சங்கராச்சாரிக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்!

கோவை: காஞ்சி விஜயேந்திர சங்கராச்சாரி அரசியல் சட்டத்திற்கு எதிராக இன ஒதுக்கல் பேசியதைக் கண்டித்து கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு, கழகத்தின் கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் இரவிக்குமார், தமிழ்ப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் இளவேனில், புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், Cpi ml ரெட் ஸ்டார் இனியவன், மக்கள் அதிகாரம் கணேஷ், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிக்குமார் மற்றும் தோழமை அமைப்பினரும், திராவிடர் விடுதலைக் கழக மாநகரச் செயலாளர் வெங்கட், மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாதவன், சதீஷ், ஸ்டாலின் ராஜா, மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன், கௌதம், கதிரவன் கலந்து கொண்டனர்.
நாமக்கல்: குமாரபாளையம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கியது.
நகரச் செயலாளர் வடிவேலு அவர்கள் தலைமை ஏற்க மு.கேப்டன் அண்ணாதுரை அவர்கள் முன்னிலையில் கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் என் கார்த்திகேயன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏ.ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சண்முகம், சக்திவேல் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்துவம் குழு செயலாளர் பகலவன் அவர்களும் சிறப்புரையாற்றினர். வெண்ணந்தூர், காளிப்பட்டி, ராசிபுரம், பள்ளிபாளையம், குமாரபாளையம் தோழர்களும் திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.குமார் அவர்களும், திராவிடர் கழக நகர தலைவர் சரவணன் அவர்களும் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாக தோழர் மோகன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். குமாரபாளையம் தோழர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கெடுத்துக் கொண்டனர்.
ஈரோடு வடக்கு: மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏப்ரல் 21 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் கோபி பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் செல்வகுமார் தலைமையில் செகநாதன், கோபி ஒன்றிய தலைவர் கருப்பணன், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.மாவட்ட அமைப்பாளர் நிவாஸ் வரவேற்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழர் உரிமைக் கழகம் பொறுப்பாளர் கந்தசாமி, நாத்திக சோதி- மாவட்ட தலைவர், வேணுகோபால்- மாவட்ட பரப்புரைச் செயலாளர், பொன்னுசாமி – ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர், ரமேசு – புரட்சிகர இளைஞர் முன்னணி பொறுப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் குணசேகரன், திராவிடர் தளத்தின் பொறுப்பாளர் பெருந்துறை செந்தில்குமார், கழகத்தின் நம்பியூர் ஒன்றிய செயலாளர் ரமேசு ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாகக் கழகத்தின் மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார். கோபி ஒன்றிய செயலாளர் சூரியப்பிரகாஷ் அவர்கள் வந்திருந்த அனைத்து தோழர்களுக்கும் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்ட நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தோழர்கள் மயில்சாமி, சிதம்பரம், ரகுநாதன் யாழ் திலீபன், அருளானந்தம், கலைச்செல்வன், பழனிச்சாமி, கிருஷ்ணமூர்த்தி, தமிழரசன், ஈஸ்வரமூர்த்தி, நடராஜ், திராவிடர் தளத்தின் சார்பில் விக்னேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குரைஸ் பாத்திமா, ஷபியா, நூர்ஜகான் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் சேகர், சண்முகம், புகழேந்தி, சோபியா, சண்முகமுடிவு, யாழினி , ஆதித்தமிழர் பேரவை சார்பில் நஞ்சப்பன், பசுபதி, பாலசுப்பிரமணி, முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஈரோடு தெற்கு: மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக இன ஒதுக்கல் பேசிய சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 21.04.2025 காலை 10 மணிக்கு சூரம்பட்டி நான்கு சாலையில், மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கராச்சாரிக்கு எதிராக தோழர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெயபிரகாஷ் (மாவட்டச் செயலாளர். பு.இ.மு), பொன். சுந்தரம் நிறுவனர்(தலித் விடுதலைக் கட்சி), சக்திவேந்தன் பொதுச்செயலாளர் (திராவிடர் எழுச்சிக் கழகம்), சாம்ராட்(திராவிடர் எழுச்சிக் கழகம்), வடிவேல் ராமன் (சமூகநீதி கட்சி), இரா. தமிழன்பன் (நிறுவனர், விடுதலை வேங்கைகள் கட்சி), கனியமுதன் (ஆதித்தமிழர் பேரவை) பெ.கிருஷ்ணமூர்த்தி, (மாவட்ட அமைப்பாளர் திவிக ஈரோடு தெற்கு), யாழ். எழிலன் (மாவட்டச் செயலாளர், திவிக ஈரோடு தெற்கு) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி சிறப்புரையாற்றினார். மாநகரச் செயலாளர் மரவபாளையம் குமார் நன்றியுரை வழங்கினார். C.M நகர் பிரபு, கோபிநாத், விஜயரத்தினம், பவித்ரா, நல்லதம்பி, விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேலம்: மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 21.04.2025 திங்கள் மாலை 5.00 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் தோழர் சக்திவேல் தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கவியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நோக்க உரையாற்றிய தோழர்கள்: கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வி.சி.க வடக்கு மாவட்ட செயலாளர் காஜாமைதீன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் ஏ.டி.ஆர்.சந்திரன், தமிழ்ப்புலிகள் கட்சி மண்டல செயலாளர் உதய பிரகாஷ், த.பெ.தி.க. சேலம் மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாரியப்பன் த.ம.மு, செல்வகுமார் CPML மக்கள் விடுதலை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் தினேஷ், வின்சென்ட் புரட்சிகர இளைஞர் முன்னணி, கண்ணன் உழைப்போர் இயக்கம், சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் அன்பு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினர். இறுதியாக சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ் நன்றி ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகரம், இளம்பிள்ளை, மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி, வனவாசி, ஆத்தூர், ஏற்காடு, சிந்தாமணியூர், காவலாண்டியூர், கொங்கனாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து கழகத் தோழர்களும் தோழமை இயக்கத் தோழர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட தி.வி.க. சார்பில் இன ஒதுக்கல் பேசும் காஞ்சி சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி 21.04.25 அன்று மாலை 5.00 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையில், மாவட்டத் தலைவர் முகில் இராசு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.வி.க. கார்த்திக் வரவேற்ப்புரையாற்றினார். மாநகர அமைப்பாளர் முத்து கண்டன முழக்கங்களை எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து கழகத்தின் முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன் தொடக்க உரையாற்றினார்.
தொடர்ந்து கண்டன உரையாற்றியவர்கள்: மாநகர் மாவட்டச் செயலாளர் மதிமுக நாகராஜ், – இந்திய பொதுவுடைமைக் கட்சி CPI மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில், ஆதித் தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச்செயலாளர் விடுதலைச் செல்வன், விசிக மாவட்ட துணைச் செயலாளர் துரை வளவன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் கதிரவன், நவீன மனிதர்கள் குழுவின் தலைவர் பாரதி சுப்பராயன், கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாவட்டத் தலைவர் முகில்ராசு, கழகப் பொருளாளரர் துரைசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
கழகத் தோழர்கள் தனபால் மாநகரத் தலைவர் – மாரிமுத்து மாநகர துணைத் தலைவர் – மாதவன் மாநகரச் செயலாளர் – இராமசாமி தெற்கு பகுதிச் செயலாளர் – முத்து மாநகர அமைப்பாளர் – கணக்கன் மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் – தாரை செல்வராசு, தாராபுரம் அமைப்பாளர் – முத்துலட்சுமி, சிரிஜா, இரவி, அம்மாபாளையம் மோகன், இனியன் தமிழ்நாடு மாணவர் கழகம் பிரபன்யா, அனந்து ராஜ் மற்றும் உளவியல் ஆய்வாளர் தமிழ் அமுதன், திருவள்ளுவர் பேரவை அருண் லெனின் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். நிறைவாக மாநகர அமைப்பாளர் சரஸ்வதி நன்றி கூறினார்.

You may also like...