத்தகைய கொடுமைக்கு உள்ளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே சுமார் 14 விழுக்காடு பெண்கள் இக்கொடுமைக்கு உள்ளாகின்றனர். இந்தியாவில் 18 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களில் 82 விழுக்காட்டினர் கணவனால் பாலியல் வன்கொடுமையை எதிர்கொள்வதாக 2019-21ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல சுகாதார ஆய்வு கூறுகிறது. சுமார் 150 நாடுகளில் திருமணத்திற்குப் பிந்தைய கட்டாயப் பாலியல் வன்கொடுமை குற்றமாக்கப்பட்டுள்ளது. எனினும் சட்டத்தையும் மீறி உலகம் முழுவதும் இக்கொடுமையைப் பெண்கள் எதிர்கொண்டே வருகின்றனர். 32 நாடுகளில் மட்டும்தான் இதனைக் குற்றமாகக் கருதுகிற சட்டம் இல்லை....

மனிதம் தழைத்தோங்கும் தமிழ்நாடு!

மனிதம் தழைத்தோங்கும் தமிழ்நாடு!

இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில் 2008ஆம் ஆண்டு கலைஞர், மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலுறுப்பு தானம் பெறும் மகத்தான திட்டத்தினைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உடல் உறுப்புகளைத் தானம் செய்பவர்களுக்கு, இறுதி நிகழ்வின்போது அரசு மரியாதை அளிக்கப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்தகைய முன்னெடுப்புகளால், தமிழ்நாட்டில் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 8 மாதங்களில் 1086 உடல் உறுப்புகள் அரசுக்குத் தானமாகக் கிடைத்துள்ளது. குறிப்பாக முதலமைச்சர் அறிவித்த முதல் 11 மாதத்தில் மட்டும் இதுவரை 192 பேர், உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சிறுநீரகம், நுரையீரல், இதயம், கல்லீரல், கார்னியா என மொத்தம் 1086 உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. இது கடந்த 6 ஆண்டுகளை ஒப்பிடுகையில் சாதனை ஆகும். 2023ஆம் ஆண்டு 178 நபர்களும், 2022ஆம் ஆண்டு 156 நபர்களும், 2021ஆம்...

ஆர்.எஸ்.எஸ் நடத்திய ‘ஆண்கள் பேரணி’

ஆர்.எஸ்.எஸ் நடத்திய ‘ஆண்கள் பேரணி’

‘அது என்னப்பா! ஆர்.எஸ்.எஸ் பேரணியில அமைச்சர் முருகன் சீருடையுடன் போஸ் குடுக்குறாரு. தமிழிசையும், வானதியும் காணோமே என்றார் ஒரு நண்பர். ஆமாம் அப்படித்தான். ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை ஊடகங்கள் ஒளிபரப்பின. காக்கி பேண்ட் – குல்லாவுடன் நடந்தார்கள். ஒரு பெண்ணை மருந்துக்குக் கூட காணவில்லை . அது ‘ஆர்.எஸ்.எஸ் ஆண்கள்’ மட்டும் பேரணி. ஏதோ ஒரு சுயம் சேவக்கைப் பிடித்து அவருக்கு பெண் வேடம் போட்டுக்கூட அழைத்து வந்திருக்கலாம். அதற்கும் தயாராக இல்லை. பெண்கள் விண்வெளிக்குப் போகிறார்கள். பல மாதங்கள் சந்திர மண்டலத்தில் எங்களால் வாழ முடியும் என்று சாதனை படைக்கிறார்கள். இராணுவக் கமாண்டர்களாக வருகிறார்கள். குடியரசுத் தலைவராகக் கூட வரலாம், ஆனால் அதே பெண் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக மட்டும் முடியாது. சனாதன தர்மம் அப்படி ஒரு இரும்புக் கோட்டை. ‘என்னப்பா இது; தமிழிசையும் வானதியும் ஒவ்வொரு நாளும் இந்து தர்மத்துக்காக முழங்குறாங்க, ஆனா அவங்க தாய் அமைப்பு பேரணிக்குள் வராதே என்று...

தலையங்கம் – மதச்சார்பின்மையா? மனுதர்மமா?

தலையங்கம் – மதச்சார்பின்மையா? மனுதர்மமா?

மதச்சார்பின்மை ‘சோசலிசம்’ என்ற சொற்கள் 1976ஆம் ஆண்டு அவசர நிலைக் காலத்தில் தான் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதற்கு முன்பு சட்டத்தில் மதச்சார்பின்மை என்பது இல்லவே இல்லை என்று சங்பரிவாரங்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ். பரப்புரைச் செயலாளர் போல் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியும் அண்மையில் இவ்வாறு பேசியிருக்கிறார். அரசியல் சட்டத்தின் கீழ் உறுதி மொழியேற்று – பதவிக்கு வந்தவர் ஆளுநர். அவர் மதச்சார்பின்மை என்ற சொல்லை நீக்கிவிட வேண்டும் என்று சட்ட மறுப்புப் பேசுகிறார். ‘மதச்சார்பின்மை’ என்ற சொல்லை ஏன் அகற்ற வேண்டும்? அகற்றிவிட்டால் ’இந்துக்கள்’ நாடு என்றாகிவிடுமா? அதாவது அரசியல் சட்டக் குழு மதச்சார்பின்மைக் கொள்கையை ஏற்கவில்லை, அதை இந்திரா காந்தி தான் திணித்தார் என்று இவர்கள் வாதாடுகிறார்கள். அரசியல் சட்டத்தின் அடித்தளமே மதச்சார்பின்மை தான். சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் மதப் பாகுபாடு கூடாது; ஜாதிப் பாகுபாடு கூடாது; இனப் பாகுபாடு கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது....

ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு சனாதனத்தை மிரள வைத்த ‘குடிஅரசு’

ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு சனாதனத்தை மிரள வைத்த ‘குடிஅரசு’

குடிஅரசு சமூகத்தில் உருவாக்கிய தாக்கத்தையும், மதவாதிகள் மிரண்டு போய் அரசிடம் பாதுகாப்பு கேட்ட வரலாறுகளையும் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டினார். சென்னைக் கழகத் தலைமையகத்தில் ஆகஸ்டு 12ஆம் தேதி நடந்த குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகத் திறப்பு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம்.. குடிஅரசும் சுயமரியாதை இயக்கமும் தமிழ்நாட்டின் வரலாற்றில் 1925 முதல் 1949 வரை அதன் எழுத்தையும் பேச்சையும் வரலாறாகப் பதிவு செய்யப்பட்டதன் காரணமாகத்தான் இன்றைக்கும் நாம் அதைப் படிக்கவும் பேசவும் முடிகிறது. பெரியார் குடிஅரசு இதழை ஆரம்பித்த போது வெறும் 7 சதவீதம் பேர் தான் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். அந்தக் காலகட்டத்தில் கூட தந்தை பெரியார் “நான் ஒருவனே எழுதி, நான் ஒருவனே அச்சிட்டு, நான் ஒருவனே எழுதிப் படிக்கின்ற நிலை வந்தாலும் குடிஅரசு இதழை நடத்திக் கொண்டு இருப்பேன்”. நவீன அச்சு இயந்திரங்களோ, தொலை தொடர்பு வசதி என எதுவுமே இல்லாத காலம் அது. 1929ஆம்...

தோழர் தேவ.சீனி சுந்தரம் மறைந்தார் உடல் கொடையாக வழங்கப்பட்டது

தோழர் தேவ.சீனி சுந்தரம் மறைந்தார் உடல் கொடையாக வழங்கப்பட்டது

மதுரை: பெரியார் திராவிடர் கழகத்தின் சிவகங்கை முன்னாள் மாவட்டத் தலைவரும், மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் காப்பாளருமான தளபதி அவர்களின் தந்தையுமான தேவ.சீனி.சுந்தரம் 21.09.2024 அன்று முடிவெய்தினார். 23.09.2024 அன்று நடைபெற்ற இறுதி நிகழ்வை பெண்களே முன்னின்று நடத்தினர்.சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அவரது “உடல் கொடை”யாக வழங்கப்பட்டது. முன்னதாக கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் த.தே.ம.மு. தலைவர் மீ.த.பாண்டியன், த.தே.பே, தி.க உள்ளிட்ட தோழமை அமைப்பினரும் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 03.10.2024 இதழ்

மயிலாப்பூரில் சிந்தனைப் பலகை திறப்பு!

மயிலாப்பூரில் சிந்தனைப் பலகை திறப்பு!

தந்தை பெரியார் 146வது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூரில் பெரியார் சிந்தனைப் பலகையை ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி திறந்து வைத்தார். பகுதித் தமிழ் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வை மயிலைப் பகுதித் தோழர்களான மாணிக்கம், அருண், அஸ்வின், கார்த்திக் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். பெரியார் முழக்கம் 03.10.2024 இதழ்

கள்ளக்குறிச்சியில் பெரியார் பிறந்தநாள் விழா

கள்ளக்குறிச்சியில் பெரியார் பிறந்தநாள் விழா

கள்ளக்குறிச்சி: தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக சார்பில் 17.09.2024 அன்று கடுவனூர் பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து சங்கராபுரம் பெரியார் சிலைக்கு ரிஷிவந்தியம் ஒன்றியத் தலைவர் மா. குமார் ரிஷிவந்தியம் ஒன்றியத் தலைவர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. செந்தமிழ் பட்டு கிராமத்தில் சே.வே.இராஜேசு தலைமையிலும் பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் ரிஷிவந்தியம் ஒன்றிய அமைப்பாளர் இரா. கார்மேகம், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் வீ. முருகன், தே.ராமச்சந்திரன், தென்னரசு, சூர்யா நீதிபதி, மு. நாகராஜ், கா.பழனிச்சாமி, சு.வல்லரசு, வீ.தனுஷ், க.குபேந்திரன், மணிவேல், சுதாகர், ஐயப்பன், ராஜ்குமார், சரத்குமார், ராஜா, வே.ராஜா பிரசாந்த், மாரியாபிள்ளை, விஜய், குரல் குணா, ரோனித், விஸ்வா, ராகுல், விவேகன், பகுத்தறிவாளன், யாழினி ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 03.10.2024 இதழ்

மேட்டுப்பாளையத்தில் பெரியாரின் 146வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்; திருப்பூர் துரைசாமி, சிற்பி இராசன் பங்கேற்பு

மேட்டுப்பாளையத்தில் பெரியாரின் 146வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்; திருப்பூர் துரைசாமி, சிற்பி இராசன் பங்கேற்பு

மேட்டுப்பாளையம்: பெரியார் 146வது பிறந்த நாள் விழா 29.09.2024 அன்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதற்குக் கோவை மாவட்டக் கழகத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமசந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக சிவரஞ்சனி திரையரங்கம் முன்பு திராவிடர் விடுதலைக் கழகத்தின் மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர் அமுல்ராஜ் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். முதல் நிகழ்வாகப் பெரியாரியலாளர் சிற்பி ராசனின் மந்திரமல்ல! தந்திரமே! அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் மூலம் சாமியார்களின் பித்தலாட்டங்களைத் தோலுரித்துக் காட்டினார். பொதுக்கூட்டத்தில் கோவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் நவீன் குமார், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு, கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாகக் கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி சிறப்புரையாற்றினார். மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர் அமுல்ராஜ் நன்றி கூறினார். நிகழ்வில் கோவை மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர் செல்வம்,திருப்பூர் மாநகரத் துணைத் தலைவர் மாரிமுத்து,...

குமாரபாளையத்தில் குடிஅரசு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

குமாரபாளையத்தில் குடிஅரசு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

நாமக்கல் : தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா மற்றும் குடிஅரசு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் 22.09.2024 அன்று குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கழக நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்டக் காப்பாளர் கேப்டன் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். முதல் நிகழ்வாக பெரியாரியலாளர் சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு நிகழ்ச்சி நடைபெற்றது. குமாரபாளையம் நகரக் கழகத் தலைவர் தண்டபாணி, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு ஆகியோர் தொடக்கவுரையாற்றினார்கள். நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மேலும் கழகத் தலைவருக்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.கே.குமார், நகரச் செயலாளர் சரவணன் ஆகியோர் பயணாடை அணிவித்து மகிழ்ந்தனர். இதில் மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி, வெண்ணந்தூர், காளிப்பட்டி, ராசிபுரம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். நகரத் துணைச் செயலாளர் பி.மாதேஸ்வரன் நன்றி...

திராவிட இயக்கம் பேசுவது இனவெறி அல்ல; இனத்தின் விடுதலை! – மனோ தங்கராஜ்

திராவிட இயக்கம் பேசுவது இனவெறி அல்ல; இனத்தின் விடுதலை! – மனோ தங்கராஜ்

21.09.2024 அன்று சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற “அன்றே எச்சரித்தார் பெரியார் – பறிபோகும் மாநில உரிமைகள்” பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆற்றிய உரையின் தொகுப்பு. பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். காரணம் தந்தை பெரியார் ஏற்படுத்திய சுயமரியாதை உணர்வு. சுயமரியாதையோடு மற்றவர்களையும் மதிக்கும் பண்பு. அதே போன்று நம்மை மானம் இழக்கச் செய்து, நமது உரிமைகளைப் பறித்து நம்மை நிராயுதபாணிகளாக மாற்றி, பல்வேறு மூடநம்பிக்கைகளைக் கற்பித்து அதை நம்ப வைத்து நமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து விடுதலைப் பெறுவதற்காகவே, தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் தந்தை பெரியார். எனக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவருக்கும் நீண்டகாலத் தொடர்பு இருக்கிறது. நான் கடந்துவந்த பாதையை அடிக்கடி நினைத்துப் பார்ப்பது உண்டு. நான் கொளத்தூர் மணி அவர்களைக் கூடங்குளம் அணு உலைக்கு எதிரானப் போராட்டக் களத்தில்தான் முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போது அவரைச் சார்ந்த தோழர்கள் தமிழ்நாடு முழுவதிலும்...

வாழ்க உதயநிதி! – குயில்தாசன்

வாழ்க உதயநிதி! – குயில்தாசன்

வரவேற்றுப் போற்றிடும் பெரியார் படையே சூழ்ச்சிமிகு ஆரிய வேதியர் ஓடவும் சூழ்ந்துவரும் அய்ந்தாம் படையது ஒழியவும் தலைநிமிர்ந்து தமிழினம் தன்மானத் தோடே மலைஉயர் தன்மதிப்பால் பகுத்தறி வாலே அலைகடலும் அமைதியுறும் நின்அன் பாலே கலையழகே! பெரியாரின் பெயரனே வாழி! பெரியார் முழக்கம் 03.10.2024 இதழ்

லப்பர் பந்து

லப்பர் பந்து

அண்மைக் காலமாக தமிழ் திரைப்படங்கள் ஜாதிய ஒடுக்குமுறைகளை ஆழமாகப் பேசத் தொடங்கியிருக்கின்றன. சமூக நீதியின் விளைச்சல் களாக அருமையான இளம் படைப்பாளிகளைத் தமிழ் நாடு உருவாக்கியிருக்கிறது. சமூகக் கவலையோடு அவர்கள் படைப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஜாதி எதிர்ப்பை முன்வைத்து வந்துள்ள படங்கள் தீண்டப்படாத மக்களின் துயரங்கள், அவர்களின் மீதான ஒடுக்குமுறைகள், ஜாதித் திமிரின் ஆதிக்கம், அதை எதிர்த்துப் போராடுகிற இளம் போராளிகள், ஜாதி மறுப்புக் காதலர்கள் என்ற கண்ணோட்டத்திலேயே பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் இருந்து ஒரு மாறுபட்ட ஒரு பார்வையில் வந்திருக்கக் கூடிய ஒரு படம் தான் லப்பர் பந்து. ஜாதித் தடைகளைக் கடந்து செல்லும் வாழ்க்கைப் பாதைக்கு ஒளியைக் காட்டுகிறது இந்தத் திரைப்படம். தலித் பெண்ணை மணந்த பிற்படுத்தப்பட்ட ஜாதி இளைஞன். அந்த இணையர்களுக்கு பிறந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் புரிய விரும்பும் தலித் இளைஞர். “மாமனார் – மருமகன்” என இந்த தரப்புகளுக்குமான தன் முனைப்புகளில்...

தலையங்கம் – அறிவியலைக் கண்டு ஏன் அஞ்சுகிறீர்கள்?

தலையங்கம் – அறிவியலைக் கண்டு ஏன் அஞ்சுகிறீர்கள்?

அறிவியலைக் கண்டு அஞ்சுகிறது மதவாதம்; உண்மையான விஞ்ஞானிகளை அடையாளப்படுத்தாமல் போலி அறிவியலைப் பரப்புவோருக்கு விஞ்ஞானி என்று மகுடம் சூட்டி விருது வழங்கத் தயாராகிறது ஒன்றிய பாஜக ஆட்சி. இதுவரை ஒன்றிய விஞ்ஞான அமைச்சகம், விஞ்ஞானிகளைத் தேர்வு செய்யும் முறையைத் திடீரென மாற்றியுள்ளது. அறிவியல் இயக்கங்கள் மற்றும் அறிவியலாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் தான் இத்தனை ஆண்டுகாலம் விருதுகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் அறிவியலில் சாதனை புரிந்த விஞ்ஞானிகள் விருதுகளைப் பெற்றுவந்தனர். இவர்கள் பாஜகவின் போலி அறிவியலையும், வரலாற்றுப் புரட்டுகளையும் ஏற்காமல் உண்மைகளை உரத்துப் பேசுகிறார்கள். அந்தக் கருத்துகள் சர்வதேச அளவில் மதவாத மூட நம்பிக்கை கருத்துகளை அம்பலப்படுத்தியது. அதன் காரணமாக விஞ்ஞானிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பைத் திடீரென மாற்றியமைத்திருக்கிறார்கள். விருதுகள் வழங்கப்படும் விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்படும் முறையிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளது ஒன்றிய பாஜக ஆட்சி. இனி விஞ்ஞான அமைச்சகத்தின் தனி அதிகாரியான முதன்மை அறிவியல் ஆலோசகர் மட்டுமே இது குறித்த முடிவுகளை எடுப்பார்...

பெரியாரிஸ்ட் உதயநிதியை வரவேற்கிறோம்!

பெரியாரிஸ்ட் உதயநிதியை வரவேற்கிறோம்!

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த சில மாதங்களாகவே உதயநிதி துணை முதல்வராவது குறித்தப் பேச்சுக்கள் தான் ஊடகங்களில் பேசு பொருளாக இருந்தது. உதயநிதி ஸ்டாலின் ஒரு மிகச்சிறந்த பெரியாரிஸ்ட் மற்றும் பகுத்தறிவாளர் ஆவார். சுயமரியாதை, சமூகநீதிக் கொள்கைகளில் அழுத்தமான உறுதிக்கொண்டவர். இதை வெளிப்படையாகவே அவர் அறிவித்திருக்கிறார். டெங்கு, மலேரியாவைப் போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியதற்காக உதயநிதி ஸ்டாலின் மீது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சங்பரிவார கும்பல்கள் வழக்குத் தொடுத்தன. ஆனால் இந்த வழக்குகளுக்கு எல்லாம் அவர் அஞ்சி நடுங்கிடவில்லை. உளவியல் ரீதியாக அவரை நிலைகுலையச் செய்துவிடலாம் என்ற எதிரிகளின் கணிப்பைத் தவிடுபொடியாக்கினார். 2023இல் இராயப்பேட்டையில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பொங்கல் விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் “நான் ஒரு கருப்புச்சட்டைகாரன்” என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். மிக எளிமையான தோற்றம், அழுத்தமான கருத்துகளைப் பதிவு செய்பவர். அவருக்கு இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட...

சட்ட விரோத ஈஷா மையம் மூடப்படுவது எப்போது?

சட்ட விரோத ஈஷா மையம் மூடப்படுவது எப்போது?

கோவையில் செயல்பட்டு வரும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தின் மீது எழுந்துள்ள நூற்றுக்கணக்கான புகார்களின் பட்டியலில் புதிதாக ஒன்று இணைந்துள்ளது. கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘‘எனது 2 மகள்கள் கீதா மற்றும் லதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக்கொள்ளச் சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். எனது மகள்கள் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகத் தெரிய வருகிறது. அவர்களைச் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஈஷா யோகா மையம் நடத்தும் ஜக்கி வாசுதேவிற்கும் ஒரு மகள் இருக்கிறார். அவர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்க சாமியார் ஜக்கி வாசுதேவ் அனுமதி தந்துள்ளார். எனது மகள்கள் அங்கிருந்து வெளிவந்தால் அவர்களைத் தொந்தரவு செய்ய மாட்டோம். அவர்களுக்கென தனி இடத்தைக் கொடுத்து அவர்களுடைய தனிமை பாதுகாக்கப்படும். எனவே, இரு மகள்களை மீட்டு நீதிமன்றத்தில்...

திருப்பூர் கழகத் தோழர் கோமதி மறைவு

திருப்பூர் கழகத் தோழர் கோமதி மறைவு

திருப்பூர் மாநகரக் கழகக் களப்பணியாளர் திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியைச் சேர்ந்த கோமதி 18.09.2024 மாலை உடல்நலக்குறைவால் முடிவெய்தினார். அவரது உடல் 19.09.2024 அன்று அடக்கம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வில் திருப்பூர், கோவை, சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 26.09.2024 இதழ்

வேதப் புரட்டைத் தகர்த்து திராவிட நாகரீகத்தை உறுதிப்படுத்திய ஜான் மார்ஷல்!

வேதப் புரட்டைத் தகர்த்து திராவிட நாகரீகத்தை உறுதிப்படுத்திய ஜான் மார்ஷல்!

19-ம் நூற்றாண்டில் உலகின் பழமையான நாகரீகமாக பார்க்கப்பட்டது எகிப்திய, சுமேரிய, மெசபத்தோமியா நாகரீகங்கள்தான். அதனைத் தொடர்ந்து மாயன் நாகரீகமும், சீன நாகரிகமும் மிகப் பழமையானதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அதற்கு என தனி நாகரீகம் என்று எதுவும் இருந்ததாக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக ஆரியர் வருகைக்கு பின்னர்தான் இந்திய நாகரீகம் வளர்ச்சி அடைந்தது என்றும், அதற்கு முன்னர் இங்கு இருந்த மக்கள் நாகரீக வளர்ச்சியின்றி நாடோடி வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பது தான் மேற்கத்திய ஆய்வாளர்களின் கருத்தாக இருந்தது. அவர்களை பொறுத்தவரை இந்தியாவின் முதல் நகரமே பாடலிபுத்திரா என்று அழைக்கப்பட்ட பாட்னாதான். ஆனால், இவைகள் எல்லாம் சிந்துநதிக் கரையில் ஒளிந்துகொண்டிருந்த மிகப்பெரும் பழங்கால நாகரீகத்தின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர்தான். அதாவது 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி இந்தியாவை மட்டுமல்ல, உலகையே புரட்டிப்போட்ட ஒரு ஒரு ஆய்வு முடிவு ‘The Illustrated London News’ இதழின் முகப்புப் பக்கத்தில் வெளிவந்தது....

‘அய்யங்கார்’ புடிச்ச லட்டு

‘அய்யங்கார்’ புடிச்ச லட்டு

“பாவம்! பாவம்! அனாச்சாரம் பகவான் பிரசாதத்துலேயே மாமிசம் கலந்துடுச்சு! இது அடுக்குமா? எதுல கலப்படம்னு ஒரு விவஸ்தை வேண்டாமோ? இதுக்கெல்லாம் என்ன பரிகாரம் செய்யுறது? நேக்கு எதுவுமே பிடிக்கல” என்று பதறுகின்றன வைஷ்ணவ ஆன்மீக வட்டாரங்கள். “ஆபத்து வந்துடுச்சு, நாட்டுக்கே ஆபத்து, சங்கராச்சாரிகளே, வேதப் பண்டிதர்களே, முன்னாள், இன்னாள் ஏழுமலையான் அர்ச்சகர்களே! இதற்கு ஒரு பரிகாரம் காணுங்கள், ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்த போது தான் இந்த பாவம் நடந்திருக்கு. அவரை சிறையில் தள்ள ஆகமத்தில் ஏதேனும் விதி இருக்கிறதா? என்று பார்த்து சொல்லுங்க” என்கிறார் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு. “ஆமாம்! அவா ஆட்சிக்காலத்திலே தான் இந்த அநியாயம் நடந்துடுச்சு, அப்பவே சொன்னேன்” என்கிறார் ரிட்டையர்டு தலைமை அர்ச்சகர். “ஓய் ஒன்றும் குடி முழுகிப் போயிடல நம்ம வைஷ்ணவ ஆகம ஆராய்ச்சிக்காரர்களெல்லாம் இதற்கு தீர்வு கண்டுட்டுடோம். அண்மையில் தான் சாமிக்கு மலையில் ‘பவித்ரோட்சவம்’ செய்து முடுச்சுருக்கோம். இது ஒன்றே போதும்....

தலையங்கம் – காவிக்கும்பலின் பிடியில் நீதித்துறை?

தலையங்கம் – காவிக்கும்பலின் பிடியில் நீதித்துறை?

உலகெங்கிலும் எல்லா மதங்களும் விழாக்களை கொண்டாட்டமாக மட்டுமே வைத்திருக்கின்றன. ஆனால் இங்கோ இந்து மதம் கலவரத்திற்காகவே ஒரு விழாவை வைத்துக்கொண்டிருக்கிறது, விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை கடப்பது சிறுபான்மை சமூகங்களுக்கு ஆழிப் பேரலையை கடப்பது போன்ற பேரச்சத்தை தந்து கொண்டிருக்கிறது. சென்னை திருவல்லிக்கேணியில் பெரிய மசூதி வழியாக விநாயகர் ஊர்வலம் செல்வோம் என்று இந்து முன்னணி முரண்டு பிடிப்பதும், காவல்துறை தடுத்து அவர்களை கைது செய்வதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் விநாயகர் ஊர்வலத்தின்போது சிறுபான்மை சமூகத்தினரின் கடைகள் குறிவைத்துத் தாக்கப்பட்டு, எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. கலவரத்தில் ஈடுபட்ட இந்துத்துவா கும்பலைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் மகோபா மாவட்டத்தில் இசுலாமியர்கள் அதிகமாக வாழும் கோத்வாலி பகுதி வழியாக இந்துத்துவா கும்பல் விநாயகர் சிலையை எடுத்துச் சென்று கலவரத்தை தூண்டி, கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம்...

பெரியார் பிறந்தநாள் : கழகத் தோழர்கள் எழுச்சி

பெரியார் பிறந்தநாள் : கழகத் தோழர்கள் எழுச்சி

சேலம் மேற்கு: சேலம் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பறை முழக்கத்தோடு தொடங்கிய இந்நிகழ்விற்கு மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக மேட்டூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் சுதா, சரசுவதி, அறிவுமதி, தேன்மொழி, காயத்ரி ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தோழர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா கொள்கை முழக்கங்களை எழுப்ப.. தொடர்ந்து தோழர்கள் கொள்கை முழக்கங்களை எழுப்பினர். அதன் பிறகு தோழர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனப் பேரணி சமத்துவபுரம் பெரியார் சிலையில் தொடங்கி நங்கவள்ளி, மேட்டூர் RS, மேட்டூர், கொளத்தூர், காவலாண்டியூரில் நிறைவுபெற்றது. நங்கவள்ளி...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவிப்பு ஒன்றிய அரசு அலுவலகங்களில் வடநாட்டார் ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவிப்பு ஒன்றிய அரசு அலுவலகங்களில் வடநாட்டார் ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்களில் வட நாட்டு அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. அதை எதிர்த்துப் போராட வேண்டுமென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பெரியார் பிறந்தநாள் விழாவில் அறிவித்தார். அன்றே பெரியார் எச்சரித்தார்! பறிபோகும் மாநில உரிமைகள் என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பேசியக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பறிக்கப்படும் மாநில உரிமைகளைப் பட்டியலிட்டார். தன்னாட்சிக் குரல் நீதிக்கட்சி ஆட்சிக்காலத்திலேயே தொடங்கிவிட்டது. பெரியார் சுதந்திர நாளை துக்கநாள் – பார்ப்பனிய பனியாக்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்ட நாள் என்றார். தமிழ்நாடு விடுதலையே ஒரே தீர்வு என்றார். அண்ணா தென்னக மாநிலங்களின் கூட்டமைப்பைக் கொண்ட “திராவிட நாடு” கேட்டார். அரசியலுக்காக அதைக் கைவிட்ட போது கோரிக்கை கைவிடப்படுகிறது. ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே நீடிக்கிறது என்றார். இப்போது மாநில உரிமைகளுக்காகத்தான் நாம் போராட வேண்டி இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் அலுவலகங்களில் அதிகாரிகளாக இந்தி பேசும்...

ஒன்றிய அரசுக்கு எதிராகக் கழகம் போர் முழக்கம்

ஒன்றிய அரசுக்கு எதிராகக் கழகம் போர் முழக்கம்

கோவை: மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்! என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற – பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து 12.9‌.2024 அன்று கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் வெங்கட் வரவேற்புரையாற்றினார். கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன், திமுக மாணவரணிப் பொறுப்பாளர் மதிவாணன், மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் மூர்த்தி, பெண்ணிய செயற்பாட்டாளர் லோகநாயகி, மாநகரத் தலைவர் நிர்மல்குமார், CPIML ரெட்ஸ்டார் இனியவன், புரட்சிகர இளைஞர் முன்னணிப் பொறுப்பாளர் மலரவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாக மாவட்ட அமைப்பாளர் சூலூர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். முன்னதாக மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில்...

பெரியாரின் உருக்கமான கட்டுரை (2) விலக நினைக்கிறேன்; விலகுவதால் என்ன இலாபம்?

பெரியாரின் உருக்கமான கட்டுரை (2) விலக நினைக்கிறேன்; விலகுவதால் என்ன இலாபம்?

“ஆரம்பத்திலிருந்து இதுவரை முன்னாற் குறிப்பிட்ட கொள்கைகளில், அது ஒரு சிறிதும் தவறாமல் ஏற்றுக்கொண்டபடி நடந்து வந்திருக்கிறது என்பதையும் மெய்ப்பித்து விட்டோம். ஆகவே, “குடிஅரசு” குறைந்தது ஒரு பதினாயிரம் பிரதிகளாவது அச்சிட்டு வெளியாக வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருந்தாலும் இந்நாலாயிரத்து ஐந்நூறைக் கொண்டு நான் சந்தோஷமடைகிறேனே தவிர, ஒரு சிறிதும் அதிருப்தி அடையவில்லை. அன்றியும், எமது விருப்பத்தை நிறைவேற்ற அநேக நண்பர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். 250 சந்தாதாரர் களை ஏற்படுத்திக் கொடுத்தும் இனியும் இருநூற்றைம்பது சந்தாதாரர்களை ஒரு மாதத்தில் சேர்ப்பதாய் வாக்களித்த சிங்கப்பூர் நண்பர்களுக்கும், மற்றும் 250 சந்தாதாரர்களை எதிர்பார்க்கும் மலேயா நண்பர்களுக்கும் எனது மன மார்ந்த நன்றியைச் செலுத்துகிறேன். தமிழ்நாட்டிலும், ஊர்கள் தோறும் “குடி அரசின்” வளர்ச்சியையும் பரவுதலையும் எம்மைவிட அதிக கவலை கொண்டு எதிர்பார்க்கும் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள், என்பதும் எனக்குத் தெரியும். அவர்கள் “குடி அரசு”க்காக உழைத்து வந்ததற்கும், சந்தாதாரர் களைச் சேர்த்துக் கொடுத்ததற்காகவும்...

திருச்சியில் குடும்ப விழா!

திருச்சியில் குடும்ப விழா!

திருச்சி: மணப்பாறையைச் சேர்ந்த கழகத் தோழர் பாலசுப்பிரமணியம் – சித்ரா இல்ல குடும்ப விழா 08.09.2024 அன்று அவரது நடுப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது‌. இதில் பெரியாரியலாளர் சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் விழா மகிழ்வாக பாலசுப்பிரமணியம் – சித்ரா ஆகியோர், கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.6000/- வளர்ச்சி நிதியாக வழங்கினார்கள். இந்த விழாவில் கழகத் தோழர்கள் மனோகரன், டார்வின் தாசன், குமரேசன், தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 19.09.2024 இதழ்

நல்லாசிரியர் விருது பெற்ற வேலூர் கழகத் தோழர்

நல்லாசிரியர் விருது பெற்ற வேலூர் கழகத் தோழர்

தோழர் ‘தெருவிளக்கு’ கோபிநாத் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவராக தற்போது பணியாற்றிவருகிறார். மேலும் வேலூர் மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் இரவு நேரப் பள்ளிகளை நடத்தி அவை பரவுவதற்கான தொடக்க புள்ளியாகச் செயல்பட்டவர். தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனத்திலிருந்து வெளிவரும் பாடப் புத்தகங்களில் உள்ள ஓவியங்களை வரையும் பணியைச் செய்தவர். பள்ளி மாணவர்களிடையே நாடகங்களைப் பயிற்றுவிக்கும் பயிற்றுநர். கிராமியக் கலைகளில் வித்தகராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 19.09.2024 இதழ்

வினா விடை

வினா விடை

கூட்டணி குறித்து மேலிடம் தான் முடிவு செய்யும். – தமிழிசை அதாவது, தமிழிசை – அண்ணாமலை கூட்டணியா மேடம்? ஆதி கேசவன் காப்பாற்றுவான் என்று உத்திரகாண்ட் சென்றோம். ஆனால் தமிழ்நாடு முதல்வரும், இராணுவமும் தான் எங்களைக் காப்பாற்றினார்கள். – நிலச்சரிவில் இருந்து மீண்ட பக்தர்கள் பேட்டி! ஆதி கேசவன் தான் முதல்வர் உருவில் வந்து காப்பாற்றினார் என்று சொல்லாதவரை மகிழ்ச்சி.. மகா விஷ்ணுவின் முன் ஜென்ம பேச்சு; சென்னை அதிகாரி தஞ்சைக்கு மாற்றம். – செய்தி மகா விஷ்ணு கூறிய பூர்வ ஜென்ம பாவம், அதிகாரியையும் பிடிச்சு ஆட்டுது போல்.. விநாயகர் பூஜை பண்டிகையல்ல; அது தேச பக்தியுடன் தொடர்பு கொண்டது. – – மோடி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தடியடி வாங்கியவன் விநாயகன் தான். கர்நாடக அரசு விநாயகனைக் கைது செய்த போது போலீஸ் வண்டியில் ஏற்றியது இந்துக்களைக் கொந்தளிக்கச் செய்தது. – மோடி அதே இந்துக்கள் தான் விநாயகனை...

தலையங்கம் – இது வேத காலம் அல்ல!

தலையங்கம் – இது வேத காலம் அல்ல!

தி.மு.க.வின் பவள விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பார்ப்பன ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அன்று இராஜாஜி இந்தியைத் திணித்தார். இப்போது இருமொழிக் கொள்கையை நீக்க வேண்டுமென்று என்று சொல்லுகிறார்கள். அதே ஜாதிதான் மறைமுகமாக பல காரியங்களைத் தொடர்ந்து செய்கிறது. அண்மையில் ஒன்றிய அரசு இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி எழுதுவதற்காக குழு ஒன்றை அமைத்துள்ளது. அதில் 17 பேர் இடம்பெற்றுள்ளனர். 3பேர் அரசு அதிகாரிகள், மற்ற 14 பேரும் (பிராமணர்கள்) அதில் ஒருவர் கனடா நாட்டில் வாழும் பிராமணச் சங்கத் தலைவர். வெளிநாட்டிலிருந்து ஆட்களைத் தேடிப்பிடித்திருக்கிறார்கள். ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரீகம் திராவிட நாகரீகம்தான். ஆனால் ஆரிய நாகரீகம் அதாவது சரஸ்வதி நாகரீகம் என்று அந்தக் கமிட்டி கூறுகிறது. அந்த இனத்தின் பகை இன்றும் தொடர்கிறது. அது தொடர்ந்தால் திமுக தன் வீரியத்தைக் காட்டும் என்று துரைமுருகன் பேசியுள்ளார். உளம் திறந்து உண்மைகளை வெளிப்படுத்திய அமைச்சர் துரைமுருகன் அவர்களைப் பாராட்ட...

சேலத்தில் பெரியார் முகமூடியுடன் தோழர்கள் அணிவகுப்பு தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடந்து முடிந்த பெரியார் பிறந்தநாள் விழா!

சேலத்தில் பெரியார் முகமூடியுடன் தோழர்கள் அணிவகுப்பு தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடந்து முடிந்த பெரியார் பிறந்தநாள் விழா!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா பழனியில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பழனியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பழனி ஒன்றியத்துக்கு உட்பட்ட அ.கலையம்புத்தூர், அழகாபுரி, மானூர், புது ஆயக்குடி, பழைய ஆயக்குடி, பச்சளநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் பெயர் பலகையைக் கழகத் தலைவர் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். கழகத் தலைவரை அப்பகுதியைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் மருதமூர்த்தி, மாவட்டச் செயலாளர் மாக்சிம் கார்க்கி, மாவட்ட அமைப்பாளர் ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாச்சிமுத்து, துணை அமைப்பாளர் சங்கர், பழனி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர் பெரியார், ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தலைவர் கபாலி, ஒன்றிய அமைப்பாளர் சக்திவேல், ஆயக்குடி பேரூர் அமைப்பாளர் ஜெயசங்கர், தமிழ்நாடு...

காவல்துறையைக் கண்டித்துப் பொதுக்கூட்டம்

காவல்துறையைக் கண்டித்துப் பொதுக்கூட்டம்

மேட்டூர் நகரக் கழக சார்பில் மேட்டூர் சரகக் காவல்துறையினரின் போக்கைக் கண்டித்துக் கண்டனப் பொதுக்கூட்டம் 04.09.2024 அன்று மேட்டூர் சதுரங்காடியில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு தலைமை வகித்தார். மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. இதில் சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இரா.திருமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மேட்டூர் சரகக் காவல் துறையின் அடாவடிப் போக்கினைக் கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் இருக்கும் காவல் நிலையங்களில் காவல்துறை அதிகாரிகளால் நடைபெறும் விதிமீறல்கள், லஞ்சம், போதை பொருள் விற்பனைக்கு ஆதரவு, எளிய மக்களிடம் மிரட்டி அடித்து பணம் பறித்தல் போன்ற விவரங்களைத் திரட்டி ஆதாரத்துடன் பொதுக்கூட்டத்தில் எடுத்துரைத்தார். மேலும் மேட்டூர் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் முதல் மேட்டூர் சரகச் சாதாரணக் காவலர் வரையில் உள்ளோர் சட்ட விரோதச் செயல்களை மீண்டும்...

தேனி, திண்டுக்கல், திருச்சியிலும் கழகம் ஆர்ப்பாட்டம்!

தேனி, திண்டுக்கல், திருச்சியிலும் கழகம் ஆர்ப்பாட்டம்!

சேலம் : “மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் – கழக இளைஞரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.09.2024 அன்று சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றிமுருகன் வரவேற்புரையாற்றினார். சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் மாவட்ட இளைஞரணித்...

“யாருடைய தயவுக்கோ, சுயநல வாழ்வுக்கோ ‘குடிஅரசு’ இல்லை” பெரியாரின் உருக்கமான கட்டுரை

“யாருடைய தயவுக்கோ, சுயநல வாழ்வுக்கோ ‘குடிஅரசு’ இல்லை” பெரியாரின் உருக்கமான கட்டுரை

சகோதர வாசகர்களே ! நமது “குடி அரசு” ஆரம்பமாகி இரண்டு வருஷம் முடிந்து மூன்றா வது வருஷத்தின் முதல் இதழ் இன்று வெளியாகிறது. “குடி அரசு” ஆரம்ப இதழில் “குடி அரசு” என்று ஒரு தலையங்கமும், ஆறு மாதம் கழிந்து “நமது பத்திரிகை” என்று ஒரு தலையங்கமும் ஒரு வருஷம் முடிந்து இரண்டாவது வருஷ ஆரம்பத்தில் “நமது பத்திரிகை” என்று ஒரு தலையங்கமும் எழுதி இருக்கிறோம். இப்போது இரண்டு வருஷம் முடிந்து மூன்றாவது வருஷ ஆரம்ப முதல் இதழிலும் அவ்வாறே “நமது பத்திரிகை” என்று தலையங்கமிட்டு ஒரு குறிப்பு எழுத ஆசைப்படுகிறோம். நமது நாட்டு மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டாக்கக் “குடி அரசு” என்னும் ஒரு பத்திரிகை யை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதல் முதல் நானும் எனது நண்பர் ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளையும் 1922ல் கோயமுத்தூர் ஜெயிலில் சிறைவாசம் செய்யும் போதே நினைத்தோம். அதுபோலவே வெளியில் வந்த கொஞ்ச...

வினா விடை

வினா விடை

• போன ஜென்மப் பாவங்களுக்கு கடவுள் இந்த ஜென்மத்தில் தண்டனை தருகிறார். – மஹா விஷ்ணு அதனால் தான் மஹா விஷ்ணு இப்போது போலீஸ் விசாரணையில் இருக்கிறார். • என் கனவில் சித்தர்கள் சொன்னதைத்தான் நான் பேசினேன். – மகா விஷ்ணு வாக்குமூலம்! சித்தர்கள் கடவுள், ஆன்மாவை மறுப்பவர்கள் என்பது கூட இந்த அவதாரத்துக்குத் தெரியாது போலும். • நித்தியானந்தாவைப் போல பிரபலமாக ஆசைப்பட்டேன். – மஹா விஷ்ணு சித்தர்கள் தான் இந்த ஆலோசனையையும் கூறினார்களா? • ஆன்மீகவாதியைக் கைது செய்தது தவறு! – ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மோடிக்குச் சிபாரிசு செய்து பாரத ரத்னா வாங்கிக் கொடுத்துருங்க! பெரியார் முழக்கம் 12.09.2024 இதழ்

தலையங்கம் – எது ஆன்மீகம்?

தலையங்கம் – எது ஆன்மீகம்?

“பூர்வ ஜென்மப் பாவம்தான் இப்போது ஊனமாகப் பிறப்பதற்குக் காரணம். பாவங்களுக்கு நரகமும் புண்ணியங்களுக்கு மோட்சமும் தான் கிடைக்கும்” என்று பேசுவது தான் ஆன்மீகமா? பள்ளி மாணவர்களிடையே இந்தக் கருத்தை விதைக்கலாமா? சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் கல்வி அதிகாரிகளின் ஒப்புதலோடு மகா விஷ்ணு என்ற ஆன்மீகவாதி இப்படிப் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. செய்தி வெளிவந்தவுடனேயே தமிழ்நாட்டில் கட்சிகளைக் கடந்து வந்த எதிர்ப்புகளை வரவேற்க வேண்டும். இதனால் தான் தமிழ்நாட்டை “பெரியார் மண்” என்று கூறுகிறோம். இந்தப் பேட்டி ஆன்மீகம் தான் என்ற குரல் தமிழ்நாடு பாஜகவினரிடமிருந்து மட்டுமே கேட்கிறது. உடல் ஊனம் பூர்வ ஜென்மப் பாவமே என்ற வாதத்தை அப்படியே நீட்சியாக்கித் தீண்டாமை எனும் சமூக ஊனம். பூர்வ ஜென்மப் பயன் என்று பேசினாலும் வியப்பதற்கு இல்லை. எந்த முதலீடும் இல்லாமல் விரக்தி, குழப்பம் மற்றும் மூடநம்பிக்கைகளை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஆன்மீக வணிகம் பல கோடிகளில் புரள்கிறது. ஆன்மீகம் என்ற...

புதிய கல்விக்கொள்கை – பாஜக பதில் சொல்லுமா? – ர.பிரகாசு

புதிய கல்விக்கொள்கை – பாஜக பதில் சொல்லுமா? – ர.பிரகாசு

கல்வித் தரத்தில் இந்தியாவில் உயர்ந்து நிற்கும் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய 5 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி தர மறுப்பதாக தி இந்து பத்திரிகையில் செப்டம்பர் 9ஆம் தேதி ஆதாரத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. அந்த செய்தியை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதிய கல்விக்கொள்கையை ஏற்க மறுப்பதால் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் தண்டனை. ஒன்றிய பாஜக அரசு தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை ஊக்குவிப்பது இப்படித்தானா? இதை முடிவு செய்ய நம் தேசம் மற்றும் நம் மக்களின் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்” என்று காட்டமாகப் பதிவிட்டிருந்தார். ஒன்றிய அரசு நியாயமாக நடந்துகொள்வதென்றால் நிலுவை நிதியை விடுவித்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானோ, முதலமைச்சரின் பதிவைப் பகிர்ந்து சில அபத்தமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்ப தென்றால், 1. தமிழ் உள்ளிட்ட தாய்மொழிக் கல்வியை எதிர்க்கிறீர்களா?...

சேலத்தில் தலைவர், சென்னையில் பொதுச்செயலாளர் பங்கேற்பு கல்வி உரிமைகளைப் பறிக்கும் பாஜகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலத்தில் தலைவர், சென்னையில் பொதுச்செயலாளர் பங்கேற்பு கல்வி உரிமைகளைப் பறிக்கும் பாஜகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம் : “மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் – கழக இளைஞரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.09.2024 அன்று சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றிமுருகன் வரவேற்புரையாற்றினார். சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் மாவட்ட இளைஞரணித்...

ரூ.10,000 நன்கொடை

ரூ.10,000 நன்கொடை

திருப்பூர் மாநகரக் கழகச் செயலாளர் மாதவன், தனது புது இல்லத் திறப்பின் மகிழ்வாக புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.10,000/-யைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் 05.09.2024 இதழ்

கோவை: பெரியார் பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாட முடிவு

கோவை: பெரியார் பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாட முடிவு

கோவை: கோவை மாவட்டக் கழக ஆலோசனைக் கூட்டம் 01.09.2024 அன்று கோவை தமிழ்ப்புலிகள் கட்சி அலுவலகத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைவர் பெரியாரின் 146ஆவது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் காந்திபுரம் பெரியார் சிலை, நியூ சித்தாபுதூர், பீளமேடு, உப்பிலிபாளையம் காந்தி நகர், உக்கடம், கவுண்டம்பாளையம், சிவானந்தகாலனி உள்ளிட்ட பகுதிக் கழகங்களில் பெரியார் பிறந்தநாள் விழா – சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. கோவையின் புறநகர் பகுதிகளான அன்னூர், காரமடை, சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளிலும் பெரியார் பிறந்தநாளை வெகு சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதில் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 05.09.2024 இதழ்