ஈரோடு வடக்கில் கலந்துரையாடல் கூட்டம்!

மாவட்ட தலைமை அலுவலகத்தில் 2.3.2025 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் தோழர். நிவாஸ் தலைமை வகிக்க மாநில வெளியிட்டுச் செயலாளர் தோழர். இராம. இளங்கோவன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் 1: கடந்த 22 2.2025 கோபி ஒன்றிய கழகத்தின் சார்பாக நடைபெற்ற ‘பெரியார் எனும் பெரும் நெருப்பு’ கருத்தரங்கு வரவு செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டு தோழர்கள் வசம் கணக்கு ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வை சிறப்பாக நடத்திய தோழர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

தீர்மானம் 2: வருகின்ற 16 /3/2025 அன்று தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பரப்புரைப பயணம் தொடங்க இருக்கிறது. அதில் ஒரு பகுதியாக ஈரோட்டில் தொடங்க இருக்கும் பரப்புரைப் பயணத்தில் மாவட்டக் கழகத்தின் சார்பாக கலந்து கொள்வது எனவும், பயணக் குழுவோடு ஈரோடு வடக்கு மாவட்ட கழகத் தோழர்கள் இணைந்து பயணிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 3: வருகின்ற 22.03.2025 அன்று மயிலாடுதுறையில் நடைபெற உள்ள பரப்பரைப் பயண நிறைவுவிழா பொதுக்கூட்டத்தில் மாவட்டக் கழகத்தின் சார்பில் வாகன ஏற்பாடு செய்து கலந்து கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 4: வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து வாரந்தோறும் பரப்புரைப் பயணம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 13032025இதழ்

You may also like...