“ஜாதி நமக்கு அவமானம்” ஈரோடு, கோவையில் தீவிர பரப்புரை!

ஈரோடு: வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கடந்த 09.11.2025 ஞாயிறு மாலை பவானி அந்தியூர் பிரிவு பகுதியில் ‘ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்!’ தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வினோத் தலைமையேற்க, பரப்புரைச் செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகிக்க செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, விசிகவின் ஆற்றல், தலைமைக் கழகப் பேச்சாளர் .கா.சு வேலுச்சாமி, நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மமகவின் மாநில தொண்டரணி செயலாளர் முஹம்மது ஆகியோர் கருத்துரையாற்றினர்.

இராம. இளங்கோவன் கழக வெளியீட்டுச் செயலாளர், பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி நிறைவுரையாற்றினார். பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பெரியார் குறித்த பாடலை பாட பழனிச்சாமி நன்றியுரை ஆற்றினார்.

நிகழ்வில் பெரியார், அம்பேத்கர் மற்றும் கழகத்தின் செயல்பாடுகள், திராவிட மாடல் அரசின் சாதனைகள், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தோழர்கள் ராமன், மயில்சாமி, நடராஜன், ரமேசு, மூர்த்தி, சித்தா பழனிச்சாமி, கலைச்செல்வன், நிவாஸ் ,ஜெகநாதன், அருளானந்தம், துரை, நாமக்கல் தோழர் தண்டபாணி, ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் தோழர்களுக்கு இரவு உணவு பவானி ஒன்றிய கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

கோவை: சூலூர் ஒன்றியக் கழகம் சார்பில் ” மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” தெருமுனைக் கூட்டம் 09.11.2025 – சூலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு மாலை 04.30 முதல் 06.00 மணியளவில் நடைபெற்றது. கண்ணம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் 06.30 முதல் 08.00மணி வரையில் மக்கள் ஆதரவுடன் நடைபெற்றது.

தெருமுனைக் கூட்டங்களுக்கு கழக தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். தோழர்கள் பொங்கலூர் கார்த்தி, ரங்கநாதபுரம் நவீந்தரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன், தலைமைக் குழு உறுப்பினர் நிர்மல் குமார், கோவை மாநகரச் செயலாளர் வெங்கட், திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து, கோவை தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் நவீன் குமார், கதிரவன், சூலூர் பேரூராட்சி 18 வார்டு திமுக கவுன்சிலர் பசுமை விஜயகுமார், திமுக சூலூர் நகரச் செயலாளர் உரம் கௌதமன், சூலூர் பாவேந்தர் பேரவை ஆசிரியர் வேலு மயில் ஆகியோர் உரையாற்றினர்.

கோவை மாவட்ட அமைப்பாளர் சூலூர் தமிழ்ச்செல்வி நன்றி உரையாற்றினர். முருகராசு தி.இ.த.பே, தண்டபாணி பாவேந்தர் பேரவை,நாகலட்சுமி, திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், கோவை மோகன கிருஷ்ணன் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 20112025

You may also like...