ஜாதி – குடி போதைக்கு எதிரானப் பரப்புரைக்குத் தயாராகும் கழகம்! மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் பேரெழுச்சி!

தர்மபுரி: தர்மபுரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.08.2024 அன்று தர்மபுரி B.அக்ரகாரத்தில் நடைபெற்றது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கழகத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது.
நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தர்மபுரி மாவட்டத் தலைவராக வெ.வேணுகோபால், தர்மபுரி மாவட்டச் செயலாளராக கு.நாகராஜ், மாவட்ட அமைப்பாளராக மா.பரமசிவம், பென்னாகரம் ஒன்றிய அமைப்பாளராக இரா.சரவணன் (B.அக்ரஹாரம்), காரிமங்கலம் ஒன்றிய அமைப்பாளராக கோ.செந்தில்குமார், நல்லம்பள்ளி ஒன்றிய அமைப்பாளராக மு.இராமதாஸ், தர்மபுரி ஒன்றிய அமைப்பாளராக பி.முத்துலட்சுமி, அரூர் ஒன்றிய அமைப்பாளராக பெருமாள், ஏரியூர் ஒன்றிய அமைப்பாளராக மா.அசோக்குமார், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளராக சா.வையாபுரி ஆகியோரை நியமனம் செய்தார்.
சேலம் கிழக்கு: சேலம் கிழக்கு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.08.2024 அன்று மாலை 6 மணியளவில் கருப்பூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.
கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கிய இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் இயக்க வளர்ச்சி மற்றும் கழகத்தின் அடுத்த கட்ட செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி, சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர்கள் பெருமாள், முத்துமாணிக்கம், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வெற்றிமுருகன், மாவட்ட இளைஞரணித் தலைவர் தங்கதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தேவபிரகாஷ், மாநகரச் செயலாளர் ஆனந்தி, மாநகர அமைப்பாளர்கள் தேவராஜ், ஜங்ஷன் பாலு, இளம்பிள்ளை ஒன்றிய பொறுப்பாளர்கள், மற்றும் தோழர்கள், ஆத்தூர் பகுதி பொறுப்பாளர்கள் கழக பரப்புரை சுற்றுப்பயணத்தில் பேசப்பட வேண்டிய செய்திகளும், வலியுறுத்தப்பட வேண்டிய கோரிக்கைகளும், பரப்புரைச் சுற்றுப்பயணத்தின் தலைப்புகளையும் குறித்து தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பேசுகையில்.. இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் கலாச்சாரம் வேகமாகப் பரவி வரும் சூழலில் அதற்கு எதிரான பரப்புரைகளைக் கழகத் தோழர்கள் திவீரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கான தனிச்சட்டம் இயற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் குறித்து நீண்ட விளக்கம் கொடுத்தார், அரசு அலுவலகங்களில் உள்ள மதச் சார்ந்த குறியீடுகளை நீக்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பள்ளிக் குழந்தைகளிடையே பெரியார் இயக்க வரலாற்றையும் போதைக்கு எதிரான விழிப்புணர்வையும் கொண்டு சேர்க்கும் திட்டங்களைக் குறித்தும் விவாதித்தார் சேலம் மாவட்டத்திற்கு என வண்டி வாங்குவதைக் குறித்து மாவட்டத் தோழர்கள் ஆலோசித்து வண்டி வாங்கிக் கொள்ளவும் எனவும் கழகத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
இதில் மாவட்ட – பகுதிக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக செயல்வீரர்கள் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இறுதியாக மாநகர அமைப்பாளர் தேவராஜ் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது.
சேலம் மேற்கு: சேலம் மேற்கு மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 08.08.2024 அன்று காலை 10 மணியளவில் உக்கம்பருத்திக்காடு பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.
கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கிய இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் இயக்க வளர்ச்சி மற்றும் கழகத்தின் அடுத்த கட்ட செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம், காவை ஈசுவரன், சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் ஆகியோர் தங்களது கள அனுபவங்களையும், எதிர்காலப் பணிகள் குறித்தும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில், இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் கலாச்சாரம் வேகமாகப் பரவி வரும் சூழலில் அதற்கு எதிரான பரப்புரைகளைக் கழகத் தோழர்கள் திவீரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் எனவும், தோழர்களிடையே சந்திப்பு என்பது வழக்கமாக்கபட வேண்டும் எனவும் கழகத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
இதில் மாவட்ட – பகுதிக் கழக நிர்வாகிகள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நிறைவாகக் கொளத்தூர் நகரத் தலைவர் ராமமூர்த்தி நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது.
ஈரோடு வடக்கு: ஈரோடு வடக்கு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 08.08.2024 அன்று 05.00 மணியளவில் சத்தியமங்கலம் P.V விடுதி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், வெளியீட்டுச் செயலாளர் ராம.இளங்கோவன், தலைமைக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தோழர்கள் திரளாகப் பங்கேற்று கழகத்தின் எதிர்காலச் செயல் திட்டங்கள் குறித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இதில் கோபியில் கடந்த 20.07.2024 அன்று மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பகுத்தறிவாளர் திரு.வி.பி.சண்முகசுந்தரம் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பிரபாகரன் – காயத்ரி இணையர்களின் குழந்தைக்குக் கழகத் தலைவர் அமுதன் எனப் பெயர் சூட்டினார்.
பின்னர் கழகத் தோழர் நடராசன் தன் இறப்புக்கு பின் எந்த விதமான சடங்குகளும் தனது உடலுக்கு செய்யக்கூடாது என்று தன் சுய கையொப்பமிட்ட மரணசாசனம் சான்றிதழைக் கழகத் தலைவரிடம் பெற்றுக்கொண்டார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கழகத் தலைவர் கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள் பரப்புரை வடிவங்கள், பரப்புரையில் எடுத்துச் செல்ல வேண்டிய செய்திகள் ஆகியவை குறித்து விரிவாகப் பேசினார்.
நிறைவாக மாவட்டத் தலைவராக நாத்திக ஜோதி, மாவட்டச் செயலாளராக செல்வகுமார், மாவட்ட அமைப்பாளராக நிவாஸ், மாவட்ட இளைஞரணித் தலைவராக செல்வன், மாவட்ட இளைஞரணிச் செயலாளராக அறிவுமதி, மாவட்ட பரப்புரைச் செயலாளராக வேணுகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
கோபி ஒன்றிய அமைப்பாளராக ஜெகநாதன், நம்பியூர் ஒன்றிய அமைப்பாளராக ரமேஷ், சக்தி – சிதம்பரம், பவானி – வினோத், அம்மாபேட்டை – வேல்முருகன், அந்தியூர் – சென்னியப்பன், TN பாளையம் – கருப்பண்ணன், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்டத் தலைவர் – முத்துச்சாமி, மாவட்டச் செயலாளராக வீரா கார்த்திக், மாவட்ட அமைப்பாளராக சுந்தரம் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு மாணவர் கழகத்திற்கு தமிழரசன், வழக்கறிஞர்கள் பிரிவுக்கு ஜெகதீசன், மாவட்ட இணையதளப் பொறுப்பாளராக இராவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெரியார் முழக்கம் 15.08.2024 இதழ்

You may also like...