கழகம் தொடங்கிய ஆக-12-ல் தோழர்கள் கொடியேற்று விழா
சென்னை: கழகம் 14-ம் ஆண்டு துவக்க விழா சென்னை மாவட்டக் கழகம் சார்பில் இராயப்பேட்டை பத்ரி நாராயணன் நினைவு படிப்பகத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கொடியோற்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
கழகத் தோழர்கள் தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்),வேழவேந்தன்(மாவட்டத் தலைவர்), இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), ம.கி எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), ப.அருண்( இளைஞரணி அமைப்பாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), தட்சணாமூர்த்தி (வடசென்னை மாவட்ட அமைப்பாளர்), கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), த.நா சூர்யா (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்) மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் தோழி, குறளரசி மற்றும் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் 12.08.2025 மாலை 5.00 மணியளவில் கோனூர் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில் கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்), கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), ராஜேந்திரன் (நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர்), சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), பன்னீர்செல்வம் (வனவாசி நகர பொருளாளர்), மேட்டூர் அம்ஜத்கான், தேன்மொழி, அருள்மொழி, கீதா, பிரபாகரன் (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்), சிவ சண்முகம் (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), திவாகர் (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), நாகராஜ் (தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ), அறிவுச் செல்வன் (கொளத்தூர் நகரச் செயலாளர்), ஆர்.எஸ் சௌந்தர், ஜெகதீஸ், நங்கவள்ளி கி.பிரபாகரன், பேரறிவாளன், தமிழருவி, நிலவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு: மாவட்டக் கழகத்தின் சார்பில் 12.08.2025 அன்று குருவரெட்டியரில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காவை ஈஸ்வரன் (தலைமைக் குழு உறுப்பினர்), குருவை நாத்திக ஜோதி (ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர்), காவை விஜய் குமார் (கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்), குமரேசன், ராஜா, ஆசிரியர் செல்வேந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
