காமராசர் பிறந்தநாள் விழா; சிலைகளுக்கு மரியாதை

திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பாக 15-07-2025 மாலை 4 மணி அளவில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும்
மாநகரச் செயலாளர் மாதவன் முன்னிலையில்
அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கல்விக் கண் திறந்த காமராசர் அவர்களின் 123 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கல்வி உரிமைப் பாதுகாப்புப் பரப்புரைப் பயணம் அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகிலும், அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகிலும் காமராஜர் செய்த அரும்பணிகள் குறித்து மக்களிடத்தில் எடுத்துரைக்கும் விதமாக தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது.
நிகழ்வில் கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டத்தலைவர் முகில் ராசு, ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளர் விடுதலை செல்வன்,மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, சரஸ்வதி,தெற்குப் பகுதி அமைப்பாளர் ராமசாமி, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன்,மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, மற்றும் கழகத் தோழர்கள் ராஜசிங்கம்,ஸ் ரீஜா, ஆத்துப்பாளையம் மதன், முத்து லட்சுமி, இனியவன், கார்த்தி, ரமேஷ், வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டக் கழகம் சார்பில் கல்வி வள்ளல் காமராசரின்123 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமையில் திருமுருகன்,சுரேஷ்,பவித்ரா ஆகியோர் கல்வி வள்ளல் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் தெருமுனைக் கூட்டம் 15.07.25 அன்று சிவானந்த காலனி பேருந்து நிறுத்தம் அருகில் திவிக மாநகர செயலாளர் வெங்கட் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாநகரத் தலைவர் நிர்மல்குமார் காமராசரின் ஆட்சியின் சாதனைகள், கல்வி திட்டங்கள் குறித்து உரையாற்றினர்.
விசிக செய்தி தொடர்பாளர் கோவை ராசா, இரத்தினபுரி திமுக முனீர் அகமது, தோழர்கள் சூலூர் கார்த்தி, இரத்தினபுரி பொறுப்பாளர் சதீஸ், ஸ்டாலின்ராஜா, மாதவன், ஹரிஹரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
தமிழ்நாடு மாணவர் கழக தோழர் கதிரவன் நன்றியுரை ஆற்றினார்.

சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளையொட்டி 15.07.2025 காலை 10.00 மணியளவில் தாரமங்கலம் உழவர் சந்தைக்கு அருகில் உள்ள காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கலந்து கொண்ட தோழர்கள்:
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் அன்பு, குடந்தை பாலன், பவளத்தானூர் தனசேகரன், வனவாசி நகர பொருளாளர் பன்னீர்செல்வம், வனவாசி கதிர்வேல், கே.ஆர்.தோப்பூர் கண்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், இளம்பிள்ளை குட்டி, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கவியரசு, தமிழருவி, பேரறிவாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை:மாவட்டக் கழகத்தின் சார்பில் கல்வி வள்ளல் காமராசர் 123வது பிறந்தநாளையொட்டி மாவட்ட கழகத்தின் சார்பில் 15.07.25 அன்று காலை 10:30 மணிக்கு, சிம்சன் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.
கலந்து கொண்ட தோழர்கள்:
தலைமை நிலைச் செயலாளர் தபசி குமரன், தலைமை குழு உறுப்பினர்அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதிதென் சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன்,வடசென்னை மாவட்ட தலைவர் சேத்துப்பட்டு இராஜேந்திரன் வடசென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு மற்றும் மாவட்டக் கழகத் தோழர்கள் கலந்துக் கொண்டனர்.
பெரியார்முழக்கம்இதழ்24072025

You may also like...