சிவகிரியில் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்!

ஈரோடு தெற்கு மாவட்ட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சிவகிரி பேரூராட்சி, அண்ணா கலையரங்கத்தில் 11.10..2025 சனிக்கிழமை அன்று மாலை 5:30 மணி அளவில் கழக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் சி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

கழக மாநில அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் எழிலன், முன்னாள் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர்செ. சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகச் செயல்பாட்டாளர் ஈரோடு நல்லதம்பி வரவேற்புரையாற்றினார்.

சிவகிரி பேரூராட்சித் தலைவர் பிரதீபா கோபிநாத், சிவகிரி தி. மு. க 10 வார்டு செயலாளர் தண்டாம்பாளையம் தா. கு. அன்பரசு, சமூக நீதி மக்கள் கட்சித் தலைவர் வடிவேல்ராமன், ஆதித்தமிழர் பேரவை மாநில நிதிச் செயலாளர் பெருமாவளவன், மதிமுக ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் மு. கோபால், திகஒன்றிய பொறுப்பாளர் சிவகிரி சண்முகம், திராவிடர் எழுச்சிப் பேரவைத் தலைவர் சக்திவேந்தன், தமிழ்ப் புலிகள் கட்சி ஈரோடு மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, சிவகிரி அன்பெழில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

புதிய திராவிட கழக நிறுவனத் தலைவர் ராஜ்கவுண்டர் அவர்கள் உரையாற்றும்போது ராஜ் கவுண்டர் என்ற என் பெயருக்கு பின்னால் இருக்கும் கவுண்டர் என்ற ஜாதி பெயரை வருங்காலங்களில் எடுத்து விடுகிறேன் என்று கூறி உரையாற்றினார்.

திமுக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஈரோடு வீரமணி”பெண்கள் போற்றும் திராவிட மாடல்” என்ற தலைப்பில் பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் பெண்களுக்காக செய்த சமூகநீதி திட்டங்கள் பற்றியும், திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்திற்காக செய்து கொண்டிருக்கும் நலத்திட்ட நன்மைகளையும் பற்றி கருத்துரையாற்றினார்.
திமுக ஈரோடு மாவட்ட இலக்கிய அணி தலைவர் கு. இளஞ்செழியன் மூடத்தனத்தை அழித்தொழித்து இளைஞர்கள் சுயமரியாதையோடு வாழ்ந்து சமத்துவம், சமூகநீதிக்காக போராட முன் வரவேண்டும் என்றும், இளைஞர்கள் பகுத்தறிவு சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்றுக் கூறி கருத்துரையாற்றினார்.

U2 BRUTUS மைனர் “ஆரிய மாயை” என்ற தலைப்பில் பார்ப்பன ஆதிக்கம், பார்ப்பன சுரண்டல் ஆகிய நம் மக்களுக்கு எதிராக இருக்கும் ஆரிய மாயயை தோலுரித்து நகைச்சுவையாக பல கருத்துக்களை முன் வைத்து கருத்துரையாற்றினார்.

பேரலை இந்திரக்குமார் தேரடி “இலட்சிய வரலாறு” என்ற தலைப்பில் நம் இழிவு நீக்கம், நம் முன்னேற்றத் தடைநீக்கம், ஆரிய மூடநம்பிக்கையில் இருந்து விடுபடுதல், பகுத்தறிவாளர்களாக, மானமுள்ள சமுதாயமாக்குவது, நமக்காக நம் வரலாற்று தலைவர்கள் உருவாக்கியதைப் போல் இனி வரும் காலங்களில் நாம் இலட்சிய வரலாற்றை உருவாக்க வேண்டும் என்று கூறி கருத்துரையாற்றினார்.

நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பற்றியும், நம்முடைய தொடக்க கால தலைவர்கள், நமக்கு முன்னோடியாக இருந்து பணியாற்றியவர்கள் என்ன உற்சாகத்தோடும், உறுதியாக இருந்தார்களோ அதை நாம் கொஞ்சமாவது முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் அல்லது போராட்டம், குரல் கொடுப்பவர்களுடன் போரட்ட க் களத்தில் நிற்க வேண்டும் அல்லது அந்த போராட்டத்தை பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என வேண்டுகோளாக முன்வைத்து சிறப்புறையாற்றினார்.

ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் எழிலன் நன்றியுரையாற்றினார். கழகத் தோழர்கள், ஆதித் தமிழர் பேரவையினர், தமிழ்ப் புலிகள் கட்சியினர், திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You may also like...